"வயிறு எரியுது சார்"... இந்த நியூஸை படிச்சா உங்களுக்கும் தாறுமாறா எரியும் பாஸ்..!
சென்னை தமிழ் சினிமாவில் எப்போதாவது அத்தி பூத்தாற் போல சில சுமார் ஸ்டார்கள் வந்து பேஸ்புக்வாசிகளிடமும், கிண்டல்காரர்களிடமும் செமத்தியாக வாங்கிக் கட்டிக் கொண்டு போவார்கள்.
ஆனால் தமிழ் சினிமாவைத் தாண்டி சற்று வெளியில் எட்டிப் பார்த்தால் ஏகப்பட்ட சுமார் மூஞ்சிக் குமார்கள கோட் சூட் போட்டுக் கொண்டு கூலர் அணிந்தபடி சற்றும் கூச்ச நாச்சமில்லாமல் அலைவதைக் காணலாம்..
அப்படி வாக்கிங் போய்க் கொண்டிருக்கும் ஒருவரைத்தான் இப்போது பிடித்துக் கொண்டு வந்து உங்களுக்காக களம் இறக்கியுள்ளோம்.. படித்துப் பாருங்கள்.

பர்னிங் ஸ்டார்
இந்த ஸ்டாருக்குப் பட்டப் பெயரே பயங்கரமாக இருக்கிறது. அதாவது இவருக்கு பர்னிங் ஸ்டார் என்றே பட்டம் சூட்டி விட்டனர் அவருக்கும் இருக்கும் சில ரசிக மக்காஸ்...

பவர் ஸ்டாரை விட செம பவர்
இவருக்கு பவர் ஸ்டாரை விட செம பவர் இருக்கிறது. முகத்தில் அப்பி அடித்திருக்கிற பவுடரில். எத்தனை டப்பாவை வாங்கிக் கொட்டிக் கவிழ்த்து மூஞ்சியை அதில் போட்டு முக்கி எடுத்தாரோ என்று தெரியவில்லை.

'ஒன்னுக்கு' ஒன்னு சம்பந்தமே இல்லையே.. பாவா?!?
இந்த பர்னிங் ஸ்டாரின் நிஜப் பெயர் என்ன தெரியுமோ... சம்பூர்னேஷ் பாபு.. எஸ்.. சார், தெலுங்கு நடிகரேதான். ஆந்திராவில் இப்போது தெலுங்கானா அலையைக் கூட மக்கள் ஓரமாக போட்டு விட்டு பாபு அலைக்குள் மாட்டிக் கொண்ட முழிக்கிறார்கள். அப்படி ஒரே பேமஸோ போமஸ் பாபு காரு. சரி இவர் படத்தின் பெயர் தெரியுமா.. அதாவது ஹ்ருத்ய கலயம் என்பதுதான் பெயர். இதற்கு அர்த்தம்.. இருதயமும், சிறுநீரகமும் என்று பொருளாம்...

ஸ்டீவ் ஷங்கர்...
அட. பாபுவை விடுங்க பாஸ்.. படத்தோட டைரடக்கர் அதுக்கு மேல டெர்ரரரா இருக்கார். இவரோட ஒரிஜினல் பெயர் ராஜேஷாம். ஆனால் படத்துக்கு இவர் வச்சுக்கிட்ட பெயர் ஸ்டீவ் ஷங்கராம். அதாவது நம்ம ஊரு ஷங்கர் பெயரையும், ஹாலிவுட்டின் ஸ்டீவன் ஸ்பீ்ல்பெர்க் பெயரிலிருந்து பாதியையும் உருவி இப்படி உருமாறி கலக்கியுள்ளார்.

படம் முழுக்க வசன வாந்தி..
இந்தப் படத்தில் வரும் பன்ச் வசனங்கள்தான் பாபுவை விடவும், ஸ்டீவை விடவும் மகா டெரராக இருக்கிறது. அப்படி ஒரு அனல்.. அக்னிக் கனல்.. அந்தக் காலத்து இதுதாண்டா போலீஸ் ரேஞ்சுக்கு பக்கம் பக்கமாக, பக்கா பக்காவாக வசன வாந்தி எடுத்து நாறடித்துள்ளனர். இதனால்தான் தியேட்டரில் கூட்டம் சேராமல் குப்பை சேர்ந்து, படத்தை ரிலீஸா சிலநாட்களிலேயே தியேட்டர்களை விட்டு தூக்கி விட்டார்களாம்.

முடியலை.. பாஸ்.. விட்ருங்க
அதை விட இவர் தனது உடம்பை வளைக்க முடியாமல் வளைத்து ஜம்ப் செய்தும், வராத உணர்ச்சியை வர வைக்க கன்னத்து தசைகளை கஷ்டப்பட்டு நெளித்து வளைத்தும், கண்களை உருட்டியும், உடம்பு குலுங்க குலுங்க ஓடி வந்தும் படம் முழுக்க பயங்கரமாக நடித்துள்ளார்.

ராஜகுமாரன் எம்புட்டோ மேல்...
இவரது நடிப்பையும், அதன் துடிப்பையும் பார்க்கும்போது நம்ம ஊர் பவர் ஸ்டார், சோலார் ஸ்டார் எல்லாம் எவ்வளவோ மேல்டா சாமி என்று சலாம் போட்டு வணங்கத் தோன்றுகிறது.

எம்புட்டு அடிச்சாலும்.. சாலப் பாகுந்தி நைனா....!
ஆனால் மனிதர் எவ்வளவுதான் விமர்சித்தாலும் அதை கண்டு கொள்வதே இல்லை. ரொம்ப நன்றி சார் என்று கூறி சிரித்தபடி ஏற்றுக் கொள்கிறார் அத்தனை திட்டுக்களையும்....
மொழி வேறாக இருந்தாலும்.. அவஸ்தைகள் எல்லா இடத்திலும் ஒன்றுதான் போலும்.. இப்ப சொல்லுங்க உங்களுக்கு வயிறு பர்னிங் ஆகுதுதானே....


Click it and Unblock the Notifications