BTS Boys-சை ஆட்டம் போடவைத்த ஊ சொல்றியா மாமா…. இணையத்தில் தீயாய் பரவும் வீடியோ !
சென்னை : புஷ்பா படத்தில் ஊ சொல்றியா மாமா என்ற ஒற்றை பாடலுக்கு டான்ஸ் ஆடிய சமந்தா. ரசிகர்களின் மனதை கொள்ளையடித்தார். அந்தப் படத்தின் கதாநாயகி ராஷ்மிகா மந்தனாவை விட அதிகம் பேசப்பட்டவராக இருக்கிறார் சமந்தா.
Recommended Video
ஊ சொல்றியா மாமா.. பாடல் வெளியானதிலிருந்து பட்டிதொட்டியெங்கும் பட்டையைக் கிளப்பி வருகிறது.
2021ம் ஆண்டின் ஹிட் பாடலாக மாறியுள்ள இந்த பாடலுக்கு பிடிஎஸ் இசைக்குழுவினர் டான்ஸ் ஆடும் வீடியோ இணையத்தில் வெளியாகி உள்ளது.

பிடிஎஸ் பேஃன்
நம்மோடு ஒன்னுமண்ணா இருந்து கறிக்குழம்பு, இட்லி,தோசை, சாப்பிட்டவர்கள் திடீரென பீசாவும், பர்கரும் சாப்பிட்டேனு சொன்னா எவ்வளவு ஷாக்காவோமோ அப்படித்தான் ஷாக்கா இருக்குது. நம்ம கூடவே சுத்துன செவ்வாழையெல்லாம் பிடிஎஸ், பிடிஎஸ் ஆர்மின்னு சொல்லுறதை கேட்கும் போது.

பேங்க்டன் பாய்ஸ்
யாருப்பா இந்த பிஎஸ்டினு புருவம் உயர்த்தி ஆர்வமா கேட்டா. தென்கொரியாவில் ஏழு பாய்ஸ் இணைந்து தொடங்கிய இசைக்குழு (BangTan Sonyeondan) பேங்க்டன் பாய்ஸ். இதன் சுருக்கமே பிடிஎஸ் என அழைக்கப்படுகிறதாம். பெயர் ஒன்னும் வாயில நுழையில ஆனால், அவர்களின் பாடல் காதுக்குள் நுழைந்து குத்தாட்டம் போடவைக்கிறது.

கொண்டாடும் ரசிகைகள்
இளசுகள் முதல் பெரிசுகள் வரை பிடிஎஸ் பேஃன் என்பதை காலரை தூக்கி சொல்பவர்களும் இருக்கிறார்கள். இன்னும், சில தீவிர கிராக்குகள் சாரி... சாரி ரசிகைகள் வாட்ஸ்அப் டிபியாக வைத்து பிடிஎஸ் பாய்சை தலையில் தூக்கிவைத்து கொண்டாடி வருகிறார்கள்.

ஊ சொல்றியா மாமா
பாடல், இசை, நடனம் என எல்லாவற்றிலும் புகுந்து விளையாடும் பிடிஎஸ் பாய்ஸ், உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர்களை வைத்திருக்கிறார்கள். அனைவர் மனதிலும் இடம் பிடித்த இந்த பிடிஎஸ் இசைக்குழு, சமந்தா குட்டைப்பாவாடையுடன் ஆட்டம் போட்ட ஊ சொல்றியா மாமா பாடலுக்கு கலக்கலாக ஆட்டம் போட்ட வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

செம எடிட்
அத்தாடி, ஊ சொல்றியா பாட்டின் புகழ் பிடிஎஸ் ரசிகர்களையும் விட்டுவைக்கலயேனு யோசிச்சா, பிடிஎஸ்சின் தீவிர வெறியன் ஒருவன், கச்சிதமா எடிட் செய்து இந்த பாட்டுக்கு தகுந்தபடி பிடிஎஸ் பாய்சை ஆட்டம் போடவைத்துள்ளார். எது எப்படியோ வீடியோ சூப்பரா இருக்கு , நம்மை ஆட்டம் போடவும் வைத்துள்ளது. வீடியோ சூப்பருதான் போங்க.


Click it and Unblock the Notifications











