தங்கத்தாலான வலை ஜாக்கெட்.. அங்கங்களை தடவும் மஸாஜர்.. லிமிட்டை மீறிய பாப் பாடகியின் இன்ஸ்டா போஸ்ட்!
பிரேசில்: வெளிநாடுகளில் குறிப்பாக மேற்கத்திய ஐரோப்பிய நாடுகளில் பாப் பாடல்களுக்கும் பாப் பாடகர்களுக்கும் என்றைக்குமே தனி வரவேற்பு உள்ளது. அவர்கள் நடத்தும் இசைக் கச்சேரியில் கலந்து கொண்டு, பாடல்களை உணர்ச்சி வசப்பட்டு பாடும் ரசிகர்கள் இருக்கும் பல வீடியோக்கள் இணையத்தில் உலா வருவதையும் பார்த்துக் கொண்டுதான் உள்ளோம். இப்படியான நிலையில், பிரேசில் நாட்டினை சேர்ந்த மைக்கேல் ஆண்ட்ரேட் எனப்படும் பாப் பாடகி தனது ரசிகர்களைச் சந்திக்கும் நிகழ்வில் எடுத்த புகைப்படங்களையும் வீடியோக்களையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இது பலரது கவனத்தினை ஈர்த்துள்ளது.
தனது சிறுவயதில் இருந்தே பாப் பாடல்களைப் பாடுவதில் இருந்த ஆர்வத்தால் பல இசைக் கருவிகளை இசைக்கவும் கற்றுக் கொண்டார்.சமகாலத்தில் பிரேசிலில் உள்ள பாப் பாடகர்கள் பட்டியலில் மைக்கேல் ஆண்ட்ரேட்டுக்கு என பெரும் ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. இன்னும் சொல்லப்போனால், இவரது பாடல்களுக்கு எந்த அளவிற்கு ரசிகர்கள் உள்ளார்களோ அதே அளவிற்கு இவரது இசைக் கச்சேரியில் இவரது நடவடிக்கைகளுக்கும் தனி ரசிகர்கள் பட்டாளம், உள்ளது.

இவரது பாடல்கள் பிரேசில் நாட்டின் பாப் பாடகர்களின் மத்தியில் வித்தியாசப்பட்டு இருப்பதால் இவருக்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். இவருக்கு குழந்தைகள் தொடங்கி பெரியவர்கள் வரை அனைத்து வயதினரும் ரசிகர்களாக உள்ளனர். இப்படியான நிலையில் இவர் தனது ரசிகர்களைச் சந்தித்துள்ளார். அப்போது எடுத்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

வலை ஜாக்கெட்: அதாவது அவர் பகிர்ந்துள்ள வீடியோவில் காரில் இருந்து வெளியே வரும் மைக்கேல் ஆண்ட்ரேட் தங்க முலாம் பூசப்பட்ட வலை போல் உள்ள ஜாக்கெட் அணிந்துள்ளார். மேலும் தனது வழக்கமான ஸ்டைலிஷான பேண்ட் அணிந்துள்ளார். இந்த உடையில் மைக்கேல் ஆண்ட்ரேட் மிகவும் கவர்ச்சியாக காணப்படுகின்றார். இதுமட்டும் இல்லாமல், ரசிகர்கள் அவரை சூழ்ந்து கொண்டு புகைப்படங்கள் எடுகின்றார்கள். மைக்கேல் ஆண்ட்ரேட் மேடையில் அமர்ந்ததும், அவருக்கு தலையில் கீரீடம் அணிவிக்கப்பட்டது, இது தொடர்பான வீடியோவையும் பகிர்ந்துள்ளார்.

மசாஜ்: அதேபோல் கடற்கரையில் நாற்காலியில் அமர்ந்திருக்கும் அவரது உடலில் ஒரு மாஸாஜர் எண்ணெயை ஊற்றி உடலின் முன் பகுதி முழுவதும் தேய்த்து விடுகின்றார். இது தொடர்பான வீடியோவையும் மைக்கேல் ஆண்ட்ரேட் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இது பலரது கவனத்தினை ஈர்த்துள்ளது. குறிப்பாக இவரது உடை, நடவடிக்கைகள் பலரது கவனத்தினை ஈர்த்துள்ளது. இதனைப் பார்த்த இணையவாசிகள் சிலர், லிமிட்டை மீறிப் போறாங்களோ என கமெண்ட் அடித்து வருகின்றனர். இவரை இன்ஸ்டாகிராமில் மட்டும் சுமார், 6.2 மில்லியனுக்கும் அதிகமானோர் பின் தொடருகின்றனர்.



Click it and Unblock the Notifications











