twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பிரேக்கப்.. இளம் வயது காதலரை பிரிந்தார் நடிகை சுஸ்மிதா சென்.. அதிரடியாக போஸ்ட் போட்டு அறிவிப்பு!

    |

    மும்பை: ரட்சகன் படத்தில் நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான நடிகை சுஸ்மிதா சென் தனது காதலரை பிரிந்து விட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

    1994ம் ஆண்டு தனது 18வது வயதில் மிஸ் யூனிவர்ஸ் பட்டம் வென்று ஒட்டுமொத்த உலகையும் திரும்பி பார்க்க வைத்தவர் சுஸ்மிதா சென்.

    இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் வெளியான முதல்வன் படத்தில் இடம்பெற்ற ஷக்கலக்கா பேபி பாடலுக்கு நடனமாடி அசத்தி இருந்தார்.

    ஹாலிவுட் படத்துடன் சேர்த்து தமிழ் படத்தையும் இயக்கிய நந்தா... குறுக்கு வழி படத்தின் பர்ஸ்ட் லுக்! ஹாலிவுட் படத்துடன் சேர்த்து தமிழ் படத்தையும் இயக்கிய நந்தா... குறுக்கு வழி படத்தின் பர்ஸ்ட் லுக்!

    பிரபஞ்ச அழகி

    பிரபஞ்ச அழகி

    1994ம் ஆண்டு நடைபெற்ற ஃபெமினா மிஸ் இந்தியா அழகி போட்டியில் கலந்து கொண்டு டைட்டில் வென்ற சுஸ்மிதா சென் அதே ஆண்டு நடந்த மிஸ் யூனிவர்ஸ் எனும் பிரபஞ்ச அழகி போட்டியிலும் கலந்து கொண்டு மகுடம் சூடி ஒட்டுமொத்த இந்தியர்களையும் பெருமைப்படுத்தினார். கடந்த 2016ம் ஆண்டு நடைபெற்ற மிஸ் யூனிவர்ஸ் போட்டிக்கு நடுவராகவும் உயர்ந்து கெத்துக் காட்டியவர் சுஸ்மிதா சென்.

    ரட்சகன் ஹீரோயின்

    ரட்சகன் ஹீரோயின்

    1996ம் ஆண்டு வெளியான தஸ்தக் எனும் இந்தி படத்தில் சுஸ்மிதா சென்னாகவே வந்து சென்றார். அதனை தொடர்ந்து 1997ம் ஆண்டு இயக்குநர் பிரவீன் காந்தி இயக்கத்தில் நாகார்ஜுனா நடிப்பில் வெளியான ரட்சகன் படத்தில் ஹீரோயினாக நடித்து ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்கள் மத்தியிலும் இடம்பெற்றார். இன்றளவும் ரட்சகன் பட பாடல்களுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர்.

    ஷக்கலக்கா பேபி

    ஷக்கலக்கா பேபி

    தொடர்ந்து இந்தி படங்களில் நடித்து வந்த சுஸ்மிதா சென் இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் அர்ஜுன், மனிஷா கொய்ராலா நடிப்பில் வெளியான முதல்வன் படத்தின் இன்ட்ரோ பாடலான ஷக்கலக்கா பேபி பாடலுக்கு செம குத்தாட்டம் போட்டு கலக்கினார். அதன் பிறகு தமிழில் அவர் தலை காட்டவே இல்லை.

    சினிமாவில் இருந்து விலகல்

    சினிமாவில் இருந்து விலகல்

    2015ம் ஆண்டு கடைசியாக நிர்பாக் எனும் பெங்காலி படத்தில் நடித்த நடிகை சுஸ்மிதா சென் அதன் பிறகு எந்தவொரு படங்களிலும் நடிக்காமல் சினிமாவுக்கு திடீரென பிரேக் கொடுத்து விட்டு எஸ்கேப் ஆனார். நடிகை சுஸ்மிதா சென்னுக்கு அடிசன் நோய் பாதிப்பும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

    வெப்சீரிஸில் வெற்றி

    வெப்சீரிஸில் வெற்றி

    கடந்த ஆண்டு டிஸ்னி ஹாட்ஸ்டாரில் வெளியான ஆர்யா வெப் தொடரில் நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் லீடு ரோலில் நடித்து அசத்தி இருந்தார் சுஸ்மிதா சென். அந்த வெப் தொடர் வெற்றி பெற்ற நிலையில், அதன் இரண்டாம் பாகம் இந்த ஆண்டு வெளியாகி சக்கைப் போடு போட்டு வருகிறது.

    இளம் வயது நபருடன் காதல்

    இளம் வயது நபருடன் காதல்

    தற்போது 46வயதை கடந்துள்ள நடிகை சுஸ்மிதா சென் கடந்த 2018ம் ஆண்டு தன்னை விட அதிக வயது வித்தியாசம் கொண்ட இளைஞரான ரோமன் ஷால் என்பவருடன் நெருக்கமாக பழகி வந்தார். பின்னர் இருவரும் ஒரே வீட்டில் லிவ்விங் டுகெதர் வாழ்க்கையை வாழ்ந்து வந்தனர்.

    பிரேக்கப்

    பிரேக்கப்

    இந்நிலையில், தற்போது நண்பர்களாக சேர்ந்தோம் நண்பர்களாக பிரிகிறோம் கடைசி வரை நண்பர்களாகவே தொடர்வோம் என ரோமன் ஷாலை பிரேக்கப் செய்து விட்டதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளார்.

    2 மகள்கள்

    2 மகள்கள்

    நடிகை சுஸ்மிதா சென்னுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். இதற்கு முன் யாரையும் திருமணம் செய்து கொள்ளாத நிலையில், கடந்த 2000ம் ஆண்டு ரெனி எனும் பெண் குழந்தையை தத்தெடுத்து வளர்த்த சுஸ்மிதா சென் கடந்த 2010ம் ஆண்டு அலிசா எனும் பெண் குழந்தையையும் தத்தெடுத்து வளர்த்து வருவது குறிப்பிடத்தக்கது.

    வெளியேறிய காதலர்

    வெளியேறிய காதலர்

    சில வாரங்களுக்கு முன்பாகவே நடிகை சுஸ்மிதா சென் வீட்டில் இருந்து ரோமன் வெளியேறி விட்டார் என்றும் தற்போது அவருடைய நண்பர் வீட்டில் வசித்து வருகிறார் என்றும் தகவல்கள் வெளியானது. 2018ம் ஆண்டு முதல் காதலித்து வந்த இருவரும் தற்போது ஏன் திடீரென பிரிந்து விட்டார்கள் என்பது புரியாத புதிராகவே உள்ளது.

    விவாகரத்து ஆண்டு

    விவாகரத்து ஆண்டு

    இந்த ஆண்டு ஏற்கனவே நடிகர் அமீர்கான் தனது இரண்டாவது மனைவி கிரண் ராவை பிரிவதாக அறிவித்து ஒட்டுமொத்த தேசத்தையும் அதிர்ச்சியில் ஆழ்த்தினார். அடுத்ததாக நடிகை சமந்தா மற்றும் நாக சைதன்யாவின் பிரிவு ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது. இந்நிலையில், இந்த ஆண்டு இறுதியில் சுஸ்மிதா சென் தனது காதலரை பிரிந்த செய்தி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

    English summary
    Former Miss Universe and Aarya 2 actress Sushmita Sen breaking up with her lover Rohman Shawl announcement shocks fans.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X