கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த நடிகை பலி.. தொடரும் உயிரிழப்பால் அதிர்ச்சியாகும் திரையுலகம்!

By

லண்டன்: கொரோனா வைரஸ் பாதிப்புக்காக சிகிச்சை பெற்று வந்த பிரபல நடிகை உயிரிழந்துள்ளார்.

உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது, கொரோனா வைரஸ். இது பிரபலங்களையும் விட்டு வைக்கவில்லை.

கொரோனாவுக்கு திரை பிரபலங்கள் தொடர்ந்து உயிரிழந்து வருகின்றனர். கடந்த சில நாட்களாக இந்த எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

ஹாலிவுட் நடிகர்

ஹாலிவுட் நடிகர்

ஹாலிவுட் நடிகர் மார்க் பிளம், கடந்த சில நாட்களுக்கு முன், உயிரிழந்தார். பிரபல ஜப்பானிய காமெடி நடிகர் கென் ஷிமுரா, கொரோனா வைரஸால் உயிரிழந்தார். கடந்த மாதம் 23 ஆம் தேதி, அவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது தெரியவந்ததை அடுத்து, டோக்கியோவில் சிகிச்சை பெற்று வந்த அவர் உயிரிழந்தார்.

ஸ்டார் வார்ஸ் நடிகர்

ஸ்டார் வார்ஸ் நடிகர்

பின்னர், ஸ்டார் வார்ஸ் படத்தில் நடித்த ஆண்ட்ரூ ஜாக் கொரோனாவுக்கு பலியானார். அவருக்குப் பின், எட்டி லார்ஜ் என்ற பிரிட்டீஷ் காமெடி நடிகர், சிகிச்சை பலனின்றி லண்டனில் உயிரிழந்தார். இதையடுத்து அமெரிக்க நடிகையும் எழுத்தாளருமான பேட்ரிசியா போஸ்வொர்த், நியூயார்க்கில் கடந்த சில நாட்களுக்கு முன் மரணமடைந்தார்.

ஜாய் பெனடிக்ட்

ஜாய் பெனடிக்ட்

இந்நிலையில் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் பட நடிகை லீ ஃபியர்ரோ கொரோனா பாதிப்பில் உயிரிழந்தார். இவர் ஸ்பீல்பெர்க்கின் ஜாஸ், ஜாஸ்: த ரிவெஞ்ச், த மிஸ்ட் ஓவர் டேல்ஸ் உட்பட சில படங்களில் நடித்துள்ளார். பிரபல ஹாலிவுட் நடிகர் ஜாய் பெனடிக்ட், கொரோனா பாதிப்பால் சிகிச்சை பலனின்றி கடந்த 4 ஆம் தேதி உயிரிழந்தார்.

பிரிட்டீஸ் நடிகை

பிரிட்டீஸ் நடிகை

தனது பிறந்த நாளுக்கு ஒருவாரம் முன்னதாக இறந்துள்ள இவர், ஜேம்ஸ் கேமரூனின் சயின்ஸ்பிக்சன் படமான ஏலியன்ஸ், த ஒயிட் நைட், த அபோகலிப்ஸ் கோட், த டார்க் நைட் ரெய்சஸ் உட்பட பல படங்களில் நடித்துள்ளார். பல டிவி. தொடர்களிலும் நடித்துள்ளார். இந்நிலையில், இவர்களை அடுத்து பிரபல பிரிட்டீஸ் நடிகை ஹிலாரி கீத் இப்போது உயிரிழந்துள்ளார்.

கொரோனா சிகிச்சை

கொரோனா சிகிச்சை

இவர் விட்ச்பைன்டர் ஜெனரல் என்ற ஹாரர் படம், த பாடி ஸ்டீலர்ஸ், டு ஜென்டிமென் ஷேரிங், கிரை ஆப் பன்ஷி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். ஏராளமான டிவி தொடர்களிலும் நடித்திருக்கிறார். கொரோனாவுக்காக சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். அவருக்கு வயது 74. இதை அவரது பேரன் அலெக்ஸ் வில்லியம்ஸ் உறுதி செய்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X