Bumper Blue Sattai Review: காட்டுமொக்க படங்களுக்கு பம்பர் சூப்பர்... ப்ளு சட்டை மாறன் விமர்சனம்

சென்னை: வெற்றி, பிக் பாஸ் ஷிவானி, ஹரீஷ் பெரடி நடித்துள்ள பம்பர் திரைப்படம் நேற்று வெளியானது.

அறிமுக இயக்குநர் செல்வகுமார் இயக்கியுள்ள இந்தப் படத்திற்கு ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்கள் கிடைத்துள்ளன.

மினிமம் பட்ஜெட்டில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள இப்படத்திற்கு ப்ளு சட்டை மாறன் விமர்சனம் செய்துள்ளார்.

பம்பர் படத்தின் பாசிட்டிவ், நெகட்டிவ் அம்சங்களை குறிப்பிட்டுள்ள ப்ளு சட்டை மாறன் விமர்சனம் இதோ.

 Bumper Blue Sattai Review: Blue Shirt Marans review of Vetri-starrer Bumper

பம்பர் படத்தின் ப்ளூ சட்டை மாறன் விமர்சனம்:வேதா பிக்சர்ஸ் தயாரிப்பில் செல்வகுமார் இயக்கியுள்ள திரைப்படம் பம்பர். பம்பர் மூலம் இயக்குநராக அறிமுகமாகியுள்ள செல்வகுமார், முதல் படத்திலேயே சமூகத்திற்கான ஒரு நேர்மையான படைப்பை கொடுத்துள்ளதாக விமர்சகர்கள் பாராட்டி வருகின்றனர். இப்படத்தில் வெற்றி, பிக் பாஸ் ஷிவானி, ஹரீஷ் பெரடி ஆகியோர் நடித்துள்ளனர்.

இந்நிலையில், பம்பர் திரைப்படம் குறித்து விமர்சனம் செய்துள்ள ப்ளூ சட்டை மாறன், வழக்கம் போல தனது ட்ரோல்களுக்கு பஞ்சமில்லாமல் கலாய்த்துள்ளார். படத்தின் கதை படி கிரிமினல் குற்றங்களில் ஈடுபடும் ஹீரோ வெற்றி, அதிலிருந்து தப்பிக்க சபரி மலைக்கு மாலை போட்டு அங்கு சென்றுவிடுகிறார். அப்போது அவர் வாங்கும் லாட்டரி சீட்டை நம்பிக்கையில்லாமல் சபரி மலையிலேயே வீசிவிட, அது ஹரிஷ் பெரடியின் கைகளில் கிடைக்கிறது.

அதன்பிறகு அந்த லாட்டரியில் 10 கோடி பம்பர் அடிக்க, இஸ்லாமியரான ஹரிஷ் பெரடி அதில் நேர்மையாக ஹீரோ வெற்றியிடம் ஒப்படைக்க நினைக்கிறார். இறுதியில் லாட்டரியில் அடித்த 10 கோடி பம்பர் ஹீரோ வெற்றிக்கு கிடைத்ததா இல்லையா என்பதுதான் கதை. இந்த கதையை ரொம்பவே எமோஷனலாக சொல்லியிருந்தால் படம் சூப்பராக வந்திருக்கும். ஆனால், முக்கியமான ரெண்டு கேரக்டர்களும் பேசாமலேயே கதையை நகர்த்தியது செம்ம போரிங் என்றுள்ளார்.

 Bumper Blue Sattai Review: Blue Shirt Marans review of Vetri-starrer Bumper

அதேபோல், லாஜிக்காக பல இடங்களிலும் பம்பர் படம் சொதப்பி இருப்பதாகவும் ப்ளூ சட்டை மாறன் விமர்சித்துள்ளார். பணத்துக்காக எதையும் செய்யும் ஹீரோவும், அறத்துடன் செயல்பட வேண்டும் என்ற இஸ்லாமியரான ஹரீஷ் பெரடியின் கேரக்டரும் இன்னும் சரியாக வடிவமைத்து இருந்தால் நன்றாக இருக்கும் எனவும் அவர் கூறியுள்ளார். முக்கியமாக கதையின் நடுவே தேவையில்லாத ஒரு கேரக்டரை விட்டு மொத்த படத்தையும் கெடுத்துவிட்டார்கள் எனவும் ப்ளூ சட்டை மாறன் கூறியுள்ளார்.

ஆனாலும் பம்பர் திரைப்படம் முக்கியமானது எனவும், கடைசியாக வந்த காட்டு மொக்கை படங்களுக்கு நடுவில் இதை கண்டிப்பாக பார்க்கலாம் எனவும் ப்ளூ சட்டை மாறன் விமர்சனம் செய்துள்ளார். இந்த வாரம் வெளியான படங்களில் பம்பர் வரவேற்பைப் பெற்றுள்ளதால், ரசிகர்களும் இப்படத்தைப் பார்க்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X