பும்ராவுக்கு இருக்கும் பிரச்சனை போதாது என்று இது வேறா?
சென்னை: ஐஸ்ப்ரீத் பும்ரா அனுபமா பரமேஸ்வரனை ட்விட்டரில் பின்தொடர்வதை நிறுத்தியது குறித்து வேறு விதமாக பேச்சு கிளம்பியுள்ளது.
கிரிக்கெட் வீரர் ஜஸ்ப்ரீத் பும்ரா ட்விட்டரில் நடிகை அனுபமா பரமேஸ்வரனை பின்தொடர்ந்தார். அவர் ட்விட்டரில் பின்தொடர்ந்த ஒரே நடிகை அனுபமா தான். மேலும் அனுபமா போட்ட ட்வீட்டுகளை எல்லாம் லைக் செய்து வந்தார்.
பதிலுக்கு அனுபமா பும்ராவின் ட்வீட்டுகளை ரீட்வீட் செய்து வந்தார். இதையடுத்து அவர்களுக்கு இடையே காதல் என்று பேச்சு கிளம்பியது.

அனுபமா
பும்ராவை காதலிக்கவில்லை. அவர் ஒரு கிரிக்கெட் வீரர் என்பதை தாண்டி எனக்கு அவரை தனிப்பட்ட முறையில் தெரியாது என்று அனுபமா பரமேஸ்வரன் விளக்கம் அளித்தார். பும்ராவோ அனுபமாவை ட்விட்டரில் பின்தொடர்வதை நிறுத்திவிட்டார். எல்லா பேச்சுக்கும் இது தானே காரணம் என்று அவர் இப்படி செய்துவிட்டார்.

பும்ரா
பும்ரா அனுபமாவை ட்விட்டரில் பின்தொடர்வதை நிறுத்தியதை பார்த்த நெட்டிசன்களோ அவர்களுக்கு இடையே பிரச்சனை என்று புதிதாக கிளப்பிவிட்டுள்ளனர். பும்ராவுக்கு அனுபமா மீது கோபம் அதனால் தான் இப்படி செய்துவிட்டார். அனுபமா இன்னும் பும்ராவை ட்விட்டரில் பின்தொடரத் தான் செய்கிறார். அப்படி என்றால் அவருக்கு கோபம் இல்லை என்று பேசுகிறார்கள்.

நடிகை
பும்ராவை தனிப்பட்ட முறையில் தெரியாது, அவருடன் காதலும் இல்லை, ஒன்றும் இல்லை என்று அனுபமா தெளிவாக தெரிவித்துவிட்டார். அப்படி இருந்தும் அவர் பேச்சை நம்பாமல் தொடர்ந்து பும்ராவை வைத்து அவரை கிண்டல் செய்து கொண்டிருக்கிறார்கள் நெட்டிசன்கள். ஒரு பிரபலத்தின் ட்வீட்டுகளை ரீட்வீட் செய்தது பெரிய குற்றமாப்பா?
பாவம்
முன்னதாக அனுபமா போட்டோஷூட்டின்போது எடுத்த புகைப்படத்தை ட்விட்டரில் போட, பும்ரா உலகக் கோப்பையை மனதில் வைத்து ட்வீட் போட நெட்டிசன்களோ இரண்டையும் கோர்த்து மீம்ஸ் போட்டு கிண்டல் செய்தனர். என்ன செய்தாலும் இப்படி பேசினால் அவர்கள் தான் என்ன பண்ணுவார்கள் பாவம். அனுபமா அவரின் படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். பும்ரா உலகக் கோப்பை போட்டிகளில் பிசியாக இருந்தார். இந்நிலையில் இவ்வளவு பேச்சு கிளம்பியுள்ளது. அனுபமா ட்விட்டர் பக்கம் வந்தாலே அவரிடம் பும்ரா பற்றி தான் கேள்வி எழுப்புகிறார்கள்.


Click it and Unblock the Notifications











