Bramayugam: பிரம்மயுகம் ஃபர்ஸ்ட் லுக்கில் மிரட்டும் மம்முட்டி... இவர்தான் ரியல் கோஸ்ட்!!

திருவனந்தபுரம்: மலையாள மெகா ஸ்டார் மம்முட்டி இன்று தனது 72வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

இதனையடுத்து மம்முட்டிக்கு திரை பிரபலங்கள், ரசிகர்கள் உள்ளிட்ட பலரும் வாழ்த்துத் தெரிவித்தனர்.

இந்நிலையில், மம்முட்டி நடித்து வரும் பிரம்மயுகம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது.

உலக நாயகன் கமல்ஹாசனுக்கே சவால் விடும் வகையில், மம்முட்டியின் லுக் மிரட்டலாக உருவாகியுள்ளது.

 Bramayugam: Mammootty’s upcoming thriller Bramayugam first look poster released

ரியல் கோஸ்ட்டாக மாறிய மம்முட்டி: மலையாள திரையுலகின் உச்ச நட்சத்திரமான மம்முட்டி, இன்று 72வது பிறந்தநாள் கொண்டாடி வருகிறார். மெகா ஸ்டார், மம்முக்கா என ரசிகர்களால் அழைக்கப்படும் மம்முட்டி, 72 வயதிலும் இளம் ஹீரோக்களுக்கு சவால் விடும் வகையில் நடித்து வருகிறார். மம்முட்டி நடிப்பில் கடைசியாக வெளியான பீஸ்மா பர்வம், ரோர்சாச் போன்ற படங்கள் சூப்பர் ஹிட் அடித்தன. அதனைத் தொடர்ந்து பஸுக்கா, கன்னூர் ஸ்குவாட் படங்களில் நடித்து வருகிறார்.

அதேபோல், 'பிரம்மயுகம்' என்ற படத்திலும் மம்முட்டி ஹீரோவாக நடித்து வருவது குறிப்பிடத்தக்கது. ராகுல் சதாசிவன் இயக்கும் இந்தப் படத்தில் மம்முட்டியுடன் அர்ஜுன் அசோகன் உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர். மிஸ்டரியஸ் த்ரில்லர் ஜானரில் உருவாகும் இந்தப் படத்தில் மம்முட்டியின் கேரக்டர் ரொம்பவே வித்தியாசமாக இருக்கும் என சொல்லப்படுகிறது.

சமீபத்தில் மம்முட்டி நடித்த ரோர்சாச் படத்தில் அவரது கேரக்டரும் நடிப்பும் ரசிகர்களிடம் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றது. பிரம்மயுகம் படத்தில் மம்முட்டியின் கேரக்டரும் நடிப்பும் அதைவிட இன்னும் வெரைட்டியாக இருக்கும் எனக் கூறப்படுகிறது. அதனை நிரூபிக்கும்விதமாக தற்போது மம்முட்டியின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.

 Bramayugam: Mammootty’s upcoming thriller Bramayugam first look poster released

உடல் முழுவதும் கருமை நிறைந்தபடியும் அடர்ந்த முடிகளுடனும் வித்தியாசமான தோற்றத்தில் உள்ளார் மம்முட்டி. அதுமட்டும் இல்லாமல் அகோரமான பார்வை, சிரிப்பு என ரியல் கோஸ்ட் போல மிரட்டியுள்ளார். மம்முட்டியின் இந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், ரசிகர்களிடம் படம் மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது. மேலும், மம்முட்டி இதில் ஹீரோவா இல்லை வில்லனா என எதிர்பார்க்க வைத்துள்ளது.

இந்நிலையில், மம்முட்டியின் பிறந்தநாள் ஸ்பெஷலாக வெளியான பிரம்மயுகம் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், டிவிட்டரில் ட்ரெண்டாகி வருகிறது. இதுதவிர மம்முட்டியின் கன்னூர் ஸ்குவாட் படத்தின் ட்ரெய்லரும் தற்போது வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X