தளபதி 68, தளபதி 69, தலைவர் 26.. விஜய்யின் லைன் அப்பை அடுக்கிய புஸ்ஸி ஆனந்த்.. அதை நோட் பண்ணிங்களா?
சென்னை: நடிகர் விஜய் ட்விட்டரில் கட்சியின் பெயரை அறிவித்து விட்டு வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம் படத்தின் சூட்டிங்கில் பிசியாகி உள்ளார். விரைவில் தி கோட் படத்தை முடித்து விட்டு அடுத்து தளபதி 69 படத்திலும் நடிக்க ரெடியாகி வருகிறார் விஜய். அதே நேரத்தில் அரசியல் பணிகளை புஸ்ஸி ஆனந்த் தலைமையில் தினமும் பார்க்க விஜய் உத்தரவிட்டு இருக்கிறார்.
அதன் காரணமாக தினமும் ஒவ்வொரு மாவட்ட உறுப்பினர்களையும் அழைத்து பனையூரில் புஸ்ஸி ஆனந்த் ரகசியமாக மீட்டிங் போட்டு வருகிறார். கட்சியை பலப்படுத்தும் விதமாக புஸ்ஸி ஆனந்த் பேசிய வீடியோ காட்சிகள் கூட இணையத்தில் கசிந்து ட்ரோல் மெட்டீரியலாக மாறியுள்ளது. மேலும், கட்சியை தொடங்குவது தொண்டு செய்ய அல்ல என்றும் பதவி ஆசைக்காகத்தான் என்பது குறித்து புஸ்ஸி ஆனந்த் பேசியிருப்பது விஜய் ரசிகர்களையே அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

ஸ்ட்ரெயிட்டா சிஎம் தான்: எம்ஜிஆர் தனியாக அரசியல் கட்சியை ஆரம்பிப்பதற்கு முன்பாகவே காங்கிரஸ், திமுக கட்சிகளில் இணைந்து பணியாற்றினார். அதன் பின்னர் அதிமுகவை ஆரம்பித்து 5 ஆண்டுகள் கட்சி வேலைகளை பார்த்து மக்களை சந்தித்து அவர்களது அன்பையும் நம்பிக்கையும் பெற்ற நிலையில் தான் முதலமைச்சர் ஆனார். ஆனால், 2026ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட உடனே சிஎம் ஆக விஜய் மாறிவிடுவார் என புஸ்ஸி ஆனந்த் பேசியிருப்பது ட்ரோல் செய்யப்பட்டு வருகிறது.
தளபதி 68, 69, தலைவர் 26: மேலும், வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் தளபதி 68 படமான தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தில் நடித்து வருகிறார். அதன் பின்னர் தளபதி 69 படம் இருக்கு, அதன் பின்னர் டைரக்ட்டா தலைவர் 26 தான் 2026ம் ஆண்டு தளபதியில் இருந்து தலைவராக அப்கிரேட் ஆகி முதலமைச்சர் ஆகப்போகிறார் விஜய் என புஸ்ஸி ஆனந்த் அந்த மீட்டிங்கில் பேசியிருக்கிறார்.
அரசு பதவிகள்: கட்சியில் சிறப்பாக செயல்படும் நபர்களை தளபதி எப்போதும் பார்த்துக் கொண்டே இருக்கிறார். கண்டிப்பாக 2026ல் தேர்தலில் போட்டியிட்டு தளபதி முதல்வர் ஆன பிறகு ஊராட்சி, மாநகராட்சி என அனைத்து இடங்களிலும் கட்சியில் இருப்பவர்களுக்கு அரசு பதவிகள் கிடைக்கும் என்றும் புஸ்ஸி ஆனந்த் பேசியுள்ளார். அரசியலுக்கு விஜய் ஆவது மக்கள் தொண்டாற்ற வருவார் என நினைத்தால் பதவி ஆசைக்காகவே அரசியல் கட்சி ஆரம்பித்துள்ளாரா என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











