ஆம்ஸ்ட்ராங் கொலை.. இயக்குநர் நெல்சனிடம் தனிப்படை போலீசார் விசாரணை.. சிக்குவாரா முக்கியப் புள்ளி?

சென்னை: பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத்தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த ஜூலை 5ஆம் தேதி சென்னை பெரம்பூர் பகுதியை அடுத்துள்ளா செம்பியத்தில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். ஆம்ஸ்ட்ராங் புதிதாக கட்டி வந்த வீட்டுக் கட்டிடத்தின் அருகிலேயே வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இதனால் தமிழ்நாடே பெரும் அதிர்ச்சிக்குள்ளானது. ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் இதுவரை 20க்கும் மேற்பட்டோரை காவல்துறை கைது செய்துள்ளது. இந்நிலையில் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தொடர்பாக திரைப்பட இயக்குநர் நெல்சனிடம் இன்று அதாவது ஆகஸ்ட் 24ஆம் தேதி தனிப்படை காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.

ஏற்கனவே இவரது மனைவி மோனிஷா நெல்சனிடம் காவல்துறை விசாரணை நடத்தியது. இதனால் இணையத்தில் மோனிஷா நெல்சனுகும் ஆம்ஸ்ட்ராங் கொலைக்கும் தொடர்பிருப்பதாக தகவல்கள் வெளியானது. இது பலருக்கும் அதிர்ச்சியைக் கொடுத்தது. காவல்துறை விசாரணை முடிந்த பின்னர், மோனிஷா நெல்சன் தனது வக்கீல் மூலம் விளக்கம் ஒன்றைக் கொடுத்திருந்தார். அதன் பின்னர்தான் பலருக்கும் காவல்துறை ஏன் மோனிஷா நெல்சனிடம் விசாரணை நடத்தினர் என்பது புரியவந்தது.

Nelson Dilipkumar BSP Armstrong Armstrong Murder

மோனிஷா நெல்சன் தரப்பில் இருந்து வெளியான விளக்கக் குறிப்பில், " மோனிஷா நெல்சன் திலீப்குமார் அறிவுறுத்தலின் பேரில் இந்த பொது அறிவிப்பு வெளியிடப்படுகிறது. இதன்படி எங்களது கட்சிக்காரர் நெல்சன் திலீப் குமாரின் மனைவி ஆவார். நெல்சன் திலீப்குமார் முக்கிய இயக்குநரும், திரைக்கதை எழுத்தாளரும் ஆவார். அவரை பற்றி பல ஆன்லைன் தளங்கள், செய்தி தளங்கள், பொழுதுபோக்கு தளங்கள் மற்றும் சினிமா தளங்களில் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளைப் புகாரளிக்கும் வகையில் எனது கட்சிக்காரரை பற்றிய தொடர் செய்திகள் நேர்காணல்கள் மற்றும் செய்தி வீடியோக்கள் வெளியாகின்றன.

ஆகஸ்ட் 7: கடந்த ஆகஸ்ட் 07ம் தேதி அன்று, வழக்கறிஞர் கிருஷ்ணன் தொடர்பாக விளக்கம் அளிக்கக் கோரி, எனது கட்சிக்காரரான மோனிஷா நெல்சனை காவல்துறையினர் அழைத்து போலீசார் விசாரித்தனர். எனினும் மோனிஷா நெல்சன் அந்த விவகாரத்தில் போலீசாரிடம் தெளிவுபடுத்தியதோடு, முழு ஒத்துழைப்பையும் வழங்குவதாக காவல்துறை அதிகாரிகளுக்கு விளக்கம் கொடுத்தார்.

Nelson Dilipkumar BSP Armstrong Armstrong Murder

பொய்: எனது கட்சிக்காரர் மோனிஷா நெல்சனுக்கும் வழக்கறிஞர் கிருஷ்ணனுக்கும் இடையே பணப் பரிவர்த்தனைகள் இருந்ததாக பொய்யாக ஊகித்து வதந்திகள் செய்திகளாக பரவுகிறது. இதனை கண்டு மோனிஷா நெல்சன் மிகவும் அதிர்ச்சியடைந்துள்ளார். இப்படி பரப்பப்படும் செய்திகள் முற்றிலும் தவறானது மற்றும் ஆதாரமற்றது என்பதை மோனிஷா நெல்சன் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.

Nelson Dilipkumar BSP Armstrong Armstrong Murder

ஆதாரமற்ற குற்றச்சாட்டு: எனது கட்சிக்காருக்கும் ( மோனிஷா நெல்சன்) அவரது கணவரின் (நெல்சன் திலீப்குமார்) நற்பெயருக்கும் தீங்கு விளைவிக்கும் வகையில், அடிப்படை நெறிமுறைகளைக் கடைப்பிடிக்காமல், ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை வெளியிடுவதை ஊடகங்கள் தவிர்க்க வேண்டும் என்று மோனிஷா நெல்சன் கூறியுள்ளார். இதேபோன்று பிறரையும் எனது கட்சிக்காரர் கேட்டுக்கொண்டுள்ளார்.

சட்ட நடவடிக்கை: சம்பந்தப்பட்ட தரப்பினரின் உணர்வுகளை முற்றாகப் புறக்கணிக்கும் வகையில் வெளியிடப்படும் இத்தகைய செய்திகள் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. மோனிஷா நெல்சன் குறித்து அவதூறு பரப்பும் வகையில்ல வெளியிடப்பட்ட அனைத்து செய்திகளையும் உடனடியாக நீக்கப்பட வேண்டும். இதனை பின்பற்றாத பட்சத்தில், எனது கட்சிக்காரரின் ( மோனிஷா நெல்சன்) நலன் மற்றும் நற்பெயரைப் பாதுகாக்க சட்ட நடவடிக்கைகளைத் தொடங்க வேண்டிய கட்டாயம் ஏற்படும்" என தெரிவித்திருந்தார். இந்நிலையில் இயக்குநர் நெல்சன் திலீப்குமாரிடம் தனிப்படை காவல்துறையினர் இன்று விசாரணை செய்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X