புறக்கணிக்கப்படுகிறாரா பூஜா சர்மா? மகாபாரதத்தில் பாஞ்சாலியாக கலக்கியவருக்கா இந்த நிலைமை!
மும்பை: பாலிவுட்டில் சுஷாந்த் சிங் மரண பிரச்சனையே இன்னும் முடியாத நிலையில், தற்போது பூஜா சர்மா பிரச்சனை புயலாக கிளம்பி இருக்கிறது.
யார் இந்த பூஜா சர்மா என புரியாமல் குழம்பித் தவிக்கிறீர்கள் என்றால், இதோ உங்கள் குழப்பத்தை போக்குகிறோம்..
விஜய் டிவியில் சமீபத்தில் டப் செய்யப்பட்டு, லேட்டஸ்ட் வெர்ஷனாக வெளியான மகாபாரதத்தில் பாஞ்சாலியாக நடித்தவர் தான் பூஜா சர்மா.

பூஜா சர்மா
மகாதேவ் சீரியலில் மூலம் கடந்த 2011ம் ஆண்டு டிவி சீரியல் நடிகையாக அறிமுகமானவர் பூஜா சர்மா. 2013 முதல் 2014 வரை வெளியான மகாபாரதம் டிவி சீரியலில் திரெளபதியாக நடித்த இவருக்கு, ஏகப்பட்ட விருதுகளும் குவிந்தன. 2017 முதல் 2018ம் ஆண்டு வரை கலர்ஸ் தொலைக்காட்சியில் வெளியான மகா காளி பக்தி தொடரில் ருத்ர காளியாக நடித்து மிரட்டியவர் தான் பூஜா சர்மா.

புதிய வாய்ப்புகள் இல்லை
பாலிவுட்டில் நெப்போடிசம் பிரச்சனை பூதாகரமாக வெடித்து வரும் நிலையில், தற்போது, கடந்த இரண்டு ஆண்டுகளாக நடிகை பூஜா சர்மா, எந்த ஒரு தொலைக்காட்சி சீரியல்களிலும், ஒப்பந்தம் செய்யப்படாத தகவல் வெளியாகி ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. இந்தி சீரியல்களில் இருந்து அவர் புறக்கணிக்கப்படுகிறாரா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

பூஜாவை திரும்ப கொண்டு வாங்க
இந்நிலையில், இன்று திடீரென இந்தி டிவி சீரியல் ரசிகர்கள், நடிகை பூஜா சர்மா இல்லாத டிவி தொடர்கள் போர் அடிப்பதாகவும், அவரை மீண்டும் கொண்டு வாங்க என்றும், அவரை டிவி சீரியல்களை தயாரிக்கும் தயாரிப்பாளர்கள் புறக்கணிக்கக் கூடாது என்றும் வலியுறுத்தி "POOJA SHARMA" என்ற ஹாஷ்டேக்கை டிரெண்ட் செய்து வருகின்றனர்.

வேற லெவல் ஆக்டிங்
அழகு, காதல், கோபம், ரெளத்திரம் என அனைத்து விதமான எக்ஸ்பிரஷன்களை கொடுக்கக் கூடிய நடிகை பூஜா சர்மாவுக்கா இந்த நிலைமை என்றும், அவரை மீண்டும் டிவி சீரியல்களில் கொண்டு வர வேண்டும் என ரசிகர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். நடிகை பூஜா சர்மா கடைசியாக சனி பகாவான் சீரியலில் மகா காளியாக நடித்து இருந்தார்.


Click it and Unblock the Notifications











