BTS: உலகையே உலுக்கிய தென்கொரிய விமான விபத்து.. உதவிக்கரம் நீட்டிய BTS பாடகர் ஜோ ஹோப்!

தென் கொரியா: 2024ஆம் ஆண்டு முடியும்போது ஒட்டுமொத்த உலகையும் பதைபதைக்க வைத்துவிட்டுத்தான் சென்றது எனலாம். சரியாக கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை, தென் கொரியாவில் உள்ள, மூவான் விமான நிலையத்தில் ஏற்பட்ட விமான விபத்தில் 179 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்தில் உயிரிழ்ந்தவர்களுக்கு உலகப் புகழ் பெற்ற BTS பாடகர் ஜோ ஹோப் உதவிக்கரம் நீட்டியுள்ளார்.

2024ஆம் ஆண்டின் கடைசி ஞாயிற்றுக் கிழமையையை ஒட்டுமொத்த உலகமும் கொண்டாடிக் கொண்டு இருந்தபோதுதான், இணையத்தில் அனைவரையும் பதைபதைக்க வைக்கும் வீடியோ ஒன்று வேகமாக பரவ ஆரம்பித்தது. அந்த வீடியோ, தென்கொரியாவின் மிகவும் முக்கியமான விமான நிலையமான மூவான் விமான நிலையத்தில் தரையிரங்கும்போது ஏற்பட்ட விபத்தில் மொத்தம் 179 பேர் உயிரிழந்தனர்.

BTS BTS J-Hope Jeju Air plane crash

தாய்லாந்தில் இருந்து, தென்கொரியாவுக்குச் சென்ற அந்த விமானத்தில் பயணிகள் ஊழியர்கள் என மொத்தம் 181 பேர் பயணம் செய்தனர். ஆனால், அவர்களில் இரண்டே இரண்டு பேர் மட்டும்தான் உயிர் தப்பினர். விமான விபத்து தொடர்பான காட்சிகளை இணையத்தில் பார்த்ததுமே, இணையவாசிகள், உயிர்ச்சேதம் எதுவும் இருக்க கூடாது என வேண்டிக் கொண்டார்கள். ஆனால் விபத்து, அதன்பின்னர் நடைபெற்ற மீட்புப் பணிகள் நடைபெற நடைபெற உயிரிழப்பு எண்ணிக்கை அதிகமாகிக் கெண்டே வந்தது.

இருவர்: ஒரு கட்டத்தில் யாருமே உயிர் பிழைக்கவில்லை என மக்கள் தாங்களாகவே யூகித்துக் கொண்டு இருந்த வேளையில், விமானத்தில் பணிப்பெண்களாக பணியாற்றிய இருவர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதில், அவர்கள் அபாய கட்டத்தைக் கடந்து விட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளார்கள். அதன் பின்னர்தான் அவர்கள் இருவர் மட்டும் உயிர் பிழைத்த தகவல் வெளியானது. பலரும் அவர்கள் இருவரும் விரைவில் பூரண குணமடைய வேண்டும் என வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

BTS BTS J-Hope Jeju Air plane crash

காரணம் : இந்த விபத்துக்கான காரணம் என்னவென தென்கொரியா நாட்டு அரசு ஆய்வு செய்து வருகின்றது, மேலும் விபத்துக்குள்ளான விமானத்தின் கருப்புப் பெட்டியை எட்டுத்து விபத்துக்கான காரணத்தை கண்டறிய முயற்சி செய்துள்ளனர். ஆனால், கருப்புப் பெட்டி அதிகம் பாதிப்படைந்துள்ளதால், அதிலிருந்து தரவுகளை எடுக்க முடியவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. மேலும் அந்த கருப்புப் பெட்டியை அமெரிக்காவுக்கு எடுத்துச் சென்று ஆய்வு செய்ய தென்கொரியா முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகின்றது.

BTS BTS J-Hope Jeju Air plane crash

100 மில்லியன் வான்: 179 பேரை காவு வாங்கிய அந்த கோரமான விமான விபத்தில் அதிகப்படியாக உயிரிழ்ந்தவர்கள் தென்கொரியா நாட்டினைச் சேர்ந்தவர்கள்தான். இந்த விமான விபத்திற்கு உலகம் முழுவதும் மக்கள் அஞ்சலி செலுத்தினர். இந்நிலையில் BTS பாடகர் ஜோ ஹோப் மூவான் விமான விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர்களுக்கும் நண்பர்களுக்கும் ஆறுதல் தெரிவித்துள்ளார். மேலும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இந்திய மதிப்பில் ரூபாய் 58 லட்சங்களை நிவாரணமாக வழங்கியுள்ளார். தென்கொரிய மதிப்பில் இது 100 மில்லியன் வான் ஆகும். இவரது இந்த செயலுக்கு பலரும் பாராட்டுக்களைத் தெரிவித்து வருகின்றனர். மேலும் பலர், விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு உதவ முன் வந்துள்ளனர்.

More from Filmibeat

Read more about: crash
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X