Breaking: அமீர்கானின் ‘லகான்’ பட பிரபலம் தற்கொலை... அதிர்ச்சியில் பாலிவுட் திரையுலகம்!
மும்பை: பாலிவுட் திரையுலகின் முன்னணி கலை இயக்குநராக வலம் வந்தவர் நிதின் சந்திரகாந்த் தேசாய்.
கலை இயக்குநர், தயாரிப்பாளர், நடிகர் என பன்முகத் திறமையாளராக காணப்பட்ட நிதின் தேசாய் இன்று தற்கொலை செய்துகொண்டார்.
மும்பையில் உள்ள அவரது ஸ்டூடியோவில் நிதின் தேசாய் சடலமாக மீட்கப்பட்டது இந்தி திரையுலகை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.

இந்நிலையில், தற்கொலை செய்துகொண்ட நிதின் தேசாய்க்கு திரையுலக பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
கலை இயக்குநர் நிதின் தேசாய் தற்கொலை: இந்தி திரையுலகில் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக பயணித்து வந்தவர் நிதின் சந்திரகாந்த் தேசாய். இயக்குநர், தயாரிப்பாளர், நடிகர், கலை இயக்குநர் என வலம் வந்த அவர், இன்று தற்கொலை செய்துகொண்டார். 57 வயதே ஆன நிதின் தேசாய் தற்கொலை செய்துகொண்டது இந்தித் திரையுலகை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
மும்பை கர்ஜத் பகுதியில் உள்ள அவரது ND ஸ்டூடியோவில் நிதின் தேசாய் தற்கொலை செய்துள்ளார். இதனையறிந்த போலீஸார் நிதின் தேசாயின் சடலத்தை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் நிதி நெருக்கடி காரணமாக நிதின் தேசாய் தற்கொலை செய்து கொண்டதாக சொல்லப்படுகிறது. முன்னதாக கடந்த சில மாதங்களாகவே தீவிர மன அழுத்தத்தில் இருந்துள்ளார்.
1990களில் திரையுலகில் அறிமுகமான நிதின் தேசாய், இந்தியில் வெளியான பிரம்மாண்டமான படங்களுக்கு கலை இயக்குநராக பணிபுரிந்துள்ளார். ஷாருக்கானின் தேவதாஸ், ஸ்வதேஸ், சஞ்சய் தத் நடித்த முன்னாபாய் எம்.பி.பி.எஸ், அமீர்கானின் லகான் ஆகியவை நிதின் தேசாய் கேரியரில் மிக முக்கியமான படங்களாகும். பாலிவுட்டில் பிரம்மாண்டமான படங்கள் என்றாலே நிதின் தேசாய் தான் கலை இயக்குநராக கமிட் ஆகும் காலம் இருந்தது.
அதுமட்டும் இல்லாமல், இரண்டு படங்களை தயாரித்துள்ள நிதின் தேசாய், ஹலோ ஜெய்ஹிந்த், அஜிந்தா என இரண்டு படங்களையும் இயக்கியுள்ளார். இந்தித் திரையுலகில் மிக முக்கியமான பிரபலமாக வலம் வந்த நிதின் தேசாய் தற்கொலை செய்துகொண்டது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. நிதின் தேசாய்யின் தற்கொலைக்கு நிதி நெருக்கடி தான் காரணம் என சொல்லப்பட்டாலும், உண்மையான காரணம் என்னவென்று போலீஸார் தரப்பில் இருந்து அறிவிக்கப்படவில்லை.


Click it and Unblock the Notifications











