சார்பட்டா பரம்பரை அடுத்து பா. ரஞ்சித் சூப்பர் அறிவிப்பு.. விக்ரமுடன் கைகோர்த்து மிரட்டப் போறாரு!

சென்னை: மாரி செல்வராஜ் இயக்கத்தில் மகன் துருவ் விக்ரம் நடித்து வரும் நிலையில், இயக்குநர் பா. ரஞ்சித் இயக்கத்தில் அப்பா சியான் விக்ரம் ஒப்பந்தம் ஆகி உள்ளார்.

அட்டகத்தி, மெட்ராஸ், கபாலி, காலா படங்களை இயக்கிய பா. ரஞ்சித் இந்த ஆண்டு சார்பட்டா பரம்பரை எனும் சூப்பர் ஹிட் படத்தை கொடுத்தார்.

இந்நிலையில், பா. ரஞ்சித்தின் அடுத்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது.

வேற லெவல் லைன் அப்

வேற லெவல் லைன் அப்

ஸ்கெட்ச், கடாரம் கொண்டான், சாமி ஸ்கொயர் என தொடர்ந்து படு தோல்வி படங்களை கொடுத்த சியான் விக்ரம் அதிலிருந்து மீண்டு பெரிய படங்களை கொடுக்க கடும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். கோப்ரா, பொன்னியின் செல்வன், மகான், துருவ நட்சத்திரம் என ஏகப்பட்ட பெரிய படங்கள் லைன் ஆப்பில் உள்ளன.

சக்சஸ் சார்பட்டா

சக்சஸ் சார்பட்டா

அட்டகத்தி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான பா. ரஞ்சித் மெட்ராஸ், கபாலி, காலா என முன்னணி இயக்குநராக மாறிய நிலையில், இந்த ஆண்டு அவர் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் வெளியான சார்பட்டா பரம்பரை திரைப்படம் ஒடிடியில் வெளியானாலும் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய ஹிட் அடித்து சரித்திரம் படைத்தது.

அடுத்த படம் யாருடன்

அடுத்த படம் யாருடன்

காலா படத்திற்கு பிறகு பிர்சா முண்டா படத்தை இயக்கப் போவதாக பா. ரஞ்சித் அறிவித்த நிலையில், அந்த புராஜெக்ட் காலதாமதம் ஆன நிலையில், ஆர்யாவை வைத்து சார்பட்டா பரம்பரை படத்தை முடித்து ஹிட் ஆக்கினார். இந்நிலையில், பா. ரஞ்சித்தின் அடுத்த படம் என்ன? யாரை இயக்கப் போகிறார் என்கிற கேள்விகளுக்கு தற்போது சூப்பரான விடை கிடைத்துள்ளது.

சியானை இயக்குகிறார்

சியானை இயக்குகிறார்

ஸ்டூடியோ க்ரீன் தயாரிப்பில் பா. ரஞ்சித் இயக்கத்தில் சியான் விக்ரம் நடிப்பில் அடுத்த பிரம்மாண்ட படம் ஒன்று உருவாகப் போகும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. விக்ரம் மற்றும் சிவி குமார் உடன் பா. ரஞ்சித் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை ஷேர் செய்துள்ளார்.

Recommended Video

Actor Kalaiarasan Reveals Sarpatta Secret | Arya | Pa.Ranjith
சம்பவம் இருக்கு

சம்பவம் இருக்கு

இயக்குநர் பா. ரஞ்சித் உடன் அப்பா சியான் விக்ரம், இயக்குநர் மாரி செல்வராஜ் உடன் மகன் துருவ் விக்ரம் என இருவரும் நடிக்க உள்ள நிலையில், விரைவில் பெரிய சம்பவங்கள் பல இருக்கு போல என நெட்டிசன்கள் கமெண்ட்டுகளை குவித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X