இதுக்கு மேல ஒரு பாராட்டு வேண்டுமா.. ஒண்டர் உமனை பார்க்க சிரியிடம் உதவி கேட்ட கேப்டன் மார்வெல்!

லாஸ் ஏஞ்சல்ஸ்: நம்ம ஊரில் தல - தளபதி ரசிகர்கள் சண்டை போட்டுக் கொள்வது போல, ஹாலிவுட்டில் டிசி மற்றும் மார்வெல் ரசிகர்களிடையே அடிக்கடி சண்டை எழுவது வழக்கம்.

மார்வெல் தயாரிப்பில் வெளிவந்த கேப்டன் மார்வெல் படம் தான் சூப்பர் என்று மார்வெல் ரசிகர்களும், ஒண்டர் உமன் தான் பெஸ்ட் என டிசி ரசிகர்கள் சண்டையிட்டு வருகின்றனர்.

இந்நிலையில், சமீபத்தில் வெளியான ஒண்டர் உமன் 1984 டிரைலரை பார்த்த கேப்டன் மார்வெல் நடிகை பிரை லார்சன் போட்ட ட்வீட் ஹாலிவுட் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

சூப்பர் ஹீரோயின்

சூப்பர் ஹீரோயின்

சூப்பர் ஹீரோ படங்களுக்காக ஆயிரக்கணக்கான கோடிகளை வாரி இறைத்து ஹாலிவுட்டில் மார்வெல் மற்றும் டிசி படங்களை தயாரித்து வருகின்றன. ஆண்களை போலவே பெண்களும் சூப்பர் ஹீரோ கதாபாத்திரங்களில் நடிக்கத் துவங்கியுள்ளனர். அதில், மார்வெல் உலகில் கேப்டன் மார்வெல் முக்கியமானவர். அதேபோல டிசியில் ஒண்டர் உமனுக்கு பயங்கர ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது.

கேப்டன் மார்வெல்

கேப்டன் மார்வெல்

ஹாலிவுட் நடிகை பிரை லார்சன் கேப்டன் மார்வெலாக நடித்து வருகிறார். அவர் நடிப்பில் இந்த ஆண்டு வெளியான கேப்டன் மார்வெல் மற்றும் அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் திரைப்படங்கள் வசூலில் உலகளவில் மிகப்பெரிய சாதனைகளை படைத்துள்ளன. மார்வெல் உலகில் ஆண் சூப்பர் ஹீரோக்களுக்கு இருக்கும் சக்தியை விட பல மடங்கு சக்தியை கொண்டவராக கேப்டன் மார்வெல் உருவாக்கப்பட்டுள்ளார்.

ஒண்டர் உமன்

ஒண்டர் உமன்

2017ம் ஆண்டு வெளியான ஒண்டர் உமன் மற்றும் ஜஸ்டிஸ் லீக் படத்தில் ஒண்டர் உமனாக கேல் கடோட் நடித்துள்ளார். ஒண்டர் உமன் படத்தின் இரண்டாம் பாகமாக உருவாகும் ஒண்டர் உமன் 1984 படம் 80களின் பின்னணியில் ப்ரீக்குவலாக உருவாக்கப்பட்டு வருகிறது. கேல் கடோட் நடிப்பில் உருவாகி வரும் இந்த படம் அடுத்த ஆண்டு ஜூன் மாதம் வெளியாகிறது.

டைம் மெஷின்

டைம் மெஷின்

கடந்த ஞாயிற்றுக் கிழமை வெளியான ஒண்டர் உமன் 1984 டிரைலர் உலகளவில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது. அதிலும், கேப்டன் மார்வெல் நடிகை பிரை லார்சன் போட்ட அந்த டைம் மெஷின் ட்வீட்டுக்கு பாராட்டுக்கள் குவிகின்றன.

சிரி உதவி செய்யுமா?

ஆப்பிளின் 'சிரி'யிடம் 2020 ஜூன் 5ம் தேதிக்கு டைம் டிராவல் செய்ய என்ன செய்ய வேண்டும் என ஒண்டர் உமன் படத்தை பார்க்கும் ஆவலை பிரை லார்சன் வெளிக்காட்டிய விதம் டிசி மற்றும் மார்வெல் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

More from Filmibeat

Read more about: hollywood marvel
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X