twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    தீ காயத்திலிருந்து மீண்டெழுந்த ஃபீனிக்ஸ் பெண்கள்... காஸ்மோக்ளிட்ஸ் விருது வழங்கினார் நடிகை ரோகிணி!

    By Shankar
    |

    சென்னை: தீ காயங்களால் பாதிக்கப்பட்ட 8 பெண்களுக்கு 'பீனிக்ஸ் க்ளிட்ஸ்' விருது வழங்கப்பட்டது. இவ்விருதினை நடிகையும், இயக்குநருமான ரோகிணி வழங்கினார்.

    பிரபல பிலாஸ்டிக் சர்ஜரி மற்றும் உடல் எடை குறைப்பு மையமான 'சென்னை பிளாஸ்டிக் சர்ஜரி' (Chennai Plastic Surgery) 'காஸ்மோக்ளிட்ஸ் விருதுகள்' (Cosmoglitz Awards) என்ற தலைப்பில் ஒவ்வொரு ஆண்டும் விருதுகள் வழங்கி வருகின்றது. 3ஆம் ஆண்டான இவ்வாண்டுக்கான விருது வழங்கும் விழா சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது.

    ஃபீனிக்ஸ் பெண்கள்

    ஃபீனிக்ஸ் பெண்கள்

    இதில் விருது பெற்ற 8 பெண்களும் முறையான பயிற்சி பெற்று சென்னை ராயபேட்டையில் உள்ள ரைட்டர்ஸ் கபேவில் பணிபுரிகிறார்கள். தங்கள் முகத்தில் ஏற்பட்ட தீ காயத்தால் பலரால் புறக்கணிப்பட்ட இவர்கள், அனைத்து தடைகளையும் எதிர்த்துப் போராடி, தற்போது சமூகத்தில் உயர்ந்துள்ளனர். பிரியதர்ஷினி, அஸ்மா, மாரியம்மாள், தமிழ்செல்வி, பரிமளா, புனிதவள்ளி, சத்யா, கோமலா என்ற இந்த 8 பெண்களை கவுரப்படுத்தும் விதமாக பீனிக்ஸ் க்ளிட்ஸ் விருது வழங்கப்பட்டது.

    50 கிலோ குறைப்பு

    50 கிலோ குறைப்பு

    அதேபோல், 50 வயதில் தனது உடல் எடையில் 50 கிலோவை குறைத்து சாதித்த சென்னையைச் சேர்ந்த பெண்மணி சுஜாதா மோகனுக்கு ‘அவதார் க்ளிட்ஸ்' விருது வழங்கப்பட்டது. இவர், எந்தவித மருந்தோ மாத்திரையோ பயன்படுத்தாமல், அறுவை சிகிச்சை செய்துக்கொள்ளாமல், தனது உடல் எடையை குறைத்துள்ளார். இவரது செயலை ஊக்குவிக்கும் நோக்கத்தில், சென்னை பிளாஸ்டிக் சர்ஜரி இவருக்கு இவ்விருதை வழங்கி கவுரப்படுத்தியது.

    சிறப்பு விருதுகள்

    சிறப்பு விருதுகள்

    மேலும், மிஸ்டர் கிளிட்ஸ் என்ற விருது மாடல் அபி பிரசாத்துக்கும், மிஸ் க்ளிட்ஸ் விருது மாடல் அழகி மீரா மிதுனுக்கும் வழங்கப்பட்டது. மிஸ்சஸ் க்ளிட்ஸ் விருது புனிதா கார்த்திக்குக்கும், மிஸ்டர் பிரஸ் பேஸ் (Fresh Face) பல்கிட் பஜோரியாவுக்கும், மிஸ் பிரஸ் பேஸ் (Fresh Face) ரேஸ்மா நம்பியார்க்கும் வழங்கப்பட்டது.

    கருப்பு ஒரு விஷயமல்ல

    கருப்பு ஒரு விஷயமல்ல

    இந்த ஆண்டு விருது வழங்கும் விழாவிற்கு முன்பாக 'பேர் இஸ் நாட் ஆல்வேய்ஸ் லவ்லி' (Fair is not always lovely) மற்றும் 'பாடி சேமிங் & இமேஜினெட் அக்லினஸ் சிண்ட்ரோம்' (Body Shaming & Imagined Ugliness Syndrome) என்ற தலைப்பில் கருத்தரங்கு நடைபெற்றது.

