வேற லெவல்ல இருக்கும்.. சுதா என்கிட்ட கதை சொல்லிட்டாங்க.. தல அஜித் படம் பற்றி ஓப்பன் பண்ண ஜி.வி!

சென்னை: சூரரைப் போற்று படத்தைத் தொடர்ந்து தல அஜித்துடன் தான் சுதா கொங்கரா படம் பண்ணப் போகிறார் என்பது கிட்டத்தட்ட உறுதி ஆகி விட்டது.

இசையமைப்பாளரும் நடிகருமான ஜி.வி. பிரகாஷ் குமார் இப்போ தனது ரசிகர்கள் கேள்விக்கு வீடியோ மூலம் அட்டகாசமாக பதில் அளித்து வருகிறார்.

அஜித் ரசிகர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு, சுதா கொங்கரா கதை என்கிட்ட சொல்லிட்டாங்கன்னு பிக் பிரேக்கிங்கை போட்டு உடைத்துள்ளார்.

விரைவில் ஷூட்டிங்

விரைவில் ஷூட்டிங்

போனி கபூர் தயாரிப்பில் தல அஜித்தை இரண்டாவது முறையாக இயக்குநர் எச். வினோத் இயக்கி வருகிறார். வலிமை என தலைப்பிடப்பட்டுள்ள அந்த படம் குறித்த வேறு எந்த அப்டேட்டும் இதுவரை வெளியிடப்படாமல் சூப்பர் சைலன்ஸ் காக்கப்பட்டு வருகிறது. வரும் அக்டோபர் மாதம் மீண்டும் அந்த படத்தின் ஷூட்டிங் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்த படம்

அடுத்த படம்

இந்நிலையில், சில நாட்களாகவே தல அஜித்தின் அடுத்த படம் குறித்த அப்டேட்கள் கசிந்து வருகின்றன. இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் தான் அஜித் அடுத்த படத்தில் நடிக்க உள்ளார் என்ற தகவல் பரவி வேற லெவலில் எதிர்பார்ப்புகளை கிளப்பி வருகின்றன. இது உண்மையா, வதந்தியா என்ற சந்தேகமும் ஒரு பக்கம் இருந்து கொண்டே இருந்தது.

போட்டுடைத்த ஜி.வி. பிரகாஷ்

போட்டுடைத்த ஜி.வி. பிரகாஷ்

இந்நிலையில், தனது ரசிகர்களுடன் கலந்துரையாட முடிவு செய்த ஜி.வி. பிரகாஷ், ட்விட்டரில் வீடியோ மூலம் அவர்களது கேள்விக்கு பதில் அளித்துள்ளார். அதில், ஒரு தல ரசிகர், அஜித் - சுதா கொங்கரா படம் இருக்கா? இல்லையா? என்று கேட்க, சற்றும் மழுப்பாமல், அந்த படம் வந்தா வேற லெவலில் இருக்கும் என ஜி.வி. பிரகாஷ் குமார் கூறி இருப்பது தல ரசிகர்களை கொண்டாட வைத்திருக்கிறது.

கதை தெரியும்

கதை தெரியும்

சூர்யாவின் சூரரைப் போற்று படத்தை போலவே அஜித் - சுதா கொங்கரா படமும் இந்தியாவையே திரும்பி பார்க்க வைக்கும். என்கிட்ட சுதா கொங்கரா அந்த படத்தோட கதையை சொல்லிருக்காங்க, அந்த புராஜெக்ட் மட்டும் ஓகேவான சும்மா வேற லெவலில் இருக்கும் எனக் கூறியுள்ளார்.

Recommended Video

தல ரகசியமா SOCIAL MEDIAல இருக்காரு | ACTRESS PRIYADARSHINI REVEAL THE SECRET | FILMIBEAT TAMIL
இரண்டாவது படமே

இரண்டாவது படமே

தல அஜித் உடன் கிரீடம் படத்தில் வொர்க் பண்ண அனுபவம் பற்றி சொல்லுங்க, அஜித் பற்றி சொல்லுங்க என ரசிகர்கள் தொடர்ந்து கேள்விகளை எழுப்பி வந்தனர். இசையமைப்பாளராக தனது முதல் படம் வெயில் படத்தில் வொர்க் பண்ணி முடித்ததும், தல அஜித்தின் கிரீடம் பட வாய்ப்பு கிடைத்தது. அந்த படத்தில் நான் இசையமைத்த அத்தனை பாடல்களையும் அஜித் பாராட்டினார். மேனேஜர் சுரேஷ் சந்திரா ரிங் டோனே கனவெல்லாம் பலித்தது பாடல் தான் என்றும் ஜி.வி. கூறி தல ரசிகர்களை உற்சாகப்படுத்தி உள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X