தமிழ் படங்களில் சகோதர பாசம்!

By Mayura Akilan

இந்தியாவில் சகோதர பாசத்தை கொண்டாட ஒரு பண்டிகை உண்டு. அது ரக்ஷா பந்தன். உடன் பிறந்த அண்ணன், தம்பிகள் இல்லாத பெண்கள் கூட சகோதரனாக நினைக்கும் ஆணுக்கு ராக்கி கட்டி பாசத்தை பொழியும் நாள் அது.

அண்ணன் தங்கை பாசத்திற்கு இதிகாசத்தில் இருந்து உதாராணமாக கூற எல்லோரும் யோசிப்பார்கள். ஆனால் சினிமாவில் இருந்து கூறச்சொன்னால் உடனடியாக கூறுவது பாசமலர்தான்.

அண்ணன் தங்கை பாசத்தை வைத்து பல தமிழ் திரைப்படங்கள் எடுக்கப்பட்டிருந்தாலும் பாசமலரை முந்த எந்த ஒரு படைப்பும் வரவில்லை. ரக்ஷா பந்தன் கொண்டாடிய இந்த நேரத்தில் சகோதர பாசத்தோடு எடுக்கப்பட்ட படங்களைப் பற்றி தெரிந்து கொள்ளுங்களேன்.

சிவாஜியின் பாசமலர்

சிவாஜியின் பாசமலர்

மலர்களைப்போல் தங்கை உறங்குகிறாள்... இந்த பாடல் ஒலிக்காத இடமே இல்லை. தங்கை மீது கொண்ட பாசத்தை பரிபூரணமாக சொல்லும் பாடல் அது. இது போன்ற ஒரு திரைப்படம் இனி யாராலும் எடுக்க முடியுமா என்று சொல்ல முடியாது.

எம்.ஜி.ஆரின் நினைத்ததை முடிப்பவன்

எம்.ஜி.ஆரின் நினைத்ததை முடிப்பவன்

புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் தங்கை சென்டிமென்ட் படத்தில் நிறைய நடித்துள்ளார். அதில் சிறப்பானது என் அண்ணன், நினைத்ததை முடிப்பவன். அதுவும் பூ முடிப்பாள் இந்த பூங்குழலி.... பாடல் வெகு பிரசித்தம்.

சூப்பர் ஸ்டார் அண்ணன்

சூப்பர் ஸ்டார் அண்ணன்

சூப்பர் ஸ்டார் ரஜினியின் சகோதர பாச திரைப்படங்கள் எத்தனையோ இருந்தாலும், 6ல் இருந்து 60 வரை, நான் சிகப்பு மனிதன், போன்றவை பாசமான அண்ணனாக நடித்த படங்கள்.

சின்னத்தம்பி

சின்னத்தம்பி

கண்டிப்பான மூன்று அண்ணன்களின் பாசமான தங்கையாக நடித்திருப்பார் குஷ்பு. வாசு இயக்கிய இந்த திரைப்படம் அண்ணன் தங்கை பாசத்தின் புதிய பரிமாணத்தை உணர்த்தியது.

கிழக்குச் சீமையிலே…

கிழக்குச் சீமையிலே…

பாரதிராஜா இயக்கத்தில் விஜயகுமார், ராதிகா நடித்த கிழக்குச் சீமையிலே திரைப்படம் அனைவராலும் பாராட்டப்பட்ட அண்ணன் தங்கை பாச திரைப்படம்.

சரத்குமாரின் பாசம்

சரத்குமாரின் பாசம்

சரத்குமார், முரளி, மனோஜ் காவேரி நடித்த படம் சமுத்திரம். கே.எஸ்.ரவிக்குமார் இயக்கிய இந்த திரைப்படத்தில் பிரியமான தங்கையின் மேல் பாசத்தை பொழியும் அண்ணன்களாக நடித்திருப்பார்கள் மூவரும்.

சொக்கத்தங்கம்

சொக்கத்தங்கம்

பாக்யராஜ் இயக்கத்தில் விஜயகாந்த் - உமா நடித்த சொக்கத்தங்கம் அண்ணன் - தங்கை பாசத்தின் புதிய அவதாரம். கமர்சியலாக வெற்றி பெறாவிட்டாலும் பெண்களுக்கு பிடித்த படம் அது.

விஜய் பாசம்

விஜய் பாசம்

பேரரசு இயக்கத்தில் விஜய் நடித்த படம் திருப்பாச்சி. பாசமான அண்ணனாக இதில் அசத்தியிருப்பார். அதேபோல வேலாயுதம் படத்திலும் அண்ணன் சென்டிமென்ட் காட்சியில் சூப்பராக பாசம் காட்டியிருப்பார்.

திருப்பதி அஜீத்

திருப்பதி அஜீத்

திருப்பதி படத்தில் அஜீத்தின் அண்ணன் பாசம் கொஞ்சம் அலாதியானது. இதுவும் பேரரசு இயக்கிய படம்தான்.

தங்கை பாசத்தில் டி.ஆர்

தங்கை பாசத்தில் டி.ஆர்

அண்ணன் தங்கை பாசத்தை சினிமாவில் பிழிய பிழிய சொல்லியிருப்பார் டி.ராஜேந்தர். தங்கைக்கோர் கீதம் தொடங்கி கட்டக் கடைசியாக நடித்த வீராச்சாமி வரை தங்கை பாசத்தை சொல்லாத படமே இல்லை எனலாம். அந்த அளவிற்கு பாசமான அண்ணனாக அழுது அழுது நடித்திருப்பார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X