twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    அபிஷேக் பச்சனுக்கு வெப்சீரிஸாவது கை கொடுத்ததா? Breathe: Into The Shadows டிவிட்டர் விமர்சனம்!

    |

    மும்பை: நடிகர் அபிஷேக் பச்சன் மற்றும் நித்யா மேனன் முதன்முதலாக இணைந்து நடித்துள்ள வெப்சீரிஸ் Breathe: Into The Shadows இன்று வெளியாகி இருக்கிறது.

    அமேசன் பிரைமில் நள்ளிரவு 12 மணிக்கு வெளியான இந்த வெப்சீரிஸை, தூங்காமல் விடிய விடிய பார்த்த ரசிகர்கள், தங்களின் டிவிட்டர் விமர்சனங்களை வெளியிட்டுள்ளனர்.

    நடிகர் அமிதாப் பச்சன் அளவுக்கு கான்களை தாண்டி அபிஷேக் பச்சனால் சினிமாவில் சாதிக்க முடியவில்லை. இந்நிலையில், வெப்சீரிஸ் பக்கம் அடியெடுத்து வைத்திருக்கும் அவருக்கு, இந்த வெப்சீரிஸாவது கை கொடுத்ததா என்பதை பார்ப்போம்.

    'அந்தக்' காட்சிதான் எனக்கு சவாலாக இருந்தது.. பாகுபலி படம் குறித்து மனம் திறந்த நடிகை தமன்னா!'அந்தக்' காட்சிதான் எனக்கு சவாலாக இருந்தது.. பாகுபலி படம் குறித்து மனம் திறந்த நடிகை தமன்னா!

    ப்ரீத்: இன்டு தி ஷேடோஸ்

    ப்ரீத்: இன்டு தி ஷேடோஸ்

    நடிகர் மாதவன் நடிப்பில் வெளியான ப்ரீத் வெப்சீரிஸ் மிகப்பெரிய ஹிட் அடித்த நிலையில், அதன் இரண்டாம் பாகமாக Breathe: Into The Shadows வெப்சீரிஸ் உருவாகி இருக்கிறது. இயக்குநர் மயாங் சர்மா இயக்கத்தில் வெளியாகி உள்ள இந்த வெப்சீரிஸில் அபிஷேக் பச்சன், நித்யா மேனன், சயாமி கெர், அமித் சாத் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

    என்ன கதை

    என்ன கதை

    அதே அரைத்த மாவையே திரும்பி அரைத்திருப்பதாகவே பல விமர்சகர்களும் அபிஷேக்கின் இந்த வெப்சீரிஸை கிழித்து தொங்கவிட்டு வருகின்றனர். மகள் சியாவை கடத்தியவர்களை கண்டுபிடிக்கும் மனநல மருத்துவராக அபிஷேக் பச்சனும், அவரது மனைவியாக நித்யா மேனனும் நடித்திருக்கின்றனர். குழந்தையை தேடும் இந்த அடித்து துவைத்த கதைக்கு 12 எபிசோடுகள், வேற மொத்தம் 9 மணி நேரம் ஓடுவதெல்லாம் போரிங் என்றே விமர்சனங்கள் தெறிக்கின்றன.

    பார்க்கலாம்

    பார்க்கலாம்

    வெப்சீரிஸ் என்றாலே ஆபாச வசனங்களும், ஆடை அவிழ்க்கும் காட்சிகளாகவுமே நிறைந்து வழியும் நிலையில், அதெல்லாம் இல்லாமல், ஒரு சீட் எட்ஜ் த்ரில்லரை கொடுக்க முயற்சி செய்ததற்காகவே இந்த டீமை பாராட்ட வேண்டும் என்றும், அபிஷேக் பச்சன் நன்றாக நடிக்க முயற்சி செய்திருக்கிறார். 4 எபிசோடுகளை இதுவரை பார்த்திருக்கிறேன், இன்று இரவுக்குள் முடித்து விடுவேன் என இந்த நெட்டிசன் கருத்து பதிவிட்டுள்ளார்.

    எனக்கும் மகள் இருக்கா

    எனக்கும் மகள் இருக்கா

    முதல் எபிசோடை மட்டும் தான் பார்த்து இருக்கிறேன். கூஸ் பம்ப்ஸ் கொடுக்கிறது. அபிஷேக் சார், வெப்சீரிஸில் உங்களுக்கு உள்ளது போலவே எனக்கும் ஒரு மகள் இருக்கிறாள். நல்ல ரோலில் உங்களை மீண்டும் திரையில் காண்பது மகிழ்ச்சி அளிக்கிறது. உங்களது இந்த முயற்சி வெல்ல வாழ்த்துகிறேன் என இந்த ரசிகர் கூறியுள்ளார்.

    தூங்குவேனா தெரியல

    தூங்குவேனா தெரியல

    அபிஷேக் பச்சனின் தீவிர ரசிகை ஒருவர், இரவு 12 மணி முதல் மூச்சு விடாமல் ப்ரீத் வெப்சீரிஸை பார்த்து வருகிறார். கிட்டத்தட்ட 7 எபிசோடுகளை ஒரே டேக்கில் பார்த்து விட்டேன். இன்று இரவு தூங்குவேனா தெரியலை என தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும், 5வது எபிசோடில் வில்லன் யார் என ரிவீல் ஆனது தொடர்பாக மற்ற நெட்டிசன்கள் பதிவிட்டு வருவதையும், வேண்டாம் ஸ்பாயில் பண்ணாதீங்க என கேட்டு வருகிறார்.

    கலவையான விமர்சனங்கள்

    கலவையான விமர்சனங்கள்

    அபிஷேக் பச்சன், நித்யா மேனன் நடித்துள்ள இந்த ப்ரீத்: இன்டு தி ஷேடோஸ் வெப்சீரிஸுக்கு, நல்லா இருக்கு, ரொம்ப மொக்கை என இரு வேறு பட்ட கமெண்ட்டுகள் குவிந்து வருகின்றன. சிலர் 1 ஸ்டார்களையும், சிலர் 4 ஸ்டார்களையும் கொடுத்து வருகின்றனர். நல்லா இருந்தாலும், புதுசா இல்லை என்பதே பெரும்பான்மையான ரசிகர்களின் கருத்தாக இருப்பது குறிப்பிடத்தக்கது. அபிஷேக் பச்சன் வெப்சீரிஸில் பாஸ் ஆகிவிட்டார்.

    English summary
    Abhishek Bachchan and Nithya Menen starrer Amazon Prime new webseries Breathe: Into the shadows released today. Critics gave a mixed review for the 9 hours long webseries.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X