விஜய்க்கு சொன்ன கதையா? சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சூர்யாவின் 40வது படம்.. தரமான சம்பவம் இருக்கு!
சென்னை: சூர்யாவின் 40வது படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.
சூர்யாவின் சூரரைப் போற்று டிரைலர் நாளை காலை 10 மணிக்கு ரிலீசாகிறது.
வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் படத்தில் சூர்யா நடிக்க உள்ள நிலையில், அடுத்த படத்தின் அறிவிப்பும் வெளியாகி உள்ளது.
சூர்யா 40
சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள சூரரைப் போற்று திரைப்படம் ஹீரோவாக அவருக்கு 38வது படம். சூர்யாவின் அடுத்து இரு படங்களின் அறிவிப்புகளும் வெளியாகி ரசிகர்களுக்கு உற்சாகத்தை அளித்துள்ளது. சன் பிக்சர்ஸ் தற்போது சூரயாவின் 40வது படத்தை தயாரிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

அருவா பிரச்சனை
சூர்யாவின் 39வது படமாக அருவா வரும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. ஹரி இயக்கத்தில் இந்த தீபாவளிக்கு அருவா ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்ட நிலையில் கொரோனா காரணமாக அருவா ஷூட்டிங் தள்ளிப் போனது. பின்னர், சில பல பிரச்சனை காரணமாக அந்த படத்தை சூர்யா கைவிட, வாடிவாசல் சூர்யாவின் 39வது படமாக மாறியது.

வெற்றிமாறன் இயக்கத்தில்
வாடிவாசல் எனும் நாவலை மையமாக வைத்து இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வாடிவாசல் திரைப்படம் உருவாக உள்ளது. விரைவில் அந்த படத்தின் ஷூட்டிங்கில் நடிகர் சூர்யா கலந்து கொள்ள ரெடியாகி வருகிறார். வெற்றிமாறன் தனுஷ் கூட்டணியில் வெளியான படங்கள் மாபெரும் வெற்றியை பெற்ற நிலையில், வாடிவாசல் படத்தின் மீது மிகப் பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

யார் இயக்குநர்
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் கார்த்தியின் கடைக்குட்டி சிங்கம் படத்தை இயக்கிய பாண்டிராஜ், கடந்த ஆண்டு சிவகார்த்திகேயனை வைத்து நம்ம வீட்டுப் பிள்ளை படத்தை இயக்கியும் ஹிட் கொடுத்தார். இந்நிலையில், இருக்கு தரமான சம்பவம் என ட்வீட் போட்டுள்ள பாண்டிராஜ் தான் சூர்யாவின் 40வது படத்தை இயக்குகிறார்.

விஜய்க்கு சொன்ன கதையா?
செம என்டர்டெயின்மென்ட்டான கிராமத்து சப்ஜெக்டை இயக்குநர் பாண்டிராஜ் தளபதி விஜய்க்கு சொல்லி இருந்ததாக கொரோனா லாக்டவுனுக்கு முன்னதாக தகவல்கள் வந்தன. ஆனால், அதன் பின்னர் ஏ.ஆர். முருகதாஸ் படத்தில் விஜய் நடிக்க உள்ளார் என்கிற தகவல் வெளியான நிலையில், அந்த கதையில் தான் சூர்யா நடிக்கப் போகிறாரா? என்கிற கேள்வி எழுந்துள்ளது.


Click it and Unblock the Notifications











