twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஆர்ஆர்ஆர் படம் இனவெறியை தூண்டுகிறதா...இங்கிலாந்து பேராசிரியரை வெளுத்து வாங்கும் இந்தியர்கள்

    |

    லண்டன் : 2022 ம் ஆண்டில் வெளியான படங்களில் உலகம் முழுவதும் வசூல் சாதனை படைத்த படங்களில் ஒன்று டைரக்டர் ராஜமெளலி இயக்கிய ஆர்ஆர்ஆர். மார்ச் மாதம் ரிலீசான இந்த படம் இதுவரை 1200 கோடிகளை வசூல் செய்துள்ளது.

    ராம் சரண், ஜுனியர் என்டிஆர், ஆலியா பட் உள்ளிட்டோர் நடித்த இந்த படம் பான் இந்தியா படமாக 5 மொழிகளில் ரிலீஸ் செய்யப்பட்டது. தியேட்டரில் மட்டுமின்றி ஓடிடியிலும் இந்த படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

    1920 களில் ஐதராபாத்தில் பிரிட்டிஷ் அரசை எதிர்த்து போராடி சுதந்திர போராட்ட வீரர்கள் இருவரின் கதையை மையமாக வைத்து ராஜமெளலி இந்த படத்தை இயக்கி இருந்தார்.

    நோட்டீஸ் அனுப்பிய நெட்ஃபிளிக்ஸ்? நயன்தாரா - விக்னேஷ் சிவனுக்கு இப்படி ஒரு பிரச்சனையா? நோட்டீஸ் அனுப்பிய நெட்ஃபிளிக்ஸ்? நயன்தாரா - விக்னேஷ் சிவனுக்கு இப்படி ஒரு பிரச்சனையா?

    ஆர்ஆர்ஆர் ஐ பாராட்டிய திரைக்கதை எழுத்தாளர்

    ஆர்ஆர்ஆர் ஐ பாராட்டிய திரைக்கதை எழுத்தாளர்

    சமீபத்தில் நெட்ஃபிளிக்சில் உலகம் முழுவதும் ரிலீஸ் செய்யப்பட்ட ஆர்ஆர்ஆர் படத்தை பார்த்து விட்டு டாக்டர் ஸ்டிரேஞ்சர் படத்தின் திரைக்கதை எழுத்தாளர் Jon Spaihts, ஆர்ஆர்ஆர் படத்தை பாராட்டி ட்வீட் போட்டிருந்தார். இந்த படத்தை பார்த்து விட்டு இரண்டு நாட்கள் வரை தன்னால் அதை மறக்க முடியவில்லை என குறிப்பிட்டிருந்தார்.

    ஆர்ஆர்ஆர் ஆஸ்கருக்காக பரிந்துரை

    ஆர்ஆர்ஆர் ஆஸ்கருக்காக பரிந்துரை

    இதற்கிடையில் சர்வதேச திரைப்படங்கள் பிரிவில் 2023 ம் ஆண்டின் ஆஸ்கர் விருதிற்காகவும் ஆர்ஆர்ஆர் படம் பரிந்துரைக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்தியா சார்பிலும் அழுத்தம் தந்து ஆர்ஆர்ஆர் படத்திற்கு ஆஸ்கர் விருது கிடைக்க முயற்சி மேற்கொள்ள வேண்டும் என பலரும் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

    ஆர்ஆர்ஆர் ஐ விமர்சித்த இங்கிலாந்து பேராசிரியர்

    ஆர்ஆர்ஆர் ஐ விமர்சித்த இங்கிலாந்து பேராசிரியர்

    இந்த சமயத்தில் இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் வரலாற்று பேராசிரியரும், பிரபலமான எழுத்தாளருமான Robert Tombs, ஆர்ஆர்ஆர் படத்தையும் நெட்ஃபிளிக்ஸ் நிறுவனத்தையும் மிக கடுமையாக விமர்சித்து The Spectator என்ற பத்திரிக்கையில் கட்டுரை ஒன்றை எழுதி உள்ளார். ஆர்ஆர்ஆர் படத்தில் இருந்து பிரிட்டிஷ் ஆட்சி பற்றி நெட்ஃபிளிக்ஸ் தவறாக புரிந்து கொண்டது என்ன என்ற தலைப்பில் இந்த கட்டுரையை அவர் வெளியிட்டுள்ளார்.

    ஆர்ஆர்ஆர் இனவெறியை தூண்டுகிறதா

    ஆர்ஆர்ஆர் இனவெறியை தூண்டுகிறதா

    ஆர்ஆர்ஆர் படம் பிரிட்டிஷ் அரசிற்கு எதிராக என்ன தவறாக புரிந்து கொண்டது என்ற தலைப்பில் அவர் எழுதி உள்ள கட்டுரையில், ஆர்ஆர்ஆர் படம் பிரிட்டிஷிற்கு எதிரான இனவெறியை தூண்டுவதாக எடுக்கப்பட்டுள்ளது. தவறான வரலாற்று வெற்றியை நெட்ஃபிளிக்ஸ் ஊக்குவிக்கிறது. இந்த படத்தை வெளியிட நெட்ஃபிளிக்சிற்கு வெட்கமாக இல்லையா.

    தவறான வரலாற்று உண்மை

    தவறான வரலாற்று உண்மை

    கவர்னர் ஸ்காட் மற்றும் அவரது மனைவியை இந்த படத்தில் மோசமாக காட்டி உள்ளனர்.இந்திய அரசியல் மற்றும் கலாச்சாரத்தில் ஆதிக்கம் செலுத்தும் பிற்போக்கான வன்முறையான இந்து தேசியவாதம் மோடி அரசால் தூண்டப்படுவதை ஆர்ஆர்ஆர் படத்தில் காட்டி உள்ளனர் என குறிப்பிட்டுள்ளனர்.

    பொங்கி எழுந்த இந்தியர்கள்

    பொங்கி எழுந்த இந்தியர்கள்

    இந்த பார்த்த இந்தியர்கள் சோஷியல் மீடியாவில் Robert Tombs க்கு பதிலடி கொடுத்து வருகின்றனர். 1947 ல் இந்தியாவில் இருந்து சொல்லும் போது பிரிட்டிஷ் அரசு இந்தியாவில் இருந்து கொள்ளையடித்துச் சென்ற கோடிக்கணக்கான சொத்துக்கள் பற்றி முதலில் படியுங்கள். வின்ஸ்டன் சர்ச்சிலின் கொள்கைகளால் இந்தியாவில் ஏற்பட்ட பஞ்சம், அதன் விளைவாக எத்தனை லட்சம் உயிர்கள் 1940 ல் போனது என்று தெரியுமா என இந்தியர்கள் கேட்டு வருகின்றனர்.

    English summary
    Robert Tombs laments that the SS Rajamouli-directed magnum opus promotes racism against the British.RRR panders to the reactionary and violent Hindu nationalism that is coming to dominate Indian culture and politics, fanned by the Modi government.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X