லாக்டவுனில் ஓவியங்களாக வரைந்து தள்ளிய பிரபல காமெடி நடிகர்.. இன்னும் வரைய ரசிகர்கள் கோரிக்கை!

By

சென்னை: லாக்டவுனில் பிரபல காமெடி நடிகர் வரைந்துள்ள பென்சில் ஓவியங்கள் வைரலாகி வருகின்றன.

பிரபல தெலுங்கு காமெடி நடிகர் பிரம்மானந்தம். அங்கு ரிலீஸாகும் பெரும்பாலான படங்களில் இவர் கண்டிப்பாக இருப்பார்.

பிறமொழிகளிலும் நடித்துள்ள இவர், தமிழில் பல படங்களில் மறக்க முடியாத கேரக்டர்களில் நடித்துள்ளார்.

கொரோனா

கொரோனா

எஸ்.ஜே.சூர்யாவின் நியூ, ஜோதிகா, பிரகாஷ் ராஜ் நடித்த மொழி, ரஜினியின் குசேலன், விஷால் நடித்த சத்யம், ராதாமோகன் இயக்கிய பயணம், தோனி, லிங்கா உட்பட பல படங்களில் நடித்துள்ள இவர், சமீபத்தில் சந்தானத்தின் டகால்டி படத்தில் நடித்திருந்தார். இப்போது கொரோனா வைரஸ் வேகமாக பரவாமல் தடுக்க, லாக்டவுன் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வராமல் இருக்கின்றனர்.

லாக்டவுன்

லாக்டவுன்

நடிகர், நடிகைகள் உள்ளிட்ட சினிமா பிரபலங்களும் வீட்டுக்குள் இருக்கின்றனர். இந்த லாக்டவுன் வரும் 17 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதை சிலர், நல்ல விஷயத்துக்காகப் பயன்படுத்தி வருகின்றனர். சில நடிகைகள், சமூக வலைத்தளப் பக்கங்களில் தங்கள் ஒர்க் அவுட் வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர். இன்னும் சிலர் தங்கள், த்ரோபேக் போட்டோக்களை வெளியிட்டு வருகின்றனர்.

ஓவியங்கள்

ஓவியங்கள்

இந்நிலையில் காமெடி நடிகர் பிரம்மானந்தம் ஓவியம் வரையும் திறமை கொண்டவர். அவர் இந்த லாக்டவுனில் வரைந்துள்ள ஓவியங்கள் ரசிகர்களை கவர்ந்துள்ளன. அவர் கொரோனாவுக்கு எதிராக இந்தியா போராடுவது, தெலுங்கு கவிஞர் ஶ்ரீ ஶ்ரீ, ரவீந்திரநாத் தாகூர் உட்பட பலரின் ஓவியங்களை பென்சிலில் வரைந்துள்ளார்.

ஆச்சரியம் அடைந்தேன்

ஆச்சரியம் அடைந்தேன்

இந்த ஓவியங்களை கபார் சிங் பட இயக்குனர் ஹரிசங்கர் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்தார். 'இவ்வளவு திறமைகளை மறைத்து வைத்திருக்கிற அவரைக் கண்டு ஆச்சரியமடைந்தேன். இந்த ஓவியங்களை வரைந்தவர் யார் என்று தெரிகிறதா? பலர் அவர் கையெழுத்தை அறிந்திருந்தாலும் எத்தனை பேர் அவரை சரியாகக் கணிப்பார்கள் என்று தெரியாது. அவர் ஒரு சிறந்த நடிகர்' என்று கூறியிருந்தார்.

வரைய வேண்டும்

வரைய வேண்டும்

இதையடுத்து, சிலர் அதை சரியாகக் கணித்திருந்தனர். நடிகர் பிரம்மானந்தம் சமூக வலைத்தளப் பக்கங்களில் இல்லை என்றாலும் அவர் மகன் இருக்கிறார். அவர், அவரது ஓவியங்களை பகிர்ந்துள்ளார். இந்த ஓவியங்கள் வேகமாகப் பரவி வருகிறது. ரசிகர்கள் அவர் இன்னும் ஓவியங்கள் வரைய வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X