எதிர்பார்த்தது போன்றே காதலியை பிரிந்த நடிகர்: 'அந்த' நடிகை தான் காரணம் என்னும் நெட்டிசன்ஸ்
நியூயார்க்: எ ஸ்டார் இஸ் பார்ன் படத்தை இயக்கிய பிராட்லி கூப்பரும், அவரின் காதலி ஐரினா ஷேக்கும் பிரிந்துவிட்டனர்.
ஹாலிவுட் நடிகரும், இயக்குநருமான பிராட்லி கூப்பரும்(43), மாடல் அழகியான ஐரினா ஷேக்கும்(33) கடந்த 2015ம் ஆண்டு முதல் காதலித்து வந்தனர். கடந்த 2017ம் ஆண்டு ஐரினா பெண் குழந்தை ஒன்றை பெற்றெடுத்தார். அந்த குழந்தைக்கு லீ டீ ஷேன் ஷெய்க் கூப்பர் என்று பெயர் வைத்தனர்.
இந்நிலையில் கடந்த சில மாதங்களாக கூப்பர் மற்றும் ஐரினா இடையே பிரச்சனையாக இருந்துள்ளது. இருப்பினும் 2 வயது மகளுக்காக அவர்கள் தங்கள் பிரச்சனைகளை பேசித் தீர்க்க முயன்றுள்ளனர். ஆனால் ஒன்றும் நடக்காததால் இருவரும் பிரிந்துவிட்டனர்.
நெருக்கம்
முன்னதாக கடந்த பிப்ரவரி மாதம் நடந்த ஆஸ்கர் விருது விழாவில் பிராட்லி கூப்பரும், பாடகியும், நடிகையுமான லேடி காகாவும் சேர்ந்து மேடையில் பாடல் பாடினார்கள். அப்பொழுது அவர்களுக்கு இடையேயான நெருக்கத்தை பார்த்தவர்கள் இது காதல் போன்று உள்ளது என்றார்கள். மேலும் ஆஸ்கர் விருது விழா நடந்த அன்று சமூக வலைதளங்களில் பிராட்லி கூப்பர், லேடி காகா இடையேயான நெருக்கம் பற்றித் தான் அதிகம் பேசப்பட்டது.
லேடி காகா
ஆஸ்கர் விழா முடிந்த கையோடு லேடி காகா தனது வருங்கால கணவர் கிறிஸ்டியன் கரினோவை பிரிந்துவிட்டார். அந்த பிரிவு குறித்து அவர் அண்மையில் தான் பேசினார். இந்நிலையில் பிராட்லி கூப்பரும் தனது காதலியை பிரந்துள்ளார். பிராட்லி கூப்பரும், ஐரினாவும் பிரிவதற்கு லேடி காகா தான் காரணம் என்று ஏற்கனவே சமூக வலைதளங்களில் பேசத் துவங்கிவிட்டனர். சிலரோ ஒருபடி மேலே போய் லேடி காகா கர்ப்பமானதால் கூப்பர் ஐரினாவை பிரிந்துவிட்டார் என்று தெரிவித்துள்ளனர்.

ஆஸ்கர்
காதல் பாடலை மேடையில் பாடியதால் அந்த உணர்வு பார்வையாளர்களுக்கு வர வேண்டும் என்று நினைத்தோம். அதற்காக நானும், பிராட்லி கூப்பரும் காதலிப்பதாக பேசுவதா என்று லேடி காகா முன்பு கேள்வி எழுப்பியிருந்தார். மேலும் தங்களை பற்றி காதல் வதந்தி கிளப்பிவிட்ட நெட்டிசன்களையும் விளாசினார்.

அதிர்ச்சி
ஐரினா தான் தனக்கு ஏற்ற வாழ்க்கை துணை என்று தெரிவித்து வந்துள்ளார் பிராட்லி கூப்பர். இந்நிலையில் அவர்கள் இருவரும் பிரிந்தது அவர்களுக்கு நெருக்கமானவர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.


Click it and Unblock the Notifications











