Breaking: RRR திரைப்பட ரிலீஸ் தேதி அறிவிப்பு.. இரண்டில் ஒன்று பார்த்து விட ராஜமெளலி முடிவு!

சென்னை: இயக்குநர் ராஜமெளலியின் RRR திரைப்படத்தின் ரிலீஸ் தேதி தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ராஜமெளலி இயக்கத்தில் ராம்சரண், ஜூனியர் என்டிஆர் நடிப்பில் உருவாகி உள்ள படம் ஆர்.ஆர்.ஆர் தமிழில் இரத்தம் ரணம் ரெளத்திரம் என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

இந்த படம் ஜனவரி 7ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில், கொரோனா பரவல் காரணமாக தள்ளி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

பல கோடிக்கு புரமோஷன்

பல கோடிக்கு புரமோஷன்

பல நூறு கோடிகளை கொட்டி படத்தை உருவாக்கிய நிலையில், சில கோடிகள் செலவழித்து பிரம்மாண்டமாக மும்பை, சென்னை, கொச்சின் உள்ளிட்ட இடங்களில் பட புரமோஷன்களை இயக்குநர் ராஜமெளலி செய்தார். ஜனவரி 7ம் தேதி படத்தை ரிலீஸ் செய்ய முடிவு செய்திருந்த நிலையில், திடீரென ஓமிக்ரான் பரவல் காரணமாக ஊரடங்கு உத்தரவுகள் கடுமையாக்கப்பட்ட நிலையில், படத்தின் வெளியீடு தள்ளி வைக்கப்பட்டது.

அந்த பஞ்சாயத்து வேறு

அந்த பஞ்சாயத்து வேறு

ஆந்திராவில் திடீரென சுகாதாரம் இல்லாத முறையில் இருந்த 400 தியேட்டர்கள் மூடப்பட்டன. மேலும், தியேட்டர்களின் டிக்கெட் விலையை நிர்ணயிப்பதிலும் அரசு கொண்டு வந்த சீர்த்திருந்த நடவடிக்கைகளால் படத்தின் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டதாகவும் பேச்சுக்கள் எழுந்தன. இந்நிலையில், மீண்டும் RRR படத்தை ரிலீஸ் செய்ய படக்குழு முடிவு செய்துள்ளது.

மார்ச்சில் ரிலீஸ்

மார்ச்சில் ரிலீஸ்

ராம்சரண், ஜூனியர் என்டிஆர், ஆலியா பட், அஜய் தேவ்கன், ஸ்ரேயா, சமுத்திரகனி, ஒலிவியா மோரிஸ் என ஏகப்பட்ட நடிகர்கள் நடிப்பில் பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாகி உள்ள ராஜமெளலியின் RRR திரைப்படம் வரும் மார்ச் 18ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

கொரோனா பிரச்சனை பண்ணா

கொரோனா பிரச்சனை பண்ணா

ஆனால், மீண்டும் கொரோனா பரவல் பிரச்சனையை ஏற்படுத்தினால் மார்ச் 18ம் தேதிக்கு பதிலாக ஏப்ரல் 28ம் தேதி படத்தை வெளியிடவும் முடிவு செய்துள்ளதாக இரண்டு தேதிகளை ஆர்.ஆர்.ஆர் படக்குழு அதிகாரப்பூர்வமாக தற்போது அறிவித்துள்ளது. மார்ச் 18ம் தேதியே படம் வெளியாக வேண்டும் என ராஜமெளலி, ராம்சரண், ஜூனியர் என்டிஆர் ரசிகர்கள் பிரார்த்தனை செய்ய ஆரம்பித்துள்ளனர்.

ஏப்ரலில் பெரிய போட்டி

ஏப்ரலில் பெரிய போட்டி

தமிழில் பொன்னியின் செல்வன், பீஸ்ட் உள்ளிட்ட படங்களும் கன்னட படமான கேஜிஎஃப் 2 உள்ளிட்ட படங்களும் ஏப்ரல் ரிலீஸை குறிவைத்துள்ள நிலையில், இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் பெரிய பாக்ஸ் ஆபிஸ் கிளாஷ் நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அஜித்தின் வலிமை மற்றும் சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் படங்கள் மார்ச் மாத ரேசில் கலந்து கொள்ளுமா? அல்லது ஏப்ரலிலேயே அந்த படங்களும் மோதுமா என்பது தெரியாமல் திரையுலகமே குழம்பித் தவித்து வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X