அர்ஜுன் மகளுக்கு தன் கையால் வரைந்த ஓவியத்தை கொடுத்த பிரமானந்தம்.. அவருக்குள்ள இப்படி ஒரு திறமையா?
சென்னை: தென்னிந்திய சினிமாவில் பலரும் அதிரடி சண்டைக் காட்சிகளுக்கு பிரபலமானவர்களாக இருக்கலாம், ஆனால் அவர்கள அனைவரையும் ஓவர் டேக் செய்யும் அளவுக்கு ஆக்ஷனில் அதிரடி காட்டக் கூடியவர் ஆக்ஷன் கிங் அர்ஜுன். இவர் தீவிரமான அனுமன் பக்தரும் கூட. தனது மகள் ஐஸ்வர்யாவின் திருமணத்தை தான் கட்டிய அனுமன் கோவிலில் நடத்தினார். இந்நிலையில் அர்ஜுன் மகள் ஐஸ்வர்யாவுக்கு தெலுங்கு சினிமா உலகில் நகைச்சுவை நட்சத்திரம் பிரமானந்தம் தனது கையால் தான் வரைந்த ஓவியத்தை பிறந்தநாள் அன்பளிப்பாக கொடுத்துள்ளார். இது ரசிகர்கள் பலரையும் வியப்பில் ஆழ்த்தி உள்ளது.
தெலுங்கு திரையுலகில் நகைச்சுவை மன்னன் என்றால் அது பிரம்மானந்தம் மட்டும் தான். தெலுங்கில் மட்டும் சுமார் 1,000 படங்களுக்கு மேல் நடித்து சாதனை படைத்துள்ளார். தெலுங்கு அல்லாத நேரடி தமிழ் படங்களிலும் அவர் நடித்துள்ளார். தமிழ்நாட்டிலும் அவருக்கு என்று தனி ரசிகர்கள் பட்டாளம் உள்ளனர். இவர் அடிப்படையில் விரிவுரையாளர் மற்றும் ஓவியர். தனது கெரியரை விரிவுரையாளராக தொடங்கி, அங்கு தனது மிமிக்கிரியை மாணவர்கள் மத்தியில் வெளிப்படுத்தி பலரது கவனத்தை ஈர்த்தவர்.

பிரம்மானந்தம்: சிற்பியாகவும் கைதேர்ந்த அவர், கலைத்துறையில் சிறப்பாக சேவையாற்றியதற்காக கடந்த 2009 ஆம் ஆண்டு மத்திய அரசால், பத்மஸ்ரீ விருது அளிக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார். தனது வாழ்நாளில் இதுவரை நடித்த படங்களுக்காக அவர் வாங்கிய விருதுகள், பதக்கங்களை வைக்க தனது வீட்டில் ஒரு பெரிய அறையே ஒதுக்கி உள்ளார். அறை முழுவதும் நிரம்பி உள்ளதை, யோகி பாபு அவரது வீட்டிற்குச் சென்ற போது எடுத்த வீடியோ மூலம் காண முடிந்தது.
பிறந்த நாள் பரிசு: தற்போது நடிகர் அர்ஜுனின் மகளான ஐஸ்வர்யா 'சீதா பயணம்' என்ற தெலுங்கு படத்தில் நடித்துள்ளார். இந்த படம் வரும் 14ஆம் தேதி காதலர் தினத்தை முன்னிட்டு வெளியாகவுள்ளது. இதற்கான புரோமோஷன்கள் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இப்படி இருக்கையில் நடிகர் பிரம்மானந்தம் இந்த படத்தின் புரோமோசன் விழாவில் தனது கைகளால் ராமன் மற்றும் அனுமன் என இருவரும் கட்டிப்பிடித்து அன்பை வெளிப்படுத்துவது போன்ற ஓவியத்தை அழகாக வரைந்து, பிறந்தநாள் அன்பளிப்பாக அளித்துள்ளார். இது தொடர்பான வீடியோ பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. மேலும் பலரும் நடிகர் பிரம்மானந்தத்தின் அன்பையும் திறமையையும் பாராட்டி வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications











