விஜய் போட்ட உத்தரவு.. அடக்கி வாசிக்க ஆரம்பித்த மக்கள் இயக்கம்.. இப்போ பார்க்கவே நல்லா இருக்கே!

சென்னை: மிக்ஜாம் புயலில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தொடர்ந்து நடிகர் விஜய்யின் விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்தவர்கள் தங்களால் இயன்ற உதவிகளை செய்து வருகின்றனர்.

நடிகர் விஜய்யும் களத்தில் இறங்கி தனது மக்கள் இயக்கத்தினரை வேலை பார்க்க சொன்ன நிலையில், பரபரப்பாக அவர்கள் செய்யும் பணிகளை எடுத்து சோஷியல் மீடியாவில் போட ஆரம்பித்தனர்.

Bussy Anand and VMI associates corrected their mistakes after Vijay order?

ஆனால், விஜய்யின் போட்டோவை தூக்கிக் கொண்டு வயதானவர்களுக்கு சோறு போட்டதும், குப்பை இருக்கும் இடத்திலேயே குப்பையை மேலே அள்ளி கொட்டியது போன்ற வீடியோக்கள் வெளியான நிலையில், கடும் கண்டனங்களும் ட்ரோல்களும் குவிந்தன.

விஜய் போட்ட உத்தரவு: சோஷியல் மீடியாவில் ஏகப்பட்ட பேர் ட்ரோல் செய்யப்பட்ட நிலையில், யூடியூபிலும் பல பிரபலங்கள் வீடியோவே போட்டு வெளுத்து வாங்க ஆரம்பித்து விட்டனர். இதையெல்லாம் கவனிக்கத் தொடங்கிய நடிகர் விஜய் எதுக்கு ஓவரா பில்டப் பண்றீங்க, எந்த ஸ்டிக்கரும் விளம்பரமும் இல்லாமல் எளிமையான முறையில் நல்லது செய்யுங்க, அது போதும், மக்களுக்கு உதவினால் போதும் உங்களை பப்ளிசிட்டி பண்ண சொல்லல என கடுமையாக கண்டித்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

வாட் எ சேஞ்ச் ஓவர்: தளபதி விஜய் அவர்களின் சொல்லுக்கிணங்க, #கைகோர்ப்போம்_துயர்துடைப்போம்.! #மத்தியசென்னை மாவட்ட வில்லிவாக்கம் மேற்கு பகுதி தலைமை தளபதி விஜய் மக்கள் இயக்கம் @TVMIoffl சார்பாக, வில்லிவாக்கம் சிட்கோ நகர் பகுதியில் #CycloneMichaung புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்கள் மற்றும் உணவு வழங்கப்பட்டது.! இந்நிகழ்ச்சியில் வில்லிவாக்கம் மேற்கு பகுதி தலைவர், பகுதி, கிளை மற்றும் மக்கள் இயக்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.” என புஸ்ஸி ஆனந்த் பதிவிட்டு வரும் எந்த லேட்டஸ்ட் புகைப்படங்களிலும் கவரில் கூட ஸ்டிக்கர் இல்லாமல் வெள்ளையாக காட்சி அளிக்கிறது.

தூய்மை பணியாளர்களுக்கு உதவி: ”தளபதி விஜய் அண்ணா சொல்லுக்கிணங்க., அகில இந்திய பொதுச் செயலாளர் அண்ணன் புஸ்ஸி N.ஆனந்த் ExMLA அவர்களின் வழிகாட்டுதல்படி.., "மிக்ஜாம்" வெள்ள பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளில் முதன்மையாக களத்தில் நின்று நாம் வசிக்கும் பகுதியை தூய்மை செய்த வருமுன் காக்கும் தெய்வங்களாக இருக்கும்” என தூய்மை பணியாளர்களுக்கான நிவாரண உதவிகளை செய்த வீடியோவை தற்போது ஈசிஆர் சரவணன் வெளியிட்டுள்ளார். குறிப்பாக அந்த போட்டோ தூக்கி மேட்டர் இல்லாததே சிறப்பு என விஜய் ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X