ராஜமெளலி தலைமையில் நடக்கும் ரன்பீர் கபூர் பட புரமோஷன்.. மிரட்டலாக வெளியான பிரம்மாஸ்த்ரா டீசர்!

மும்பை: இயக்குநர் அயன் முகர்ஜி இயக்கத்தில் ரன்பீர் கபூர், ஆலியா பட், அமிதாப் பச்சன், நாகார்ஜுனா, மெளனி ராய் மற்றும் ஷாருக்கான் உள்ளிட்ட பிரபலங்கள் நடித்துள்ள பிரம்மாஸ்த்ரா படத்தின் அட்டகாசமான டீசர் தற்போது வெளியாகி உள்ளது.

இந்த படத்தின் டீசர் வெளியீட்டு விழா மற்றும் படத்தின் புரமோஷனுக்காக இயக்குநர் அயன் முகர்ஜி மற்றும் ரன்பீர் கபூர் இயக்குநர் ராஜமெளலி தலைமையில் விசாகப்பட்டினத்தில் பிரம்மாண்ட நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துள்ளனர்.

நீண்ட நாட்களாக உருவாகி வரும் பிரம்மாஸ்த்ரா படத்தின் டிரைலர் மற்றும் படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அட்டகாசமான அறிவிப்புகளும் தற்போது வெளியாகி உள்ளன.

பாலிவுட் இஸ் பேக்

பாலிவுட் இஸ் பேக்

டிசாஸ்டர் படங்களாக வெளியாகி பாலிவுட்டின் மார்க்கெட்டை அதள பாதாளத்திற்கு சென்று வரும் நிலையில், சில படங்கள் மீண்டும் பாலிவுட்டை மீட்டெடுக்கும் முயற்சியில் நம்பிக்கை கொடுக்கின்றன. சமீபத்தில் வெளியான Bhool Bhulaiyaa 2 திரைப்படம் 100 கோடி கலெக்‌ஷனை அள்ளிய நிலையில், அடுத்ததாக அமீர்கானின் லால் சிங் சத்தா, அக்‌ஷய் குமாரின் பிருத்விராஜ் மற்றும் ரன்பீர் கபூரின் பிரம்மாஸ்த்ரா உள்ளிட்ட படங்கள் வெளியாக உள்ள நிலையில், பாலிவுட் இஸ் பேக் என ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

300 கோடி பட்ஜெட்

300 கோடி பட்ஜெட்

இயக்குநர் அயன் முகர்ஜி இயக்கத்தில் ரன்பீர் கபூர், ஆலியா பட், அமிதாப் பச்சன், நாகார்ஜுனா, மெளனி ராய் மற்றும் சிறப்பு தோற்றத்தில் ஷாருக்கான் என ஏகப்பட்ட பிரபலங்கள் இந்த பிரம்மாஸ்த்ரா படத்தில் நடித்துள்ளனர். 300 கோடி பட்ஜெட்டில் படு மிரட்டலாக இந்த படம் உருவாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

திருமணத்துக்கு பிறகு

திருமணத்துக்கு பிறகு

ரன்பீர் கபூர் மற்றும் ஆலியா பட் திருமணத்துக்கு முன்னதாகவே இந்த படத்தில் நடித்திருந்த நிலையில், கொரோனா பரவல் காரணமாக படத்தின் வெளியீடு தாமதம் ஆனது. இருவரும் திருமணம் செய்து கொண்ட நிலையில், தற்போது விரைவில் இந்த படம் வெளியாகப் போவது குறிப்பிடத்தக்கது.

பிரம்மாஸ்த்ரா டீசர்

பிரம்மாஸ்த்ரா டீசர்

இதிகாச தொடர்புடைய படமாகவே இந்த பிரம்மாஸ்த்ரா படம் பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டு இருக்கிறது. தற்போது வெளியாகி உள்ள இந்த படத்தின் முதல் பாக டீசரில் ரன்பீர் கபூர், ஆலியா பட், மெளனி ராய், அமிதா பச்சன் மற்றும் நாகார்ஜுனா உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர். மாயாஜாலங்கள் நிறைந்த படமாக இந்த படம் உருவாகி இருப்பது டீசரை பார்த்தாலே தெரிகிறது.

ரிலீஸ் எப்போ

ரிலீஸ் எப்போ

வரும் ஜூன் 15ம் தேதி பிரம்மாஸ்த்ரா டிரைலர் வெளியாகும் என படத்தின் க்ளிம்ஸ் காட்சிகளை நடிகை ஆலியா பட் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு அறிவித்துள்ளார். வரும் செப்டம்பர் 9ம் தேதி இன்னும் 100 நாட்களில் பிரம்மாஸ்த்ரா திரையரங்குகளில் வெளியாகும் என்றும் குறிப்பிட்டுள்ளார். கடந்த 5 ஆண்டுக்கு முன்னதாக இந்த படம் தொடங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X