கிழக்குச் சீமையிலே போல அழுத்தமான அண்ணன் தங்கை பாசக்கதை... உடன்பிறப்பே!
சென்னை : நடிகர் சசிகுமார், ஜோதிகா இணைந்து நடித்துள்ள திரைப்படம் உடன்பிறப்பே.
இயக்குனர் இரா. சரவணன் இயக்கியுள்ள இந்த திரைப்படம் அண்ணன்-தங்கை பாசத்தை மையமாகக் கொண்டதாக உருவாகி உள்ளது.
சூர்யாவின் 2d நிறுவனம் தயாரித்துள்ள இந்த திரைப்படம் கிழக்கு சீமையிலே போல அழுத்தமான அண்ணன் தங்கை பாசத்தை பற்றி பேச உள்ளது.

அண்ணன் தங்கை பாசத்தை
ராட்சசி, பொன்மகள் வந்தாள் என தொடர்ந்து சமூகத்திற்கு தேவையான முக்கிய கதைகளில் நடித்து ரசிகர்களின் ஆதரவை பெற்று வரும் நடிகை ஜோதிகா இப்பொழுது அண்ணன் தங்கை பாசத்தை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள உடன்பிறப்பே திரைப்படத்தில் சசிகுமாருடன் இணைந்து நடித்துள்ளார். கத்துக்குட்டி படத்தின் மூலம் விவசாயத்தின் முக்கியத்துவத்தை பற்றி கூறி இருக்க இப்பொழுது உடன்பிறப்பே படத்தை இயக்கியுள்ளார் சரவணன்.

நேரடியாக ஓடிடி தளத்தில்
முழுக்க முழுக்க தஞ்சாவூர் பகுதிகளில் நடைபெற்று வந்த இப்படத்தின் படப்பிடிப்பு இப்பொழுது நிறைவுபெற்று ரிலீஸுக்கு தயாராகி உள்ளது. அக்டோபர் 14-ஆம் தேதி நேரடியாக அமேசான் ஓடிடி தளத்தில் இப்படம் வெளியாகிறது என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியானது. மேலும் இந்த படத்தில் சமுத்திரக்கனி, சூரி, கலையரசன், நிவேதிதா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

கருத்து வேறுபாடு
குடும்பத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்திருக்கும் ஜோதிகா மற்றும் சசிகுமார் இடையேயான பாசப் போராட்டத்தை மையமாக கொண்டு இந்த திரைப்படம் உருவாகி உள்ளது. ஏற்கனவே இப்படத்தின் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. டி இமான் இசையில் உருவாகியுள்ள இப்படத்தில் வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

கிழக்கு சீமையிலே
திரையரங்கில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட உடன்பிறப்பே படம் இப்போது நேரடியாக ஓடிடியில் வெளியாக இருக்கும் சூழலில் தமிழ் சினிமாவில் ஆகச்சிறந்த அண்ணன் தங்கை திரைப்படமான கிழக்கு சீமையிலே போல அழுத்தமான அண்ணன் தங்கை பாசத்தை பற்றிய படமாக உடன்பிறப்பே இருக்கும் என கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











