சத்தமில்லாமல் துவங்கிய தளபதி 65...பிஸியான விஜய்...லேட்டஸ் அதிரடி அப்டேட்
சென்னை : விஜய் நடித்த மாஸ்டர் படம் தியேட்டரில் ரிலீஸ் செய்யப்பட்டு, பாக்ஸ் ஆபிசில் வசூலை அள்ளியது. பிறகு அமேசான் பிரைம் வீடியோவில் வெளியிடப்பட்ட இப்படம், 2021 ல் இந்திய சினிமாக்களின் வசூல் போட்டியில் முன்னணியில் இருந்து வருகிறது.
மாஸ்டர் படத்தின் வெற்றியை விஜய் ரசிகர்கள் கொண்டாடி முடிப்பதற்குள், அவரது அடுத்த படம் குறித்த யூக தகவல்கள் சமூக வலைதளங்களில் உலா வர துவங்கி விட்டன. இவற்றிற்கு முற்றுபுள்ளி வைக்கும் விதமாக தளபதி 65 குறித்த லேட்டஸ்ட் அப்பேட் வெளியாகி உள்ளது.

சத்தமில்லாமல் போட்டோசூட்
இந்நிலையில் தனது அடுத்த படத்தின் வேலைகளை விஜய் சத்தமில்லாமல் துவக்கி உள்ளார். தளபதி 65 படத்திற்காக சென்னையில் உள்ள சன் குரூப் ஸ்டூடியோசில் நடந்த போட்டோசூட்டில் விஜய் பங்கேற்றுள்ளார்.

இறுதியான கூட்டணி
இப்படத்தை டைரக்ட் செய்ய உள்ள நெல்சன் திலீப்குமாரும் அப்போது அங்கிருந்தார். போட்டோசூட் முடிந்ததும் சன் நிறுவன ஊழியர்களுடன் அவர் குரூப் போட்டோவும் எடுத்துக் கொண்டுள்ளார். இதை வைத்து பார்க்கையில் விஜய் - நெல்சன் திலீப்குமார் கூட்டணி இறுதி ஆகி விட்டது என்றே சொல்லலாம்.

விஜய்யுடன் ஜோடி சேரப்போவது யார்
தளபதி 65 படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தான் தயாரிக்க உள்ளது. அனிருத் இசை அமைக்க உள்ளார். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டோ அல்லது ராஷ்மிகாவை நடிக்க வைக்க பேச்சு வார்த்தை நடந்து வருவதாக தளபதி 65 குழுவிற்கு நெருக்கமானவர்கள் கூறுகின்றனர்.

அடுத்தடுத்த அப்டேட்ஸ்
இவர்கள் தவிர யோகி பாபு, புகழ் உள்ளிட்டோரும் முக்கிய கேரக்டர்களில் நடிக்க உள்ளனர். படத்தின் வேலைகள் துவங்கப்பட்டு விட்டதால் இனி தளபதி 65 குறித்த அதிரடி அப்டேட்களை வெகு விரைவில் எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications











