twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    செம்பாவும் வேணாம், சனமும் வேணாம், அக்கா தான் வேணும்: ரசிகர்கள் கோரிக்கை

    By Siva
    |

    சென்னை: வனிதா இல்லாமல் பிக் பாஸ் நிகழ்ச்சியை பார்க்க முடியவில்லை என்று பார்வையாளர்கள் புலம்பிக் கொண்டிருக்கிறார்கள்.

    பிக் பாஸ் 3 வீட்டில் இருந்தபோது வனிதா விஜயகுமாரை பஜாரி என்று விளாசினார்கள் பார்வையாளர்கள். தைரியமான பெண்ணுக்கு பெயர் பஜாரி என்றால் நான் பஜாரியாக இருப்பதில் பெருமைப்படுகிறேன் என்று ஒரே போடாக போட்டுள்ளார் வனிதா.

    இந்நிலையில் வனிதா இல்லாமல் பிக் பாஸ் நிகழ்ச்சி கொடூர மொக்கையாக இருப்பதாக புகார் எழுந்துள்ளது.

    வனிதா

    வனிதா பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்படுகிறார் என்று அறிந்ததுமே பார்வையாளர்கள் #Novanithanobiggboss என்ற ஹேஷ்டேகுடன் ட்வீட் செய்தார்கள். தற்போதோ வனிதா இல்லாமல் ரொம்ப போர் அடிக்குது பிக் பாஸ் அவரை மீண்டும் அழைத்து வாங்க என்று #bringbackvanitha என்ற ஹேஷ்டேகுடன் ட்வீட் செய்கிறார்கள். வனிதா மட்டும் போதும் வேறு யாரும் வேண்டாம் என்று தெரிவித்துள்ளனர்.

    ஓட்டு

    வனிதா பிக் பாஸ் வீட்டில் இருந்தபோது இதே பார்வையாளர்கள், அவருக்கு அவர் குடும்பத்தாரை தவிர யாரும் ஓட்டும் போட மாட்டார்கள். ஏனென்றால் வனிதா பிக் பாஸ் வீட்டில் இருக்கும் வரை தான் அவர்களால் நிம்மதியாக இருக்க முடியும். பிக் பாஸ் 3 வரலாற்றிலேயே வனிதா போன்று ஒரு மோசமான போட்டியாளரை பார்க்கவில்லை என்றார்கள். ஆனால் தற்போது வனிதாவை மிஸ் பண்ணுவதாக கூறுகிறார்கள்.

    செம்பா

    செம்பா

    ஒயில்டு கார்டு மூலம் ராஜா ராணி சீரியல் புகழ் செம்பா என்கிற ஆலியா மானசாவோ அல்லது பிக் பாஸ் வீட்டில் இருக்கும் தர்ஷனின் காதலியான நடிகை சனம் ஷெட்டியோ வர வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் பார்வையாளர்களோ எங்களுக்கு செம்பாவும் வேண்டாம், சனம் ஷெட்டியும் வேண்டாம் வனிதா அக்கா தான் வேண்டும் என்று அடம் பிடிக்கிறார்கள்.

    சண்டை

    சண்டை

    வனிதா அக்கா மீது அம்புட்டு பாசமாய்யா உங்களுக்கு என்றால் அது தான் இல்லை என்கிறார்கள். வனிதா இருந்தால் அடிக்கடி ஏதாவது சண்டை நடக்கும், எங்களுக்கும் பொழுது போகும். அவர் இல்லாமல் சண்டையே இல்லாமல் அமைதியாக உள்ளது. இந்த கவின் காதல் என்ற பெயரில் எங்களை டார்ச்சர் செய்கிறார். கவினை விரட்டிவிட்டு வனிதாவை அழைத்து வந்தால் நன்றாக இருக்கும் என்கிறார்கள் பார்வையாளர்கள்.

    English summary
    Bigg Boss 3 viewers are missing Vanitha Vijayakumar big time. They have requested Bigg Boss to bring her back.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X