தலைவர் ரெண்டே கேரக்டரைத்தான் உருட்டிட்டு இருக்காரு - வேட்டையன் டீசர் குறித்து ப்ளூ சட்டை மாறன்

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள படம் வேட்டையன். இந்தப் படம் வரும் அக்டோபர் 10ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது. படத்தினை ஞானவேல் இயக்கியுள்ளார். படத்தில் அமிதாப் பச்சன், ஃபகத் ஃபாசில், மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷாரா விஜயன் ராணா டகுபதி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார். படத்தில் இருந்து இதுவரை இரண்டு பாடல்கள் வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று அதாவது செப்டம்பர் 20ஆம் தேதி படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்று வருகின்றது. அதேநேரத்தில் படத்தின் டீசர் வெளியிடப்பட்டது. டீசர் குறித்து விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் தனது விமர்சனத்தை தெரிவித்துள்ளார்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி அடுத்த ஆண்டுடன் 50 ஆண்டுகளை எட்டவுள்ளார். தமிழ் சினிமாவில் மூத்த நடிகராக மட்டும் இல்லாமல், தொடர்ந்து மார்க்கெட் உள்ள நடிகராக இன்றைக்கும் உள்ளார். மாஸ் ஓப்பனிங், ரஜினியை நம்பி பணம் போட்டால் நிச்சயம் பைசா வசூல் என தயாரிப்பாளர்களுக்கு இன்றும் நம்பிக்கை கொடுத்துக் கொண்டு உள்ளார்.

tags vettaiyan vettaiyan audio launch rajinikanth

இன்றைய சினிமா வசூலை வைத்துத்தான் என முடிவான பின்னர், தமிழ் சினிமாவில் தொடர்ந்து டாப் வசூல் லிஸ்ட்டில் தனது படங்களை வைத்துள்ளார். கடைசியாக இவர் கதாநாயகனாக நடித்த ஜெய்லர் படம் கிட்டத்தட்ட 600 கோடிகளுக்கு மேல் வசூல் செய்தது. ஆனால் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தொடர்ந்து ஹிட் படங்களைக் கொடுத்தாலும் அவரை விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் தொடர்ந்து ட்ரோல் செய்து வருகின்றார்.

ப்ளூ சட்டை மாறன்: அந்த வகையில் வேட்டையன் படத்தின் டீசரைப் பார்த்த ப்ளூ சட்டை மாறன் தனது விமர்சனத்தை வெளிப்படுத்தியுள்ளார். அதில், " தலைவர் ரெண்டே கேரக்டரைத்தான் அடிக்கடி உருட்டிடடு இருக்காரு

1. டெரர் போலீஸ்: தர்பார், ஜெயிலர், வேட்டையன்.

2. டெரர் தாதா: காலா, கபாலி, கூலி.

அமிதாப்கு பிரகாஷ்ராஜ் டப்பிங் செம காமடி. படம் எப்படி இருக்குதுன்னு பாப்போம்" என குறிப்பிட்டுள்ளார்.

tags vettaiyan vettaiyan audio launch rajinikanth

அதேபோல் மற்றொரு பதிவில், "அமிதாப் சாருக்கு பிரகாஷ்ராஜ் டப்பிங் ஐடியா... பிரமாதம்.." எனவும், டீசரில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கதாபாத்திரத்திற்கு கொடுக்கப்படும் பில்டப்புக்கு, " ரொம்ப பயங்கரமான ஆபீஸரா இருப்பாரோ?" எனவும் பதிவிட்டுள்ளார். இவரின் இந்தப் பதிவு சூப்பர் ஸ்டார் ரசிகர்களை கோபமாக்கியுள்ளது.

tags vettaiyan vettaiyan audio launch rajinikanth

அரசியல் கேள்வி: அதேபோல், இன்று கூலி படப்பிடிப்பில் இருந்து சென்னை வந்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதில் ஒருசில கேள்விகள் அரசியல் தொடர்பானதாக இருந்தது. உடனே, அரசியல் கேள்விகளை என்னிடம் கேட்காதீர்கள் என கோபத்துடன் பதில் அளித்தார் இந்த வீடியோ இணையத்தில் வேகமாக பரவியது. அதற்கு, "வீட்டை விட்டு வெளிய வர முடியல... விஜய்யோட ஒவ்வொரு அரசியல் செயல்பாடு குறித்தும் என்ன நெனைக்கறீங்கன்னு கேட்டு உயிரை வாங்கறானுங்க. சினிமாவை விட்டு போறான்னு நிம்மதியா இருந்தா.. இப்ப அரசியலுக்கு வந்து நிம்மதியை கெடுக்கறான். எனக்கு அரசியலே தெரியாது. என்னை விட்ருங்கடா" என பதிவிட்டிருந்தார். இதுமட்டும் இல்லாமல் தொடர்ந்து, தனது எக்ஸ் பக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தொடர்பாக எதாவது ஏடாகுடமாக கருத்து தெரிவித்தே வருகின்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X