Bramayugam Box Office: மாந்திரீகனாக மிரட்டும் மம்மூட்டி.. பிரம்மயுகம் முதல் நாள் வசூல் எவ்வளவு?
சென்னை: ஒய்நாட் ஸ்டூடியோஸ், நைட் ஷிஃப்ட் ஸ்டூடியோஸ் இணைந்து தயாரித்து மம்மூட்டி நடித்துள்ள பிரம்மயுகம் திரைப்படம் விமர்சன ரீதியாக மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ள நிலையில், முதல் நாள் வசூல் நிலவரம் குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளன. ராகுல் சதாசிவன் இயக்கத்தில் ஹாரர் படமாக வெளியாகி உள்ள பிரம்மயுகம் படம் மலையாள மொழியில் மட்டுமே ரிலீஸ் ஆகியிருக்கிறது.
கன்னூர் ஸ்குவாட், காதல் தி கோர் படங்களின் முதல் நாள் வசூலை முறியடித்து அதிக வசூலை இந்த படம் ஈட்டியிருப்பதாக கூறுகின்றனர். மம்மூட்டியின் மிரட்டலான நடிப்பை பார்த்து பலரும் தியேட்டர்களில் பயந்து நடுங்கி வருவதாக கூறப்படும் நிலையில், பாக்ஸ் ஆபிஸில் இந்த படம் பெரிதாக கல்லா கட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிரம்மயுகம் பட்ஜெட்: மலையாள படங்கள் குறைவான பட்ஜெட்டிலேயே வெளியாகி மிகப்பெரிய வசூல் சாதனைகளை படைத்து வருகின்றன. மம்மூட்டி போன்ற முன்னணி நடிகர்களும் தங்கள் சம்பளத்தை எல்லாம் அதிகமாக கேட்காமல், படத்தின் பட்ஜெட்டுக்கு தகுந்த சம்பளத்தையே இன்று வரை வாங்கி வருவதால் தான் மலையாள திரையுலகில் நல்ல நல்ல படங்கள் வெளியாவதாக கூறுகின்றனர். மம்மூட்டியின் சம்பளத்தையும் சேர்த்து ஒட்டுமொத்தமாக 27 கோடி ரூபாய் பட்ஜெட்டில் இந்த படம் உருவாகி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
பாசிட்டிவ் விமர்சனங்கள்: இயக்குநர் ராகுல் சதாசிவன் ஹாலிவுட்டின் ஹாரர் இயக்குநர்களுக்கே சவால் விடும் அளவுக்கு இந்த படத்தை இயக்கி உள்ளார் என்றும் இந்த படத்தை பான் இந்தியா படமாக ரிலீஸ் செய்திருந்தால், பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய சாதனை படைத்திருக்கும் என்றும் மலையாளத்தில் வெளியான இந்த திரைப்படத்திற்கும் அதில் மாந்திரீகனாக நடித்துள்ள மம்மூட்டிக்கும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
முதல் நாள் வசூல்: மம்மூட்டியின் காதல் தி கோர் திரைப்படம் கடைசியாக வெளியானது. அந்த படம் முதல் நாளில் 2.2 கோடி ரூபாய் வசூல் ஈட்டியது. இந்நிலையில், அதைவிட சற்றே அதிகமாக முதல் நாளில் 3 கோடி ரூபாய் வசூலை ஈட்டியிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மலையாளத்தில் மிகப்பெரிய அளவில் இந்த படம் ஓடும் என எதிர்பார்க்கப்படுகிறது. பட்ஜெட்டை தாண்டி வசூல் ஈட்டும் என்றே பாக்ஸ் ஆபிஸ் நிபுணர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











