பர்ஹானா, புர்கா படத்திற்கு சிக்கல்? எதிர்க்கும் இஸ்லாமிய அமைப்புகள்.. என்ன செய்யப்போகிறது படக்குழு!

சென்னை : பர்ஹானா மற்றும் புர்கா படத்திற்கு தடை விதிக்கவேண்டும் என இஸ்லாமிய அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றனர்.

சர்ஜுன் இயக்கத்தில் மோகன் தயாரிப்பில் கலையரசன், மிர்னா, ஜிஎம் குமார் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் புர்கா.

இப்படம் கடந்த 7 ஆம் தேதி நேரடியாக ஆஹா ஓடிடி தளத்தில் வெளியானது.

Burqa and farhana oppose muslims party

ஓடிடியில் வெளியான புர்கா : புர்கா திரைப்படம் இணையத்தில் வெளியானதில் இருந்தே பிரச்சனைகளும் தலைதூக்க ஆரம்பித்து விட்டன. திருமணமான ஒரே வாரத்தில் கணவனை இழந்த பெண் இத்தா என் சம்பிரதாயத்தை கடைப்பிடிக்கிறாள். அதாவது கணவை இழந்த பெண் நான்கு மாதங்கள் வெளியே வராமல், ஆண்களின் கண்ணில் படாமல் இத்தா விதிமுயை பின்பற்ற வேண்டும்.

விவாதத்திற்குள்ளான வசனம் : இந்த நேரத்தில் ஊரில் கலவரம் ஏற்பட காயத்துடன் சூர்யா என்ற இளைஞரை சந்திக்கிறார். அவர்களுக்கு இடையே நடக்கும் நீண்ட நெடிய விவாதத்தில், ஹிஜாப் தொடர்பான சில விமர்சனங்கள். மற்றும் இஸ்லாமிய முறைகள் தொடர்பான சில வசனங்கள் இடம் பெற்று இருந்தால் இப்படத்திற்கு கண்டனங்கள் குவிந்து வருகின்றன.

ஃபர்ஹானா : அதேபோல, நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்திருக்கும் திரைப்படம் ஃபர்ஹானா. இந்தப் படத்தில் தன்னுடைய, குழந்தைகளுக்காக மத கட்டுப்பாடுகளை கடந்து வேலைக்குச் செல்லும் ஒரு பெண்ணின் வாழ்க்கை பின்னணியை படமாக்கியுள்ளனர். இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியான நிலையில் மே 12ந் தேதி தியேட்டரில் வெளியாக உள்ளது.

Burqa and farhana oppose muslims party

இஸ்லாமிய அமைப்புகள் கண்டனம் : இந்நிலையில் பர்ஹானா மற்றும் புர்கா ஆகிய இரண்டு படங்களையும் உடனடியாக தடை செய்யவேண்டும் என்று இஸ்லாமிய அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றனர். இது குறித்து இந்திய தேசிய லீக் கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் சமீபத்தில் ஓடிடியில் வெளியான புர்கா படமும் இனிமேல் திரைக்கு வர உள்ள நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் ஃபர்ஹானா என்ற திரைப்படமும் இஸ்லமிய பண்பாட்டுக்கும் கலாச்சாரத்திற்கும் எதிராகவும் முஸ்லிம் பெண்களை கொச்சைப்படுத்தும் உள்ளது.

கைது செய்ய வேண்டும் : ஓடிடியில் வெளியான புர்கா படத்தை ஓடிடி தளத்திலிருந்து நீக்க வேண்டும் மற்றும் இயக்குநர் சர்ஜுன் கே எம் அவர்களை கைது செய்ய வேண்டும். அதே போன்று திரைக்கு வர உள்ள ஃபர்ஹானா படத்தையும் தடை செய் வேண்டும் என்று இந்திய தேசிய லீக் கட்சி வலியுறுத்தி உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X