அரசு நிலம்.. நயன்தாரா, ரம்யா கிருஷ்ணனுக்குப் பல கோடிக்கு விற்பனை.. திடீர் புகாரால் பரபரப்பு!

By

ஐதராபாத்: அரசுக்கு சொந்தமான நிலத்தை நடிகைகள், நயன்தாரா, ரம்யா கிருஷ்ணன் உட்பட சில பிரபலங்களுக்கு விற்பனை செய்துள்ளதாக வெளியான தகவல் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

ஐதராபாத்தைச் சேர்ந்தவர் கோட்டா ரெட்டி. இவர், ஆதித்யா ஹோம்ஸ் என்ற ரியல் எஸ்டேட் கம்பெனியின் நிறுவனர்.

இந்நிறுவனத்தில் கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் இயக்குனராக பதவி வகித்தவர் சுதீர்ரெட்டி.

புறம்போக்கு நிலம்

புறம்போக்கு நிலம்

இவர்கள் உறவினர்கள். இந்நிலையில், இவர்களுக்கு இடையே ஏற்பட்ட பிரச்னையை அடுத்து, பல முக்கிய பிரமுகர்களை ஏமாற்றி பல கோடி ரூபாய்க்கு புறம்போக்கு நிலத்தை விற்பனை செய்தது அம்பலமாகி இருக்கிறது. இதுபற்றி ஜூம் வீடியோவில் செய்தியாளர்களிடம் பேசிய சுதீர் ரெட்டி, பரபரப்பு புகார்களை தெரிவித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது:

அனுமதியில்லை

அனுமதியில்லை

தெலங்கானாவில் ரங்காரெட்டி மாவட்டத்தில் உள்ள ராவுரியாலா கிராமத்தில் அரசுக்கு சொந்தமான ஏரி உள்ளது. இதை சுற்றியுள்ள பகுதியில் கட்டிடங்கள் கட்ட அனுமதியில்லை. இதை மறைத்து அப்பகுதி விவசாயிகளிடம் இருந்து நிலங்களை வெறும் ரூ.5 லட்சத்துக்கு கோட்டா ரெட்டி விலைக்கு வாங்கினார். பின்னர், அதை ஒரு ஏக்கர் ரூ.1 கோடி என்று விற்றார்.

நயன்தாரா, ரம்யா கிருஷ்ணன்

நயன்தாரா, ரம்யா கிருஷ்ணன்

இதில், கடந்த 2008 ஆம் ஆண்டு கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் மற்றும் அவரது மனைவி அஞ்சலி ஆகியோரிடம் 6.5 ஏக்கர் நிலத்தை விற்பனை செய்தார். கடந்த ஜூன் மாதத்தில் பிரபல நடிகைகள் நயன்தாரா, ரம்யா கிருஷ்ணனுக்கு தலா ஒரு ஏக்கர் நிலத்தை விற்பனை செய்துள்ளார். ஆந்திராவை சேர்ந்த 5 எம்பிக்களுக்கும் விற்பனை செய்திருக்கிறார்.

Recommended Video

V-CONNECT | MC MONISHA CHAT | பாஸ்கரின் தங்கச்சி RETURN | FILMIBEAT TAMIL
மோசடி செய்துள்ளார்

மோசடி செய்துள்ளார்

விற்பனை செய்யும் போது அரசுக்கு சொந்தமான நிலம் என தெரிவிக்காமல் மோசடி செய்துள்ளார். இவ்வாறு சுதீர் ரெட்டி கூறினார். குடும்ப பிரச்னை காரணமாக இந்த மோசடி வெளிவந்திருப்பது ஐதராபாத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X