Tom Wilkinson passed away: பிரிட்டிஷ் நடிகர் டாம் வில்கின்சன் காலமானார்.. சோகத்தில் ரசிகர்கள்!
லாஸ் ஏஞ்சல்: இரண்டு முறை ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட பிரிட்டிஷ் நடிகர் டாம் வில்கின்சன் நேற்று காலமானார். அவருக்கு வயது 75.
ஹாலிவுட் நடிகரான டாம் வில்கின்சன் 1948ம் ஆண்டு பிறந்தார். கேன்டர்பரியில் உள்ள கென்ட் பல்கலைக்கழகத்தில் ஆங்கிலம் மற்றும் அமெரிக்க இலக்கியத்தில் பட்டம் பெற்ற இவர், பல்கலைக்கழகத்தில் படித்துக் கொண்டு இருக்கும் போதே, நடிப்பில் இயக்கத்தில் ஆர்வம் கொண்டவராக இருந்தார். இதையடுத்து 1976ம் ஆண்டு ஜோசப் கான்ராட் சிறு நாவலான தி ஷேடோ லைனைத் தழுவி எடுக்கப்பட்ட த்ரில்லர் ஸ்முகா படத்தில் நடித்து சினிமாவில் அறிமுகமானார்.

தி ஃபுல் மான்டி, ஷேக்ஸ்பியர் இன் லவ் மற்றும் தி பெஸ்ட் எக்ஸோடிக் மேரிகோல்ட் ஹோட்டல் போன்ற படங்களில் நடித்து பெயர் பெற்ற டாம் வில்கின்சன் 130க்கும் மேற்பட்ட திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி தொடர்களில் நடித்தள்ளார். இரண்டு முறை ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இவருக்கு BAFTA, ஒரு எம்மி மற்றும் கோல்டன் குளோப் விருதுகளை வென்றுள்ளார்.
பிரிட்டிஷ் நடிகர் டாம் வில்கின்சன்: டாம் வில்கின்சனின் 50 ஆண்டுகால திரைப்பயணத்தில் இவர் ஜனாதிபதி ஜான் எஃப். கென்னடியின் தந்தையாக நடித்ததற்காக தி கென்னடிஸில் எம்மி விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டார். மேலும், ஜான் ஆடம்ஸ் என்ற குறுந்தொடரில் பெஞ்சமின் ஃபிராங்க்ளின் கதாபாத்திரத்தை ஏற்று நடித்ததற்காக எம்மிக்கு பரிந்துரைக்கப்பட்டார்.

ரசிகர்கள் இரங்கல்: 75 வயதான டாம் வில்கின்சன் நேற்று உயிரிழந்ததாக அவரது குடும்பத்தினர் அறிக்கை வெளியிட்டுள்ளனர். இவரது மறைவுக்கு பலரும் எக்ஸ் தள பக்கத்தில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 2007ஆம் ஆண்டு வெளியான த்ரில்லர் மைக்கேல் கிளேட்டன் படத்தில் வில்கின்சனுடன் இணைந்து நடித்த நடித்த ஜார்ஜ் குளூனி, டாம் வில்கின்சன் ஒரு நேர்த்தியின் உருவகம் என்று பாராட்டினார்.
மேலும், டாம் வில்கின்சன் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் வெரைட்டி இதழ் இரங்கல் தெரிவித்துள்ளது அதில், டாம் ஒவ்வொரு திட்டத்தையும் சிறப்பாக செய்தார். ஒவ்வொரு நடிகரையும் சிறப்பாக உருவாக்கினார் என பதிவிட்டுள்ளது. இப்படி பலரும் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications