மெய் சிலிர்க்க வைக்கும் வலிமை விசில் தீம் மியூசிக்.. ஒவ்வொரு ஃபிரேமிலும் அஜித் இன்னாம்மா இருக்காரு!
சென்னை: நடிகர் அஜித் குமாரின் வலிமை விசில் தீம் மியூசிக் வீடியோ தற்போது வெளியாகி உள்ளது.
யுவன் சங்கர் ராஜா இசையில் வலிமை படத்தின் விசில் தீம் மியூசிக் ரசிகர்களை மெய் சிலிர்க்க வைத்துள்ளது.
வரும் பொங்கலுக்கு வெளியாக உள்ள வலிமை படத்தின் டீசரை ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த நிலையில், அதற்கு முன்னதாக தீம் மியூசிக் வெளியாகி உள்ளது.

அஜித்தின் வலிமை
பைக் ஸ்டன்ட் காட்சியின் போது கீழே விழுந்து அடிபட்டு ரத்தம் கொட்டினாலும், அசராது மீண்டும் எழுந்து வந்து அந்த ஷூட்டிங்கை முடித்துக் கொடுத்த அஜித்தின் வலிமை தான் படத்தின் டைட்டிலாகவே மாறியுள்ளது என ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

விசில் தீம்
ஹீரோக்கள், வில்லன்கள் என ஒவ்வொரு மாஸ் நடிகருக்கும் மாஸ் காட்சிக்கும் ஏற்றவாறு இசையமைப்பாளர்கள் தீம் மியூசிக்கை இசையமைத்து வருகின்றனர். மங்காத்தா மற்றும் பில்லா 2 படங்களுக்கு தெறியான தீம் மியூசிக் போட்ட யுவன் சங்கர் ராஜா வலிமை படத்திற்காக வித்தியாசமாக விசில் தீம் மியூசிக் போட்டு கெத்து காட்டி உள்ளார்.

ஒவ்வொரு ஃபிரேமிலும்
செம ஃபிட்டாகவும் முகத்தில் ஒரு ஃபயர் உடனும் நடிகர் அஜித் குமார் இருக்கும் ஒவ்வொரு ஃபிரேமும் ரசிகர்களுக்கு கூஸ்பம்ப்ஸ் கொடுக்கிறது. எப்போடா 2022 பிறக்கும் பொங்கல் வரும் தியேட்டரில் வலிமை பொங்கலை கொண்டாடலாம் என ரசிகர்கள் வெறித்தனமாக காத்திருக்கின்றனர்.
Recommended Video

வேற மாறி வினோத்
பிங்க் படத்தின் ரீமேக்கை சரியான ரீமேக்காக கொடுத்தாலும், தன்னுடைய ஸ்டைல் கதையை கொண்டு நடிகர் அஜித் குமாரை இயக்க வேண்டும் என்கிற ஆசையை முழுக்க இயக்குநர் வினோத் வலிமை படத்தில் கொட்டித் தீர்த்து இருக்கிறார் என்பது படத்தின் ஒவ்வொரு அப்டேட் மற்றும் புரமோஷன் வீடியோக்களை பார்க்கும் போது தெளிவாக தெரிகிறது.
மாஸ் காட்டும் யுவன்
வேற மாறி, அம்மா பாடல் என இதுவரை வலிமை படத்தில் இருந்து வெளியான இரு பாடல்களிலும் தனது முத்திரையை பதித்த இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா வலிமை படத்தின் விசில் தீம் மியூசிக்கிலும் தனது தனித்துவமான சிக்னேச்சரை பதித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











