ரசிகர்கள் ஆபாச கமென்ட்ஸ்.. பிரபல பாடகிக்கு பாலியல் வன்கொடுமை மிரட்டல்.. சைபர் கிரைமில் புகார்!

By

சென்னை: பிரபல பின்னணி பாடகிக்குப் பாலியல் வன்கொடுமை மிரட்டல் விடுக்கப்பட்டதை அடுத்து சைபர் கிரைம் போலீசில் புகார் கொடுத்துள்ளார்.

Recommended Video

Nagini 4 | நாகினி | Rashmi Desai | Bigg boss 13

பிரபல பின்னணி பாடகி நேகா பாசின். தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் உள்பட பல்வேறு மொழிகளில் பாடல்களை பாடி வருகிறார்.

தமிழில், சத்தம் போடாதே படத்தில் பேசுகிறேன் பேசுகிறேன், வாகை சூடவா படத்தில் இடம்பெற்றுள்ள போறானே போறானே உள்பட சில பாடல்களை பாடியுள்ளார்.

ரசிகை அல்ல

ரசிகை அல்ல

இவர் ஆல்பங்களிலும் பாடி வருகிறார். இவர் கடந்த வருடம் இந்திய பாப் பாடகர் பாட்ஷா என்பவருக்கு ஆதரவாக ட்விட்டரில் கருத்துத் தெரிவித்திருந்தார். அவரை சிலர் கண்டபடி ட்ரோல் செய்துகொண்டிந்தபோது சக இசைக்கலைஞராக ஆதரித்தார். அப்போது, தான் கொரிய இசைக்குழுவான பிடிஎஸ்-சின் ரசிகை அல்ல என்றும் தெரிவித்திருந்தார்.

அவதூறு ஆபாசம்

அவதூறு ஆபாசம்

இதையடுத்து சில ரசிகர்கள், நேகா பாசினை ட்ரோல் செய்ய ஆரம்பித்தனர். பிடிஎஸ் கொரியன் பாப் பேண்ட் என்ற இசைக் குழுவின் ரசிகர்கள், அவதூறாகவும் ஆபாசமாகவும் கருத்துக்களை தெரிவிக்கத் தொடங்கினர். ஒரு கட்டத்தில் வீட்டுக்குள் வந்து பாலியல் வன்கொடுமை செய்துவிடுவதாக அவரை மிரட்டினர்.

மன்னிப்புக் கேட்கவேண்டும்

மன்னிப்புக் கேட்கவேண்டும்

இதனால் பாடகி நேகா பாசின், மும்பை சைபர் கிரைம் போலீசில் புகார் கொடுத்துள்ளார். அதோடு தனது சமூக வலைதளப் பக்கத்தில் சில ரசிகர்கள் அவதூறாகப் பதிவிட்ட கருத்துக்களின் ஸ்கிரீன் ஷாட்டையும் பதிவு செய்தார். அதில் ஒருவர், கொரிய இசைக்குழுவின் ரசிகர்களிடம் அவர் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

பாலியல் வன்கொடுமை

பாலியல் வன்கொடுமை

சிலர், பிடிஎஸ் இசைக்குழுவினுடைய ரசிகர்களின் பவர் பற்றி அவருக்குத் தெரியாது என்று தெரிவித்துள்ளனர். இதுபற்றி பாடகி நேகா பாசின் கூறும்போது, 'இரண்டு வருடத்துக்கு முன் என் தந்தை இறந்துவிட்டார். அவரது போட்டோவை சமீபத்தில் பதிவு செய்தேன். அதன் கமென்ட்டில் ஒருவர் பாலியல் வன்கொடுமை மிரட்டல் விடுத்திருந்தார்.

புகார் அளித்தேன்

புகார் அளித்தேன்

ரசிகர்கள் என்ற பெயரில் கடந்த 2 மாதமாக கடுமையான அவதூறான கமென்ட்களை கூறி வருகின்றனர். ஒரு வாரமாக பொறுத்திருந்தேன். பாலியல் மிரட்டலும் வந்ததால் போலீசில் புகார் அளித்தேன் என்று தெரிவித்துள்ளார். புகார் அளித்த காப்பியையும் அவர் தனது சமூக வலைதளப்பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X