கவனத்தை ஈர்த்த ப்ரோ டாடி படத்தின் மேக்கிங் வீடியோ... எல்லாரும் எவ்ளோ ஜாலியா இருக்காங்க பாருங்க!

திருவனந்தபுரம் : மலையாள திரையுலகின் முன்னணி நடிகர் பிரித்விராஜின் இயக்கத்தில் வெளியாகியுள்ள படம் ப்ரோ டாடி.

முன்னதாக லூசிபர் என்ற அழுத்தமான கதையை கொடுத்த பிரித்வி தற்போது கையிலெடுத்திருப்பது காமெடி களத்தை.

படம் வெளியாகி சிறப்பான விமர்சனங்களை பெற்றுள்ளது.

இயக்குநர் பிரித்விராஜ்

இயக்குநர் பிரித்விராஜ்

மோகன்லாலுடன் இணைந்து லூசிபர் என்ற படத்தின்மூலம் இயக்குநராக மலையாள சினிமாவில் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார் நடிகர் பிரித்விராஜ். தனக்கு சிறப்பாக நடிக்க மட்டுமல்ல சிறப்பாக இயக்கவும் தெரியும் என்பதை அவர் நிரூபித்த படம் அது. தொடர்ந்து சிறப்பான நடிகராகவே வலம் வருகிறார்.

இயக்குநருக்கான வேட்கை

இயக்குநருக்கான வேட்கை

தேர்ந்தெடுத்த கதைகளில் அவர் நடித்துவருவது அவரது ரசிகர்களுக்கு மகவும் மகிழ்ச்சியையே கொடுத்து வருகிறது. ஆயினும் ஒரு இயக்குநருக்கான வேட்கை அவருக்கு தொடர்ந்து இருந்திருக்கும் போல. அதை மீண்டும் நிரூபித்துள்ளார். தற்போது அவரது இயக்கத்தில் இரண்டாவது படம் ப்ரோ டாடி வெளியாகியுள்ளது.

அப்பாவாக மோகன்லால்

அப்பாவாக மோகன்லால்

இந்தப் படத்திலும் அவர் தேர்ந்தெடுத்த நடிகர், நடிகைகள் தேர்வு அவருக்கு சிறப்பாக கைகொடுத்துள்ளது. படத்தில் பிரித்வியின் அப்பா கேரக்டர் மோகன்லாலுக்கு. 45 வயதையொட்டிய அவருக்கு மோகன்லால் அப்பாவாக முடியுமா என்ற கேள்வி ரசிகர்களிடையே எழாமல் இல்லை.

சிறப்பான கெமிஸ்ட்ரி

சிறப்பான கெமிஸ்ட்ரி

அதை தன்னுடைய லுக் மற்றும் உடல்மொழியால் நியாயம் செய்துள்ளார். தற்போதும் இளமையாக மெயின்டெயின் செய்யும் மோகன்லாலில் மகன் கேரக்டரை சிறப்பாக்கி உள்ளார். அவர்களது கெமிஸ்ட்ரி படத்தில் மிகவும் அற்புதமாக உள்ளது. படத்தில் கல்யாணி பிரியதர்ஷன் கர்ப்பமாவது வரையில் சாதாரணமாக நகரும் கதைக்களம் அதன்பின்பு சூடு பிடிக்கிறது.

ரசிகர்கள் வரவேற்பு

ரசிகர்கள் வரவேற்பு

சிறப்பான காமெடியால் படம் தற்போது ரசிகர்களின் வரவேற்பிற்கு உள்ளாகியுள்ளது. பேமிலி என்டர்டெயின்மெண்ட் என்ற பெயருக்கு சிறப்பான வகையில் பொருந்தியுள்ளது ப்ரோ டாடி. கதைக்கு தேவையானவற்றை மட்டும் சிறப்பான திரைக்கதையுடன் கொடுத்துள்ள பிரித்வி தான் ஒரு தேர்ந்தெடுத்த இயக்குநர் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளார்.

மேக்கிங் வீடியோ வெளியீடு

மேக்கிங் வீடியோ வெளியீடு

இதனிடையே இம்மாத துவக்கத்தில் வெளியான படத்தின் மேக்கிங் வீடியோவை ரசிகர்கள் வெகுவாக ரசித்து வருகின்றனர். இந்த மேக்கிங் வீடியோவே காமெடியாக மிகவும் அழகாக கொடுக்கப்பட்டுள்ளது. ரசிகர்கள் இந்த வீடியோவை மிகவும் லைக் செய்துள்ளனர். 10 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் இந்த வீடியோவை பார்த்துள்ளனர். வீடியோவில் இயக்குநராகவும் நடிகராகவும் மாறி மாறி பிரித்வி செய்யும் விஷயங்கள் கவனத்தை ஈர்த்து வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X