Don't Miss!
- Technology கைக்கு 2 ஆர்டர்.. அவ்ளோ கம்மி.. AMOLED டிஸ்பிளே.. ப்ளூடூத் காலிங்.. ஹெல்த் டிராக்கர்கள்.. எந்த மாடல்?
- Sports இதுதான் ரியல் ட்விஸ்ட்.. ஓய்வுக்கு பின் சிஎஸ்கே அணியின் முக்கிய பதவிக்கு வரப்போகும் தல தோனி?
- News கர்நாடகா: குமாரசாமி, பிரஜ்வல், டிகே சுரேஷ்.. அதிகாரத்தை கைப்பற்ற முட்டி மோதும் 'கவுடா குடும்பங்கள்'!
- Finance ஜப்பானுக்கு இந்தியா தான் உதயசூரியன்.. கலரே மாறுதே.. சீனாவுக்கு பெரும் இழப்பு..!!
- Automobiles தண்ணீரை சேமிக்க இப்படி ஒரு வழியா? இனி ரயில்களில் 1லிக்கு பதிலாக 500 மிலி தண்ணீர் மட்டும் வழங்க முடிவு!
- Lifestyle கோடை காலத்தில் முட்டை சாப்பிடலாமா? கூடாதா? நிபுணர்கள் சொல்லுவது என்ன?
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
யூடியூப்பில் 262 மில்லியன்.. அசத்தல் சாதனையில் அல்லு அர்ஜுனின் 'புட்ட பொம்மா'.. தமன் செம ஹேப்பி!
சென்னை: தெலுங்கு பாடலான புட்ட பொம்மா, யூடியூப்பில் புதிய சாதனையை படைத்துள்ளது.
Recommended Video
அல்லு அர்ஜுன் ஹீரோவாக நடித்த தெலுங்கு படம், 'அலா வைகுந்தபுரம்லோ'.
இதில், பூஜா ஹெக்டே, ஜெயராம், தபு, நிவேதா பெத்துராஜ், சமுத்திரக்கனி, முரளி சர்மா, ராஜேந்திர பிரசாத், நவ்தீப் உட்பட பலர் நடித்துள்ளனர்.
இந்தி ரீமேக்
த்ரிவிக்ரம் ஶ்ரீனிவாஸ் இயக்கிய இந்தப் படம், சூப்பர் ஹிட் ஆனது. லாக்டவுனுக்கு முன்பு வரை ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடியது. தியேட்டர்களுக்கு ரசிகர்கள் திரும்ப திரும்ப வந்து இந்தப் படத்தைப் பார்த்ததாகக் கூறப்பட்டது. தியேட்டர்கள் திறக்கப்பட்டதும் இந்த படம் மீண்டும் திரையிடப்பட இருக்கிறது. அல்லு அர்ஜூனின் தந்தை அல்லு அரவிந்த் தனது கீதா ஆர்ட்ஸ் மூலம் இதைத் தயாரித்துள்ளார்.
புட்டபொம்மா பாடல்
இந்தப் படம் இந்தியிலும் ரீமேக் ஆக இருக்கிறது. படத்துக்கு தமன் இசை அமைத்துள்ளார். இதன் பாடல்கள் ஏற்கனவே ஹிட்டாகி இருந்த நிலையில், 'புட்ட பொம்மா பாடல் சூப்பர் டூப்பர் ஹிட்டானது. இந்த பாடலுக்கான நடனத்தை ஜானி மாஸ்டர் அமைத்துள்ளார். நடனமும் விஷூவலும் இந்தப் பாடலில் ரிச்சாக இருப்பதால் ரசிகர்கள் அடிக்கடி பார்க்கின்றனர்.
டேவிட் வார்னர்
150 மில்லியன் பார்வையாளர்களை கடந்து கடந்த சில மாதங்களுக்கு முன், இந்தப் பாடல் சாதனைப் படைத்திருந்தது. இதை ஏராளமான ரசிகர்கள் தொடர்ந்து பார்த்து வந்தனர். வருகின்றனர். தெலுங்கு ரசிகர்களை மட்டுமல்லாமல், இந்தி, தமிழ் உள்ளிட்ட மற்ற மொழி ரசிகர்களையும் பாடல் கவர்ந்துள்ளது. இந்தப் பாடலுக்கு ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர், அவர் மனைவி உட்பட பல பிரபலங்கள் டிக் டாக்கில் நடனம் ஆடியிருந்தனர்.
தெலுங்கு பாடல் சாதனை
இந்தி நடிகை ஷில்பா ஷெட்டியும், இந்த பாடலுக்கு டிக் டாக் வீடியோவில் ஆடியிருந்தார். நடிகை திஷா பதானி, இந்தப் பாடலின் நடனத்துக்காக அல்லு அர்ஜுனை பாராட்டி இருந்தார். இந்நிலையில், யூடியூப்பில் அதிகம் பேர் பார்த்து ரசித்த தெலுங்கு பாடலாக, புட்ட பொம்மா சாதனைப் படைத்துள்ளது. இந்தப் பாடல் மொத்தம் 262 மில்லியன் பார்வைகளை கடந்துள்ளது. இதை குறிப்பிட்டுள்ள இசை அமைப்பாளர் தமன், படக்குழுவுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.