twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    இச்சகதி தேர்தல் வரை எங்கள் மீதே கிடந்து நாறட்டும்: தம்பி புகார் பற்றி நாசர் விளக்கம்

    By Siva
    |

    சென்னை: தன் மனைவி கமிலா மீது புகார் சுமத்தப்பட்டுள்ளதற்கு பின் அரசியல்வாதிகள் இருப்பதாக நாசர் தெரிவித்துள்ளார்.

    நடிகர் நாசரின் மனைவி கமிலா மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் மத்திய சென்னை தொகுதியில் போட்டியிடுகிறார். மாமனார், மாமியாரை கவனிக்காத அவருக்கு ஓட்டு போடாதீர்கள் என்று நாசரின் தம்பி ஜவகர் மக்களை கேட்டுக் கொண்டார்.

    இந்நிலையில் இது குறித்து நாசர் விளக்கம் அளித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

    Thalaivar 167- போலீஸ் கெட்டப்பில் இருக்கும் ரஜினியின் போட்டோக்கள் லீக்: படக்குழு அதிர்ச்சி Thalaivar 167- போலீஸ் கெட்டப்பில் இருக்கும் ரஜினியின் போட்டோக்கள் லீக்: படக்குழு அதிர்ச்சி

    கமிலா

    கமிலா

    என்னை அறிந்தோர், புரிந்தோர் எல்லோருக்கும் என் வணக்கங்கள். சமீபகாலமாக என் குடும்பம்சார் பிரச்சினைகள் ஊடகங்களில் வந்து கொண்டிருக்கின்றன. கமிலா நாசருக்கு "ஓட்டுப் போட்டுவிடாதீர்கள்" என்ற ஒரு செய்தியை கடத்தவே இது நடக்கிறது. ஒரு குடும்பத்தை வீதிக்கு இழுப்பது கேவலம் என்று கருதுகிறேன். இதற்கு பின்னால், ஆதாயம் பெறும் அரசியல் வித்தகர்கள் பின் நின்று ஆட்டுவிக்கிறார்கள் என்று நான் எண்ணுவது இயற்கையானது.

    விளக்கம்

    விளக்கம்

    நாசரின் நிழலின் கீழ் வளர்ந்தவர் அல்ல கமிலா. என்னைப் போலவே அவருக்கான தனித்துவம், தனித்திறன் இருக்கிறது. நான், அல்லது நாங்கள் ஒன்றும் செய்யவில்லை என்ற குற்றச்சாட்டை விளக்க என் 40 வருட வாழ்க்கையை உங்களுக்கு சொல்ல வேண்டும். அதற்கான தருணம் இதுவல்ல. ஆனால், நான் விளக்குவேன். உரிய நேரத்தில் உரியவர்க்கு செய்ய வேண்டியது, செய்யப்பட்டது. குடும்பத்தில் ஒருவருடைய பலமான தூண்டுதல் பேரிலேயே என்னுடைய கடமை தடை செய்யப்பட்டது. அதை மீறியும் என் கடமைகளை நிறைவேற்றிக் கொண்டுதான் இருக்கிறேன்.

    வேட்பாளர்

    வேட்பாளர்

    பல விஷயங்கள் மறைக்கப்பட்டு, நடந்த சில விஷயங்கள் திரிக்கப்பட்டு, வலு சேர்க்க சிலவற்றை புனையப்பட்டு, இச்சகதி எங்கள் மேல் வீசப்பட்டிருக்கிறது. வேட்பாளர் ஒருவர் மீது சுமத்துவதற்கு பழி ஒன்றும் கிடைக்காதபோது வீசப்பட்ட சகதி எங்கள் பொது வாழ்க்கைக்கு கிடைத்த பரிசென்றே கருதுகிறேன்.

    தெளிவு

    தெளிவு

    தேர்தலை முன் வைத்து வீசப்பட்ட இச்சகதி தேர்தல் வரை எங்கள் மீதே கிடந்து நாறட்டும். என்ன நடந்தது என்று சொல்ல வேண்டிய கட்டாயத்தை நான் உணரவே செய்கிறேன். தேர்தல் நிறைவுறட்டும், நானும் கமிலாவும் வேறு கிரகத்திற்கு பறந்து செல்லப்போவதில்லை. எதிர்கொள்ள தின்மையும் இருக்கிறது. தெளிவும் இருக்கிறது. இப்போதைக்கு இவ்வளவே என்று நாசர் தெரிவித்துள்ளார்.

    English summary
    Actor Nasser has given explanation about his brother's accusation against Kamila.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X