பொங்கலுக்கு வெளியாகிறது தல அஜித்தின் வலிமை.. தயாரிப்பாளர் போனி கபூர் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

சென்னை: தல அஜித்தின் வலிமை திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும் என தயாரிப்பாளர் போனி கபூர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

இந்த ஆண்டு தீபாவளிக்கு தல அஜித்தின் வலிமை திரைப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாகிறது வலிமை.

இயக்குநர் எச். வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித், ஹூமா குரேஷி, கார்த்திகேயா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகி உள்ள இந்த படம் பைக் ரேஸ் மாஃபியாவை பற்றிய கதையாக உருவாகி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

பொங்கலுக்கு தள்ளிப் போன வலிமை

பொங்கலுக்கு தள்ளிப் போன வலிமை

போனி கபூர் தயாரிப்பில் இயக்குநர் எச். வினோத் இயக்கத்தில் தல அஜித் நடித்துள்ள வலிமை திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகும் என தயாரிப்பாளர் போனி கபூர் தற்போது ட்வீட் போட்டு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

தீபாவளி ரேஸ் இல்லை

தீபாவளி ரேஸ் இல்லை

தல அஜித்தின் வலிமை திரைப்படம் இந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியாகும் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்த ஆண்டே படம் ரிலீஸ் இல்லை என்பது தற்போது உறுதியாகி விட்டது. வரும் தீபாவளிக்கு ரஜினிகாந்தின் அண்ணாத்த மற்றும் சிம்புவின் மாநாடு மட்டுமே போட்டியிடக் காத்திருக்கின்றன.

Recommended Video

Valimai Update | Yuvan Shankar Raja Interview | U1 Records | Tamil Filmibeat
வசூல் பாதிப்பு

வசூல் பாதிப்பு

இந்த ஆண்டு திரையரங்குகளில் இதுவரை வெளியான பெல் பாட்டம், தலைவி போன்ற மெகா பட்ஜெட் திரைப்படங்கள் இந்தியளவில் மிகப்பெரிய வசூல் பாதிப்பை சந்தித்த நிலையில், இயக்குநர் ராஜமெளலியின் ஆர்.ஆர்.ஆர் மற்றும் கேஜிஎஃப் உள்ளிட்ட படங்கள் அடுத்த ஆண்டுக்கு நகர்ந்து விட்டதை போலத்தான் தல அஜித்தின் வலிமை திரைப்படமும் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளிவர உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பீஸ்ட் வர வாய்ப்பில்லை

பீஸ்ட் வர வாய்ப்பில்லை

தளபதி விஜய்யின் பீஸ்ட் படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும் என்றும் தல தளபதி மோதல் பொங்கல் 2022 நடக்கும் என தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், நெருங்கிய வட்டாரங்கள் பீஸ்ட் திரைப்படத்தின் படப்பிடிப்பே இன்னமும் முடியாத நிலையில், பொங்கலுக்கு அந்த படம் வெளியாக வாய்ப்பில்லை என்று திட்டவட்டமாக கூறுகின்றனர்.

தல பொங்கல்

தல பொங்கல்

இந்த ஆண்டு தீபாவளி தலைவர் தீபாவளியாக கொண்டாடப்பட உள்ள நிலையில், அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகை தல பொங்கலாக கொண்டாடப்படும் என ரசிகர்கள் இப்போதே டிரெண்ட் செய்ய தொடங்கி விட்டனர். இயக்குநர் சிவாவுடன் போட்டி வேண்டாம் என அஜித் நினைத்ததால் தான் தீபாவளிக்கு வலிமை ரிலீஸ் செய்யப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.

More from Filmibeat

Read more about: valimai ajith
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X