    அதாவது, கருப்பு மற்றும் மாநிறமாக இருப்பவர்கள் தங்களது வண்ணத்தை மாற்ற பல்வேறு நடவடிக்கையை மேற்கொள்கிறார்கள். அப்படி செய்யக்கூடாது என்பது குறித்தும், அதேபோல், நமது உடல் எடை மற்றும் முக தோற்றம் உள்ளிட்டவையை வைத்து யாராவது கேலி கிண்டல் செய்தால், அதை கண்டுகொள்ளாமல் இருப்பது, உள்ளிட்டவையை குறித்து இந்த கருத்தரங்கில் தெளிவாக விவாதிக்கப்பட்டது.

    இந்த கருத்தரங்கில், சமூக ஆர்வலர்கள், பிளாஸ்டிக் சர்ஜரி மருத்துவர்கள், மனநல மருத்துவர்கள், விளையாட்டு ஊட்டச்சத்து நிபுணர் மற்றும் உடல் எடை பராமரிப்பு மருத்துவர்கள் மற்றும் பேஷன் டிசைனர் ஆகியோர் கலந்துக்கொண்டார்கள்.

    லைப்போசக்ஷன்

    லைப்போசக்ஷன்

    மேலும், சுனிதா ராஜ் எழுதிய ‘லிப்போசக்ஸன் - தி பிக் ஃபேட் ஸ்டோரி' (Liposuction - The Big Fat Story) என்ற புத்தகம் வெளியிடப்பட்டது. இது உடலில் உள்ள தேவையில்லாத கொழுப்புகள் பற்றியும், அவை எதனால் ஏற்படுகிறது மற்றும் அவற்றை கரைக்கும் யுக்தி உள்ளிட்ட தகவல்களை கொண்ட புத்தகமாகும். இந்த புத்தகத்தை இந்தியாவின் மூத்த மற்றும் பிரபல பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நிபுணர் பேராசிரியர். ஆர்.வெங்கடசுவாமி வெளியிட்டார். இந்திய பிளாஸ்டிக் சர்ஜரி துறையின் முன்னோடியான இவர் தான் டாக்டர் கார்த்திக் ராமின் குரு என்பது குறிப்பிடத்தக்கது.

    டாக்டர் கார்த்திக் ராம்

    டாக்டர் கார்த்திக் ராம்

    சென்னை பிளாஸ்டிக் சர்ஜரி மருத்துவமனையின் நிறுவனர் டாக்டர் கார்த்திக் ராம் நிகழ்ச்சியில் பேசும் போது, "சென்னை பிளாஸ்டிக் சர்ஜரி மருத்துவமனை உடல் எடை பருமன், முடி உதிர்தல், பெண்கள் உடலில் திடீர் மாற்றம் போன்றவற்றுக்கு சிறப்பான முறையில் தீர்வு கண்டு வருகிறது. அத்துடன் சமூகத்தில் மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாகவும், உந்துதலாகவும் இருப்பவர்களை கவுரவிக்கும் விதத்தில் ‘காஸ்மோ க்ளிட்ஸ்' விருதுகளை வழங்கி வருகிறோம். இந்த ஆண்டு தீ காயங்களினால் பாதிக்கப்பட்ட 8 பெண்களுக்கு விருதுகள் வழங்கியதைப் போல, அடுத்த ஆண்டு திருநங்கைகளுக்கு உதவும் வகையில், அவர்களுக்கும் விருதுகள் வழங்குவதோடு, அவர்கள் பிரச்சினைகளை தீர்ப்பதற்கான கலந்துரையாடல் நிகழ்வை நடத்தவும் திட்டமிட்டுள்ளோம்," என்றார்.

    English summary
    One of the renowned Cosmetic Surgery and Weight Loss centres in the city, ‘Chennai Plastic Surgery’ hosts the Cosmoglitz Awards annually. The 3rd edition was held in a grand manner at Chennai recently.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X