விஜய் பாட்டுக்கு டான்ஸ் ஆடிய பிராவோ: வீடியோ இதோ
சென்னை: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை சேர்ந்த பிராவோ தளபதி விஜய்யின் பாடலுக்கு டான்ஸ் ஆடியுள்ளார்.
ஐ.பி.எல். போட்டிகளில் விளையாடி வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை சேர்ந்த டிவெய்ன் பிராவோ அருமையாக பாடுவார், மேலும் சூப்பராக டான்ஸும் ஆடுவார்.

இம்ரான் தாஹிர் எப்படி விக்கெட் எடுத்தால் ஓடுவாரோ, பிராவோ அதே போன்று டான்ஸ் ஆடுவார். இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பிராவோ வில்லு படத்தில் விஜய், நயன்தாரா ஆகியோர் ஆடிய வாடா மாப்பிள்ளை பாடலுக்கு டான்ஸ் ஆடியுள்ளார்.
மொழி தெரியாவிட்டாலும் தமிழ் பாட்டுக்கு பிராவோ டான்ஸ் ஆடியது சி.எஸ்.கே. ரசிகர்களுக்கு பிடித்துள்ளது. பிராவோ விஜய் பாட்டுக்கு ஆடிய வீடியோ ட்விட்டரில் வலம் வருகிறது.
பிராவோவின் நடனத்தை பார்த்த தமிழ் ரசிகர்கள் மாஸ், செம என்று தெரிவித்துள்ளனர். தளபதி ரசிகர்களோ பெருமையில் முகம் மலர்ந்துவிட்டனர்.


Click it and Unblock the Notifications











