அழகான ராட்சஷி மனீஷா கொய்ராலா… இப்போ ஆளே மாறிப்போய்டாங்க

By Mayura Akilan

பாலிவுட், கோலிவுட் திரை உலகில் பல படங்களில் கதாநாயகியாக நடித்து ரசிகர்களைக் கவர்ந்த மனீஷா கொய்ராலா, புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று திரும்பிய பின்னர் இப்போது ஆளே மாறிப்போய்விட்டார்.

நோயிலிருந்து முற்றிலும் மீண்டுவிட்ட அவர் இப்போது தனது படத்தை டுவிட்டர் வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார். நோய் தீர எடுத்துக் கொண்ட சிகிச்சையில் முடி முழுவதும் கொட்டிவிட்டது. மொட்டைத்தலையுடன் கண்ணாடி போட்டு முற்றிலும் உருமாறித்தான் போயுள்ளார்.

மணிரத்னம், ஷங்கர் பட நாயகி

மணிரத்னம், ஷங்கர் பட நாயகி

மணிரத்னம் இயக்கிய பம்பாய், உயிரே படங்களில் நடித்தவர் மனீஷா கொய்ராலா...

ஷங்கரின் இந்தியன், முதல்வன் படங்களில் அழகான ராட்சஷியாக வந்து ரசிகர்களைக் கவர்ந்தவர்.

மணவாழ்க்கையில் கசப்பு

மணவாழ்க்கையில் கசப்பு

திருமணம் அவருக்கு மகிழ்ச்சியை தரவில்லை. விவாகரத்து செய்து பிரிந்தார். அதன் பிறகும் நிம்மதி பெறவில்லை.

மரணத்தின் விளிம்பில்

மரணத்தின் விளிம்பில்

புற்று நோய் தாக்கியது. அமெரிக்காவில் பல மாதங்கள் தங்கி சிகிச்சை பெற்றார். மரணத்தின் விளிம்புவரை போய் மீண்டு தற்போது நோயிலிருந்து பூரண குண மடைந்து விட்டார்.

வயதான தோற்றம்

வயதான தோற்றம்

முதல் தடவையாக இப்போதுள்ள தனது தோற்றத்தை படம் எடுத்து டுவிட்டரில் வெளியிட்டு உள்ளார். அழகான தலை முடியை இழந்துள்ளார். கண்ணாடி அணிந்து இருக்கிறார். 42 வயதாகும் அவர் 62 வயது நிரம்பியவர் போல் காட்சி அளிக்கிறார்.

மகிழ்ச்சியாக இருக்கிறேன்

மகிழ்ச்சியாக இருக்கிறேன்

இப்போதுள்ள என் தோற்றத்தை அப்படியே நான் ஏற்றுக் கொள்கிறேன். வெளி உலகுக்கும் இதை தெரிவிக்கிறேன். கறுப்பு வெள்ளையாக கடந்த காலம் இருந்தது. நிகழ்காலம் நன்றாக உள்ளது. கடவுள் மகிழ்ச்சியாக வைப்பார் என்று கூறியுள்ளார் மனீஷா.

தைரியமும் தன்னம்பிக்கையும்

தைரியமும் தன்னம்பிக்கையும்

இந்த தோற்றத்துக்காக தான் வருத்தம் அடைய வில்லை. தைரியம் மற்றும் தன்னம்பிக்கை அதிகரித்துள்ளது அதுவே படத்தை வெளியிட தூண்டியுள்ளது என்றும் கூறுகிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X