அல்லு அர்ஜூனோட 'புட்ட பொம்மா' பாடல்... 4 மில்லியன் லைக்குகளை பெற்று புதிய சாதனை

ஐதராபாத் : அல்லு அர்ஜூனின் அல வைகுந்தபுரமுலு படம் பல சாதனைகளை கடந்துள்ளது.

இந்த படம் அல்லு அர்ஜூனுக்கு அவரது கேரியரில் மிக சிறப்பான திருப்புமுனையை ஏற்படுத்தியுள்ளது.

தமன் இசையில் இந்த படத்தின் அனைத்து பாடல்களும் வரவேற்பை பெற்றுள்ளன. குறிப்பாக படத்தின் புட்ட பொம்மா பாடல் அதிக சாதனைகளை புரிந்துள்ளது.

அல வைகுந்தபுரமுலு படம்

அல வைகுந்தபுரமுலு படம்

அல்லு அர்ஜூனின் நடிப்பு மற்றும் இணை தயாரிப்பில் வெளிவந்து சக்கை போடு போட்ட படம் அல வைகுந்தபுரமுலு. சிறு வயதில் மாற்றப்படும் குழந்தைகளும் அவர்கள் வாழ்க்கை எவ்வாறு மாறுகிறது என்பதுமாக இந்த படத்தின் கதை அமைந்திருக்கும். இந்த படம் தமிழிலும் மொழிமாற்றம் செய்யப்பட்டு நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

4 மில்லியன் லைக்ஸ்

4 மில்லியன் லைக்ஸ்

படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். படத்தின் அனைத்து பாடல்களும் ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ள நிலையில் புட்ட பொம்மா பாடல் அதிக சாதனைகளையும் படைத்துள்ளது. இந்த பாடல் தற்போது யூடியூப் பக்கத்தில் 400 மில்லியன் லைக்ஸ்களை பெற்று சாதனை புரிந்துள்ளது.

இரண்டாவது பாடல்

இரண்டாவது பாடல்

மேலும் முன்னதாக தெலுங்கு படவுலகில் அதிக லைக்குகள் மற்றும் பார்வைகளை பெற்ற முதல் பாடல் என்ற சாதனையையும் இந்த பாடல் பெற்றுள்ளது. மேலும் தென்னிந்தியாவிலேயே அதிக லைக்குகள் மற்றும் பார்வைகளை பெற்றுள்ள இரண்டாவது பாடல் என்ற பெருமையும் இந்த பாடலுக்கு கிடைத்துள்ளது.

சிறப்பான வரவேற்பு

சிறப்பான வரவேற்பு

அர்மான் மாலிக் பாடியுள்ள இந்த பாடலின் ஆசிரியர் ராமஜோகய்யா சாஸ்திரி. த்ரிவிக்ரம் ஸ்ரீநிவாஸ் இயக்கத்தில் வெளிவந்த இந்த படத்தில் அல்லு அர்ஜூனின் ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். கடந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் வெளிவந்த இந்த படம் ரசிகர்களிடையே சிறப்பான வரவேற்பை பெற்றது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X