பப்லு பிருத்விராஜுடன் பிரிவு.. முதன்முறையாக மனம் திறந்த ஷீத்தல்.. என்ன சொல்லியிருக்கார் தெரியுமா?
சென்னை: நான்கு சுவர்கள் படத்தின் மூலம் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் பப்லு பிருத்விராஜ். அந்தப் படத்துக்கு பிறகு சிறு வயதிலேயே பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருக்கிறார். எம்ஜிஆர், சிவாஜி, ஜெமினி கணேசன், ரஜினிகாந்த், கமல் ஹாசன் என பல ஹீரோக்களுடன் நடித்திருக்கிறார் பிருத்விராஜ். இந்தச் சூழலில் அவர் குறித்து கடந்த சில மாதங்களாக சர்ச்சை ஒன்று ஓடிக்கொண்டிருந்தது. இதுகுறித்து பப்லுவுடன் உறவில் இருந்த ஷீத்தல் தற்போது விளக்கம் அளித்திருக்கிறார்
பப்லு பிருத்விராஜுக்கு சினிமா ஆசை இருந்ததற்கு முன்பே அவரது தந்தைக்கு சினிமா ஆசை இருந்தது. இன்னும் சொல்லப்போனால் காதலிக்க நேரமில்லை படத்தில் முதலில் ஹீரோவாக நடிக்கவிருந்தது அவர்தான். ஆனால் அவரது கண்ணில் ஒரு குறைபாடு இருந்ததால் அதிலிருந்து நீக்கப்பட்டார். இதை மிகப்பெரும் அசிங்கமாக உணர்ந்த அவரது தந்தை பிறகு போக்குவரத்து காவல் துறையில் உதவி ஆய்வாளராக மாறிவிட்டார் . தன்னை அசிங்கப்படுத்திய சினிமாவுக்குள் மகனை கொண்டு வந்துவிட வேண்டும் என்று முடிவெடுத்து எப்படியோ பப்லுவை உள்ளே கொண்டு வந்துவிட்டார்.

முன்னணி நடிகர்: குழந்தை நட்சத்திரமாக இருந்த பப்லு வளர்ந்த பிறகும் படங்களில் நடிக்க ஆரம்பித்தார். அதன்படி அவர் நடித்த பல படங்கள் ஹிட்டாகின. பாண்டிநாட்டு தங்கம், சிகரம், அழகன் என தொடர்ந்து பல படங்களில் நடித்தார். முக்கியமாக 90களில் ஃபேமஸான நடிகராக வலம் வந்தார் அவர். சூழல் இப்படி இருக்க பீனா என்பவரை திருமணம் செய்துகொண்டார்.
விவாகரத்து; லிவிங் டூ கெதர்: பீனாவுக்கும் பப்லுவுக்கும் ஒரு மகன் இருக்கிறார். அவருக்கு ஆட்டிஸம் குறைபாடு இருக்கிறது. இருந்தாலும் இரண்டு பேரும் விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டனர். பீனாவை பிரிந்த அவர் ஷீத்தல் என்பவருடன் லிவிங் டூ கெதரில் இருந்தார். ஆனால் அந்த ரிலேஷன்ஷிப்பும் முடிந்துவிட்டதாக கூறப்பட்டது. இருந்தாலும் அதுகுறித்து எந்த விளக்கமும் பிருத்விராஜோ, ஷீத்தலும் கூறாமல் இருந்தனர்.
ஷீத்தல் விளக்கம்: இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து ஷீத்தல் தற்போது விளக்கம் அளித்திருக்கிறார். அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், "எனது கடந்த கால வாழ்க்கையை பற்றி பலரும் என்னிடம் கேள்விகள் கேட்கிறார்கள். அவர்கள் என் சூழ்நிலையை புரிந்துகொள்ளாமல் நடந்தவற்றை தெரிந்துகொள்ளாமல் தப்பு தப்பாக புரிந்திருக்கிறார்கள். பப்லுவும் நானும் திருமணம் செய்துகொள்ளவில்லை என்பதை புரிந்துகொள்ளுங்கள். நாங்கள் லிவின் ரிலேஷன்ஷிப்பில்தான் இருந்தோம்.
நினைத்தபடி இல்லை: எங்களது உறவு நாங்கள் நினைத்தபடி இருக்கவில்லை. அதனால் இருவரும் இப்போது பிரிந்திருக்கிறோம். இரண்டு பேரும் சேர்ந்திருந்தது மிகவும் மகிழ்ச்சியான தருணமாக அமைந்தது. ஆனால் இது இரண்டு பேரும் பிரிவதற்கான நேரம். எங்களின் இந்த முடிவை அனைவரும் மதித்து எங்களுக்கான நேரத்தை கொடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்" என்று குறிப்பிட்டிருக்கிறார். அவரது இந்தப் பதிவு சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளது.
அனிமல்: பிருத்விராஜ் சமீபத்தில் வெளியான அனிமல் படத்தில் நடித்தார். அடுத்ததாக மிஷ்கின் இயக்கத்தில் ட்ரெய்ன் படத்தில் நடித்துவருகிறார். மேலும் சில படங்களிலும் வெப் சீரிஸ்களிலும் நடித்துவருகிறார் அவர். இவற்றில் ட்ரெய்ன் படம் கண்டிப்பாக அவருக்கு நல்ல பெயரை பெற்றுத்தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











