Jayam Ravi: அப்பா அம்மா வருத்தப்படுறாங்க.. தப்பு பண்ணிட்டோம்னு தோணும் - பர்ஸ்னலை பகிர்ந்த ஜெயம் ரவி!

சென்னை: ஜெயம் ரவி தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராக மாறியுள்ளார். இவர் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி 21 ஆண்டுகள் ஆகின்றது. இவரது முதல் படமான ஜெயம் படம் கடந்த 2003ஆம் ஆண்டு வெளியானது. இவரது நடிப்பில் இதுவரை 32 படங்கள் வெளியாகியுள்ளது. தனது முதல் படத்தில் இருந்தே நடிப்பு, நடனம், சண்டை என அனைத்திலும் தொடர்ந்து பாரட்டுகளைப் பெற்று வருபவராக உள்ளார். இவரது நடிப்பில் அடுத்து வெளியாகவுள்ள படம் பிரதர். இந்தப் படம் வரும் தீபாவளிக்கு அதாவது வரும் 31ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது. இந்நிலையில் அவர் தற்போது அளித்த பேட்டியில் பல சுவாரஸ்யமான தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.

ஜெயம் ரவி நடிப்பில் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகவுள்ள படம் பிரதர். இந்தப் படத்தினை எம். ராஜேஷ் இயக்கியுள்ளார். படத்தில் பிரியங்கா மோகன், நட்ராஜ், விடிவி கணேஷ், பூமிகா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அக்கா தம்பி பாசத்தினை அடிப்படையாகக் கொண்டு இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளது. படத்திற்கு ஹாரீஸ் ஜெயராஜ் இசை அமைத்துள்ளார். இந்நிலையில் படத்தின் புரோமோசன் வேலைகளை படக்குழு தொடங்கியுள்ள நிலையில், ஜெயம் ரவி தற்போது அளித்த பேட்டியில் பல சுவாரஸ்யமான விஷயங்களைப் பகிர்ந்துள்ளார்.

jayam ravi brother jayam ravi divorce

அதாவது அந்த பேட்டியில் அவர் பேசுகையில், " பிரதர் படம் எனது சொந்த வாழ்க்கையுடன் ரொம்பவே கனெக்ட் ஆககூடிய படம்தான். படத்தில் உள்ள காட்சிகள் என்னுடைய வாழ்க்கையில் நடந்த பல விஷயங்களை நியாபகப்படுத்துகின்றது. எனது அக்காவுக்கு ஒரு பழக்கம் உள்ளது. அதாவது எனக்கும் எனது அக்காவுக்கும் இடையில் சின்னதாக பிரச்னை ஏற்பட்டுவிட்டால், அல்லது அக்காவை நான் தவறாக புரிந்து கொண்டால் இதனால் கொஞ்ச நாள் நல்லபடியாக பேசிக்க மாட்டோம். ஆனால் அக்கா தான் சொல்ல நினைப்பதை பொறுமையாக கடிதமாக எழுதி கொடுப்பாங்க.

jayam ravi brother jayam ravi divorce

கஷ்டமா இருக்கும்: அவங்க மனதில் ஏற்பட்ட காயத்தை லெட்டராக படிக்கும்போது கஷ்டமா இருக்கும். தப்பு பண்ணிட்டோம்னு தோனும். நாங்க ரொம்ப நாள் சின்ன வீட்டில்தான் இருந்தோம். அதனால் ஒருத்தரை ஒருத்தர் பார்த்துக்கொண்டுதான் இருந்தாகனும். ஒன்றாக சாப்பிடுவது எங்காவது வெளியூர் போனால் கூட ஃபேமிலியாகத்தான் போவோம். நானும் அக்காவும் லாஸ்ட் ரெண்டு குழந்தைங்க. அதனால நாங்க வீட்டுல எதுவேணாலும் கேட்போம். யாரும் எதுவும் சொல்ல மாட்டாங்க. ஒருவேளை பயம் வந்தால், அக்காவைத்தான் தூதுவிடுவோம். அதேபோல்தான் அக்காவும், அவங்களுக்காக என்னை பேசச் சொல்லுவாங்க. எனது அக்கா இப்போதும் லெட்டர் எழுதிட்டுதான் இருக்காங்க.

jayam ravi brother jayam ravi divorce

அப்பா அம்மா: எனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து மற்றவர்கள் பேசுவதை நான் பெரிதாக கண்டுக்க மாட்டேன். அவர்களுக்கு என்ன நடந்தது என்றே தெரியாமல் பேசுவார்கள். எனக்கு அதைப்பற்றி கவலை இல்லை. எனது அப்பா அம்மாவுக்கு என்னைப் பற்றி மற்றவர்கள் பேசுகின்றார்கள் என்ற கவலை இருக்கும். ஆனால் அவர்களுக்கு என்னைப் பற்றித் தெரியும் என்பதால் பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது.

jayam ravi brother jayam ravi divorce

தகுதியில்லை: எனது சினிமா வாழ்க்கை குறித்து விமர்சனம் வைத்தால் அதனைக் கேட்டுக் கொள்கின்றேன். ஒரு மாணவன் போல கேட்டுக்கொண்டு அதனை மாற்றிக் கொள்வேன். என்னை அந்த விருதுக்கு தகுதி இல்லாதவன் எனக் கூறினால் அடுத்தப் படத்தி சிறப்பாக நடிக்க முயற்சி செய்வேன். ஆனால் பர்ஸ்னல் விஷயங்கள் என்பது எனது சர்க்கிளுக்கு மட்டுமே தெரிந்த விஷயம். அதை நான் பார்த்துப்பேன், நாங்கள் பார்த்துப்போம்" என பேசினார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X