Don't Miss!
- News
லட்டு எல்லாம் பழசு.. பிரசாதமாக "பர்கர், சாண்ட்விச்" தரும் சென்னை கோயில் -இன்னும் பல விசயம் இருக்கு
- Sports
"ஒரே கல்லில் 2 மாங்காய்" ஒரே இன்னிங்ஸில் தோனி - சச்சின் சாதனை தகர்த்த ரிஷப் பண்ட்.. எப்படி தெரியுமா
- Finance
ஒரு கப் டீ 20, சேவை கட்டணம் ரூ.50.. மொத்த கட்டணம் ரூ.70.. சதாப்தி ரயில் பயணிகள் ஷாக்!
- Automobiles
டாடாவிற்கு பக்கத்துல கூட யாரும் வர முடியாது! மாருதிலாம் சீன்லயே இல்ல! விஷயத்தை கேக்கும்போதே ஆச்சரியமா இருக்கு!
- Lifestyle
இந்த வயசுக்கு மேல ஆண்களுக்கு இதய நோய் மற்றும் புற்றுநோய் ஏற்பட வாய்ப்பு ரொம்ப அதிகமாம்.. ஜாக்கிரதை!
- Technology
Samsung: கொஞ்ச காசு இப்போ கட்டுங்க, மிச்சம் 12 மாசம் கழிச்சு கொடுங்க.. ஸ்மார்ட்TV மீது சலுகை!
- Travel
அழகும் சாகசமும் நிறைந்த சுதாகட் கோட்டையில் ட்ரெக்கிங் செய்யலாம் வாருங்கள்!
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
திருமண நாளில் உயிரிழந்த பிரிட்டிஷ் பாடகரின் காதலி...நொறுங்கிப் போன பாடகர்
லண்டன் : பிரிட்டிஷ் பாடகர் டாம் மானின் காதலி டேனிலி ஹாம்ப்சன், திருமணம் நாளில் உயிரிழந்த சம்பவம் டாம் மானை மட்டுமின்றி அனைவரையும் கலங்க வைத்துள்ளது.

பிரிட்டிஷ் பாடகரும், பாடலாசிரியருமான டாம் மான், தனது மகன் போவியுடன், காதலி ஹாம்ப்சனின் போட்டோவுடன் இருப்பது போன்ற போட்டோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். அதோடு உருக்கமான நீண்ட பதிவையும் அவர் பகிர்ந்துள்ளார்.
28 வயதாகும் டாம் தனது பதிவில், நான் இந்த வார்த்தைகளை எழுதுகிறேன் என்பதை என்னால் நம்ப முடியவில்லை. ஆனால் என்னுடைய டார்லிங் டேனிலி, னெ்னுடைய சிறந்த தோழி, எனக்கு எல்லாமும், வாழ்க்கையின் ஒட்டுமொத்த அன்புமாக இருந்த அவர் ஜுன் 18 ம் தேதி, சனிக்கிழமை காலை உயிரிழந்தார்.
எங்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சியான நாளாக இருக்கும் என நினைத்த நாள் மொத்தமாக தலைகீழாக மாறி, அத்தனையும் முடிந்து விட்டது. நான் கண்ணீர் கடலில் மூழ்கியதை போல் அழுதேன். நாங்கள் முதல் முறையாக சந்தித்தது, நடனமாடியது என எதையும் மறக்க முடியாது. என்னுடைய ஒட்டுமொத்த உலகமே நீ தான் என்பது எனக்கும் தெரியும். உனக்கும் தெரியும். என் வாழ்வில் கிடைத்த மிகச் சிறப்பான விஷயம் என்றால் அது டேனிலி தான்.
என்னுடைய ஒட்டுமொத்த காதலையும் சொல்வதின் அடையாளமாக இந்த மோதிரத்தை நான் அணிவிப்பேன் என நினைத்தேன். ஆனால் இப்படி ஆகும் என நான் நினைக்கவில்லை. ஹாம்ப்சனின் மறைவால் மொத்தமாக நொறுங்கி போய் விட்டேன். ஒரு தந்தையாக போவியை நல்லபடியாக வளர்க்க என்னுடைய அத்தனையையும் கொடுப்பேன் என உறுதி அளிக்கிறேன்.
நாக
சைதன்யாவை
புகழ்ந்த
நடிகை..
ஏற்கனவே
பல
பிரச்சனை..
இதுல
இது
வேறயா
?
அவனின் அம்மா எவ்வளவு அற்புதமானவள் என்பதை நிச்சயம் அவன் தெரிந்து கொள்ளும் படி செய்வேன். உள்ளேயும், வெளியேயும் மிகவும்அழகானவர் என்றால் அது டேனிலி தான். மிக அற்புதமான ஆத்மா. உனது பிரிவை எப்போதும் நினைத்துக் கொண்டிருப்பேன். நான் எங்கு இருந்தாலும் அந்த இடத்தை வெளிச்சமாக்குவது நீ தான். நீ இல்லாமல் என் உலகம் என்பது எதுவும் இல்லை என மிக உருக்கமாக குறிப்பிட்டுள்ளார்.
ஹாம்ப்சன் மற்றும் டாம் இருவரும் பல ஆண்டுகளாக காதலித்து வந்தனர். 2020 ம் ஆண்டு செப்டம்பர் மாதம் நடைபெறுவதாக இருந்த இவர்களின் திருமணம் கொரோனா பேரிடர் காரணமாக தள்ளிவைக்கப்பட்டது. கொரோனா முடிந்ததும் திருமணம் செய்யலாம் என முடிவு செய்த இந்த ஜோடிக்கு 2021 ம் ஆண்டு அக்டோபர் மாதம் போவி என்ற மகன் பிறந்தான்.
இந்நிலையில் ஜுன் 18 ம் தேதியன்று இருவரும் திருமணம் செய்ய முடிவு செய்திருந்தனர். ஆனால் அன்று காலை ஹாம்ப்சன் திடீரென மரணமடைந்தார். 34 வயதாகும் ஹாம்ப்சனுக்கு உடல் ரீதியாக எந்த பிரச்சனையும் இல்லை. இருந்தாலும் அவரின் இந்த திடீர் மரணத்திற்கு என்ன காரணம் என வெளியிடப்படவில்லை.