ஹேய் சினாமிகா.. நடிகை காஜல் அகர்வாலுக்கு சூப்பரா பிறந்தநாள் வாழ்த்து சொன்ன பிருந்தா மாஸ்டர்!
சென்னை: நடிகை காஜல் அகர்வாலின் 36வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது.
காஜல் அகர்வால், துல்கர் சல்மான், அதிதி ராவ் உள்ளிட்ட பிரபல நடிகர்களை வைத்து ஹேய் சினாமிகா படத்தை இயக்கி வரும் பிருந்தா மாஸ்டர் காஜல் அகர்வாலை வாழ்த்தி உள்ளார்.
மேலும், ஹேய் சினாமிகா படப்பிடிப்பு தளத்தில் கேக் வெட்டி கொண்டாடிய போட்டோக்களையும் ஷேர் செய்துள்ளார்.

காஜல் அகர்வால் பிறந்தநாள்
1985ம் ஆண்டு ஜூன் மாதம் மும்பையில் பிறந்தவர் நடிகை காஜல் அகர்வால். தமிழ், தெலுங்கு, இந்தி என பல்வேறு மொழிகளில் பல படங்களில் நடித்து கலக்கிய இவர் இன்று தனது 36வது பிறந்தநாளை கணவர் மற்றும் குடும்பத்தாருடன் கொண்டாடி வருகிறார்.

பிருந்தா மாஸ்டர் வாழ்த்து
நடிகை காஜல் அகர்வாலின் பிறந்தநாளை முன்னிட்டு ஏகப்பட்ட பிரபலங்கள் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். காஜல் அகர்வாலின் படம் மூலம் இயக்குநராக அறிமுகமாகவுள்ள நம்ம பிருந்தா மாஸ்டரும் சூப்பரான ஒரு வாழ்த்தை நடிகை காஜல் அகர்வாலுக்கு கூறியுள்ளார்.

ஹேய் சினாமிகா
இயக்குநர் அவதாரம் எடுத்துள்ள பிருந்தா மாஸ்டர் துல்கர் சல்மான், காஜல் அகர்வால் மற்றும் அதிதி ராவை வைத்து ஹேய் சினாமிகா எனும் படத்தை இயக்கி வருகிறார். அந்த படத்தின் படப்பிடிப்பு தளத்தில் கேக் வெட்டிக் கொண்டாடிய புகைப்படத்தை ஷேர் செய்து காஜல் அகர்வாலுக்கு பிறந்தநாள் வாழ்த்துக் கூறியுள்ளார்.

ஹார்ட் வொர்க்கர்
நடிகை காஜல் அகர்வால் கடின உழைப்பாளி என்றும், ரொம்பவே டெடிகேடட் பர்சன் எனவும் இயக்குநரும் நடன இயக்குநருமான பிருந்தா மாஸ்டர் பாராட்டி பதிவிட்டுள்ள ட்வீட் வைரலாகி வருகிறது. மேலும், பல பிரபலங்களும் ரசிகர்களும் காஜல் அகர்வாலை வாழ்த்தி ஹாஷ்டேக்கை எல்லாம் டிரெண்ட் செய்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











