தளபதி ஊர்ல இல்ல.. சட்டென சட்டை பாக்கெட்டில் கைவிட்டு காசு எடுத்து கொடுத்து உதவிய புஸ்ஸி ஆனந்த்!
சென்னை: விஜய் மக்கள் இயக்கம் சார்பாக அதன் ஐடி விங் ஆலோசனை கூட்டம் இன்று பனையூரில் மதிய உணவு விருந்துடன் நடைபெற்றது. நடிகர் விஜய் வெளிநாட்டில் உள்ள நிலையில், இன்றைய கூட்டத்தில் அவர் பங்கேற்கவில்லை.
சமூக வலைதளங்களில் விஜய் ரசிகர்கள் மற்றும் விஜய் மக்கள் உறுப்பினர் யாரும் யாரையும் விமர்சித்தோ கீழ்த்தரமாக ட்ரோல் செய்தோ பதிவுகளை போடக் கூடாது என விஜய் மக்கள் இயக்கம் சார்பாக புஸ்ஸி ஆனந்த் அறிவுறுத்தி உள்ளார்.

மக்கள் இயக்க நிர்வாகிகளுக்கு உணவு பரிமாறிக் கொண்டிருந்த புஸ்ஸி ஆனந்திடம் வயதான தம்பதியினர் உதவி கேட்டு வர, உடனடியாக சட்டை பாக்கெட்டில் இருந்த பணத்தை எடுத்துக் கொடுத்து மாத மாதம் உங்கள் வயிற்றுப்பசியை போக்க தேவையான உதவிகளை செய்வோம் என்று உறுதியளித்த வீடியோ சமூக வலைதளங்களில் தீயாக பரவி வருகிறது.
விஜய் இல்லாமல் ஆலோசனை கூட்டம்: அரசியலில் கூடிய விரைவில் களமிறங்க என்ன என்ன செய்ய வேண்டுமோ அத்தனை விஷயங்களையும் விஜய் மக்கள் இயக்கம் ஒவ்வொன்றாக செய்து வருகிறது. இன்று அந்த இயக்கத்தில் ஐடி விங் நிர்வாகிகளுக்கான ஆலோசனை கூட்டம் சென்னையில் நடைபெற்றது.
ஆனால், இந்த நிகழ்ச்சி நடிகர் விஜய் கலந்து கொள்ளவில்லை. வெளிநாட்டில் நடிகர் விஜய் உள்ளதாக புஸ்ஸி ஆனந்தே தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
விஜய் ரசிகர்களுக்கு எச்சரிக்கை: சமூக வலைதளங்களில் விஜய் ரசிகர்கள் தொடர்ந்து அஜித் மற்றும் ரஜினி ரசிகர்களுடன் படுமோசமான சண்டையில் ஈடுபட்டு வந்தனர். ஜெயிலர் படம் ரிலீஸ் ஆன நிலையில், நடிகர் ரஜினிகாந்த் பற்றி ஏகப்பட்ட நெகட்டிவிட்டியை பரப்பி வந்தனர்.
இந்நிலையில், விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் யாரும் சமூக வலைதளங்களில் மற்ற நடிகர்களையோ அரசியல் தலைவர்களையோ அவதூறாக பேசக் கூடாது என்றும் சாதி, மதம் கடந்த சிந்தனையுடன் செயல்பட வேண்டும் என புஸ்ஸி ஆனந்த் அறிவித்துள்ளார். மீறுவோர் மீது விஜய் மக்கள் இயக்கம் சார்பாக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளார்.

காசு கொடுத்து உதவிய புஸ்ஸி ஆனந்த்: ஆலோசனை கூட்டத்திற்கு வந்திருந்தவர்களுக்கு உணவு பரிமாறிக் கொண்டிருந்த புஸ்ஸி ஆனந்திடம் வயதான தம்பதியினர் வந்து தங்களுக்கு வேலை வாய்ப்பு குறைந்து விட்டதும், வறுமையில் வாடுவதாகவும் உதவி கேட்டனர்.
உடனடியாக தனது சட்டை பாக்கெட்டில் இருந்த சில 500 ரூபாய் பணத்தை எடுத்து அவர்களுக்கு கொடுத்த புஸ்ஸி ஆனந்த், உங்கள் விவரங்களை கொடுத்துட்டு போங்க, தளபதி ஊர்ல இல்லை, அவர் வந்தவுடன் அவரது பார்வைக்கு கொண்டு சென்று, மாத மாதம் உங்களுக்கு தேவையான உதவிகளை செய்வோம் என்று கூறிய வீடியோ சோஷியல் மீடியாவில் டிரெண்டாகி வருகிறது.


Click it and Unblock the Notifications











