அப்பாடா.. ஒரு வழியா தியேட்டர் ரிலீஸ்.. தனுஷ் நடித்துள்ள திருச்சிற்றம்பலம் எப்போ வருது தெரியுமா?

சென்னை: சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இயக்குநர் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் உருவாகி உள்ள திருச்சிற்றம்பலம் படத்தின் ரிலீஸ் தேதியை நடிகர் தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.

இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான கர்ணன் திரைப்படம் தியேட்டரில் வெளியானது.

அதன் பிறகு தனுஷ் நடிப்பில் உருவான படங்கள் எல்லாம் ஓடிடியில் வெளியானது தனுஷ் ரசிகர்களையே கடுப்பாக்கியது.

தியேட்டர் ரிலீஸ்

தியேட்டர் ரிலீஸ்

ஆனால், இந்த முறை சன் பிக்சர்ஸ் தயாரிப்பு என்றதுமே கண்டிப்பாக திருச்சிற்றம்பலம் தியேட்டரில் தான் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது நடிகர் தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் அதனை உறுதி செய்துள்ளது ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தி உள்ளது. இந்த முறை தனுஷ் ரசிகர்களுக்கு தியேட்டர் செலிபிரேஷன் கண்டிப்பாக மிஸ் ஆகாது.

ஓடிடியில் மட்டுமே

ஓடிடியில் மட்டுமே

மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான கர்ணன் திரைப்படம் திரையரங்கில் வெளியானாலும், கொரோனா பரவல் காரணமாக வெகு விரைவில் அதன் தியேட்டர் ஓட்டம் தடைப்பட்டு ஓடிடிக்கு வந்தது. அதன் பிறகு கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியான ஜகமே தந்திரம் திரைப்படம் நெட்பிளிக்ஸில் வெளியானது. ஆனால், அந்த படம் ஓடிடியில் வெளியானாலும் சொல்லிக் கொள்ளும் அளவுக்கு ஹிட் அடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அட்ரங்கி ரேவும் அவுட்

அட்ரங்கி ரேவும் அவுட்

ராஞ்சனா, ஷமிதாப் படங்களை தொடர்ந்து மீண்டும் தனுஷ் நடிப்பில் பாலிவுட் படம் உருவாகி வருகிறது. அக்‌ஷய் குமார், சாரா அலி கான் நடித்துள்ளார்களே நிச்சயம் ஹிட் அடிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அந்த படமும் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகி படுதோல்வியை சந்தித்தது. கடைசியாக கார்த்திக் நரேன் இயக்கத்தில் பெரும் எதிர்பார்ப்புடன் வெளியான மாறன் திரைப்படமும் மண்ணைக் கவ்வியது.

திருச்சிற்றம்பலம் பந்தயம் அடிக்கும்

திருச்சிற்றம்பலம் பந்தயம் அடிக்கும்

யாரடி நீ மோகினி, குட்டி, உத்தமப்புத்திரன் என தனுஷின் ஆரம்ப கால ஹிட் படங்களை இயக்கிய இயக்குநர் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் திருச்சிற்றம்பலம் உருவாகி உள்ளது. இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடிகளாக நித்யா மேனன், பிரியா பவானி சங்கர் மற்றும் ராஷி கன்னா என மூன்று ஹீரோயின்கள் நடித்துள்ளனர். பிரகஷ் ராஜ் முக்கிய ரோலில் நடித்துள்ளார். நிச்சயம் இந்த படம் பந்தயம் அடிக்கும் என எதிர்பார்க்கப்ப்டுகிறது.

சிவ்கார்த்திகேயன், சிம்புவெல்லாம்

சிவ்கார்த்திகேயன், சிம்புவெல்லாம்

நடிகர் தனுஷ் நடிப்பில் சமீபத்தில் ஓடிடியில் வெளியான படங்கள் எல்லாம் ஓடாமல் போன நிலையில், சிவகார்த்திகேயனின் டாக்டர், டான் மற்றும் சிம்புவின் மாநாடு உள்ளிட்ட படங்கள் 100 கோடி வசூலை குவித்து தனுஷை ஓவர்டேக் செய்து விட்டது. இந்நிலையில், அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக திருச்சிற்றம்பலம் ஹிட் அடிக்க வேண்டும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

எப்போ ரிலீஸ்

எப்போ ரிலீஸ்

இந்நிலையில், தற்போது திருச்சிற்றம்பலம் திரைப்படம் வரும் ஆகஸ்ட் 18ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிப்பு வெளியாகி உள்ளது. நடிகர் தனுஷும் தனது ட்விட்டர் பக்கத்தில் அதனை ஷேர் செய்துள்ளார். நீண்ட நாட்களுக்கு பிறகு தனுஷ் - அனிருத் கூட்டணி இணைவதால் பாடல்கள் மட்டுமின்றி படமும் ஹிட் அடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தொடர் தோல்வியில் இருந்து சன் பிக்சர்ஸை தனுஷ் மீட்டெடுப்பாரா? என்பதை வெயிட் பண்ணி பார்ப்போம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X